இக்குடும்பத்தின் வண்ணத்துப்பூச்சிகள் பிற குடும்பங்களைப் போலன்றி நுனியில் கொக்கி போல் வளைந்த உணர்வுக்கொம்புகளைக்[[உணர்வுக்கொம்பு]]களைக் கொண்டிருக்கும். இறக்கைகள் நீளமாகவும் முக்கோணவடிவிலும் கறுப்பாகவும் அடர்நிறமாகவும் அமைந்திருக்கும். ஆங்காங்கே வெள்ளைப்புள்ளிகள், திட்டுகள், கோடுகள் என ஒளிபாயும் குறிகளைக் காணலாம். நெஞ்சுப்பகுதி நீளமாகவும் திடமாகவும் இருக்கும். அடிவயிற்றைக்காட்டிலும் நீளமாகவும் இருக்கலாம். உடல்முழுவதும் அடர்ந்த மெல்லிய செதில்களால் நிறைந்திருக்கும். ஆண்-பெண் பூச்சிகளிடையே தோற்றத்தில் மாறுபாடு இருக்காது. இவற்றின் உறிஞ்சான்கள் நீண்டு குழல்போன்ற மலர்களிலிருந்தும் தேனெடுக்க உதவும். ஆண்-பெண் பால்வேறுபாடு தோற்றத்தில் தெரிவதில்லை.