பேச்சு:நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
 
மொத்தக் கட்டுரையுமே எதையோ பகடி செய்யும் நோக்கில் துவங்கப்பட்டுள்ளது போலத் தெரிகிறது. தமிழ்நாட்டு ஊடகங்களையோ அல்லது கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துவது, பிறமொழிக் கலப்பு, பெயரிடல் மரபு போன்றவை குறித்த அடுத்த பயனரின் நிலைப்பாட்டையோ இவ்வாறு பகடிக் கட்டுரை எழுதி எதிர்கொள்வது என்கிற போர்முறையை விக்கி குமுகம் இதற்கு முன்பும் கடந்து வந்திருக்கலாம். தனது கருத்தின் நியாயத்தைப் போதுமான வலிமையுடன் வெளிப்படுத்திவிட்டதாக பயனர் நிறைவுறும் பட்சத்தில் இக்கட்டுரை கூடிய விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறேன். விக்கி நடை குறித்த சிக்கல்களுக்கு இத்தகைய போர்முறை எவ்விதம் பலனளிக்கும் என்பது புரியவில்லை. இதுபோல இன்னும் சில கட்டுரைகள் துவங்கப்படவே வழிவகுக்கும். அல்லது இவையெல்லாம் விக்கியன்பின்பாற்பட்டு குமுகத்துள் நடக்கும் செல்லச் சண்டைகளா?.[[பயனர்:Paramatamil|Paramatamil]] ([[பயனர் பேச்சு:Paramatamil|பேச்சு]]) 18:33, 8 செப்டம்பர் 2015 (UTC)
 
:: இவ்வாறு தனிநபரைச் சீண்டும் விதமாக கட்டுரை புனைவோருக்கு எல்லாம் நிர்வாகி ந்இலையில் இருப்போர் எச்சரிக்கை விடுவதில்லை. அது போகட்டும், தமிழ் விக்கிக்கு என்றொரு நடைமுறையை வகுத்துள்ளார்கள். அதில் ஆங்கில எழுத்தோ, பிற எழுத்தோ தலைப்பில் சேர்த்து எழுதக் கூடாது என்பதும் ஒரு விதி. ஆக Disturb என்ற சொல் பயன்படுத்தலாகாது. அதை தமிழ் எழுத்துக்கு மாற்றுவது நல்லது. கூடுதல் எழுத்துக்கள் கூடாது என தமிழ் விக்கி எந்தவொரு கட்டுப்பாடையும் விதிக்கவில்லை. அதனால் ஸ் என்ற சொல்லை சேர்த்து எழுதுவது தவறில்லை. நன்னூல் இலக்கணப் படி தான் தமிழ் விக்கியில் கட்டுரை எழுத வேண்டும் என எந்தவொரு விதியும் சேர்க்கப்படவில்லை. நன்னூல் இலக்கணப் படி தான் தமிழ் கட்டுரை எழுத வேண்டும் என்ற விதி சேர்க்கப்பட்டால், டகரம் மொழி முதல் எழுதலாமா, வேண்டாமா என தீர்மானிக்கலாம். நன்னூல் படி தான் தமிழை எழுதுவேன் என அடம்பிடிப்போர் எகர ஒகரக் குறில் உயிர்கள் புள்ளி இட்டு எழுதுவதில்லை என்பதே பெருங்கேள்வியாக இருக்கிறது.
 
தொல்லை வடிவின எல்லா எழுத்தும்; ஆண்டு
எய்தும் எகர ஒகரம், மெய் புள்ளி (நன்னூல்.98)
 
தற்காலத் தமிழ் நடைமுறைக்கு நன்னூலே முற்றுமுழுவதுமான வழிகாட்டியாக கொள்வது இயலாத காரியம். ஆகையால் ஸ் தமிழா ஜ் தமிழா என்றா கேள்வியே இங்கு அர்த்தமற்றவை. பொதுப் பயன்பாட்டில் ஸ், ஜ் எல்லாம் உண்டு, அதை பள்ளியில் படிக்கின்றோம், வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம், ஒருங்குறியில் சேர்க்கப்பட்டுள்ளது, தட்டச்சில் உள்ளது, அதனால் இந்த எழுத்து கூடாது என சொல்வதில் அர்த்தமில்லை. ஸ், ஜ் வேண்டாம் என்போர் தனித் தமிழ் விரும்புவோர் தமது கருத்தை திணிக்கும் தளமாக விக்கிபீடியாவை பயன்படுத்துவது முறையற்ற ஒன்றாகும். ஸ், ஜ் கூடாது என்றால் ஒருங்குறியிலிருந்து நீக்க போராட வேண்டும். அப்படி நீக்கிவிட்டு வாருங்கள், நீங்களோ நானோ ஸ், ஜ் பயன்படுத்தப் போவதில்லை, பயன்படுத்தவும் முடியாது. அதுவரை பொதுவழக்கில் உள்ளதையே பின்பற்றுங்கள். விக்கிபீடியாவின் விதிகளும் அதனைத் தான் வலியுறுத்டுகின்றது. --[[பயனர்:Winnan Tirunallur|விண்ணன்]] ([[பயனர் பேச்சு:Winnan Tirunallur|பேச்சு]]) 00:39, 9 செப்டம்பர் 2015 (UTC)
 
:நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் எனத் தலைப்பை மாற்ற வேண்டும். வேற்று மொழித் திரைப்படங்களின் பெயர்களை அவ்வாறே தலைப்பிடுகிறோம்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 20:31, 8 செப்டம்பர் 2015 (UTC)
Return to "நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்" page.