கூலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கூலி''' என்பது, ஒரு ஊழியரின் [[உழைப்பு]]க்கு ஈடாக [[வேலைகொள்வோர்]] வழங்கும் பண ஈடு அல்லது [[ஊதியம்]] ஆகும். ஊதியம், ஒரு குறித்த வேலையைச் செய்து முடிப்பதற்கான ஒரு நிலையான பணத்தொகை என்ற அடிப்படையில் அல்லது ஒரு குறித்த கால அளவுக்கு (ஒரு மணிநேரம், ஒரு நாள், ஒரு வாரம் போன்றன) இவ்வளவு பணம் என்ற வகையில் அல்லது அளவிடத்தக்க ஒரு வேலையளவுக்கு இவ்வளவு பணம் என்றவாறு கணக்கிடப்படுகின்றது. ஒரு [[வணிகம்|வணிகத்தை]] நடத்துவதில் ஏற்படும் செலவு வகைகளில் கூலியும் ஒன்று.
 
கூலி, சம்பளம் என்பதிலும் வேறானது. [[சம்பளம்]] என்பது கிழமை அல்லது மாதம் போன்ற குறித்த கால இடைவெளியில் ஊழியர் எவ்வளவு மணிநேரம் வேலை செய்தார் என்று கணக்கிடாமல், வேலைகொள்வோர் ஊழியருக்கு வழங்கும் தொகையைக் குறிக்கும். கூலிக்குப் புறம்பாக, கூலித் தொழிலாளர்களுக்கு வேலைகொள்வோர் வழங்கும் பணம்சாரா வசதிகளும், வாடிக்கையாளர் நேரடியாக வழங்கும் ஊக்கப்பணமும் கிடைப்பதுண்டு.
 
[[பகுப்பு:பொருளியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கூலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது