பேச்சு:உளிதவரு கண்டந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 235:
 
:[[தெரிநிலை வினைமுற்று|தெரிநிலை வினையெச்ச]] விகுதி? ஏ வரக்கூடிய சில உதாரணங்கள் தாருங்கள். கண்டந்தெ என எழுதினாலும், கண்டந்தே என்று தான் கன்னடர்கள் பலுக்குகிறார்கள் என்று கன்னடர்களுடன் அதிகமாகப் பழகும் சுந்தர் மேலே கூறியுள்ளார்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:11, 9 செப்டம்பர் 2015 (UTC)
 
:: மீண்டும் முதலிலிருந்தா. சரி தங்களின் மனசமாதானத்திற்காக ஏகார விகுதி கொண்ட வினையெச்சங்களுக்கு சில எடுத்துக்காட்டுக்கள் இதோ உண்ணாமே, நடந்தாமே, செய்தாமே, நட்டாமே, நடவாமே, நில்லாமே, பேசாமே சொல்லிக் கொண்டே போகலாம். ஏகார வினையெச்ச விகுதி எதிர்மறைப் பொருள் தரும். '''( பார்க்க: ஆறுமுகநாவலர் காண்டிகையுரை, உயர்தரக் கட்டுரை இலக்கணம் - மொழிஞயிறு ஞா.தேவநேயப் பாவாணர் )'''.
 
:: தமிழில் ஏகாரம் விகுதியாக வரக் கூடிய சில எடுத்துக் காட்டுக்கள்
 
:: - உம்மைத் தொகை ( நிலனே நீரே - நிலனும் நீரும் ) கண்டந்தே என்றால் இது உம்மைத் தொகையா என்றால் நிச்சயம் இல்லை.
:: - வினையெச்சம் ( உண்ணாமே, நடவாமே ) இந்த வினையெச்சங்கள் எதிர்மறை பொருள் தரும் ஆகையால் கண்டந்தே என்றால் இது எதிர்மறை பொருள் தரும் சொல்லா என்றால் அதுவும் இல்லை.
:: - தேற்றம் தத்தம் பொருள் உணர்த்தும் ( அவனே நின்றான், நீயே நடந்தாய் ) கண்டந்தே என்றால் இது தத்தம் பொருள் உணர்த்தவில்லை, அது படர்க்கை பொருளில் வந்துள்ளது, அதனால் இதுவும் இல்லை.
:: - வினா விகுதி ( “ஈயாயாயினும் இரங்குவே அல்லேம்” (புறம் 209-1) ) வினா பொருளில் ஏகாரம் வரும், ஆனால் கண்டந்தே என்றால் இது வினா சொல்லுமல்ல.
:: - எட்டாம் வேற்றுமை படர்க்கை பெயரெட்டு ( முருகனே வா ) எட்டாம் வேற்றுமை விளி வேற்றுமை, கூப்பிடு பொருளில் மட்டுமே வரும், ஆனால் கண்டந்தே என்றால் இது யாரையும் கூப்பிடவுமில்லை.
 
:: கண்டந்தே என்று தான் கன்னடர்கள் பலுக்குகிறார்கள் என்று கன்னடர்களுடன் அதிகமாகப் பழகும் சுந்தர் மேலே கூறியுள்ளார். அவர் கன்னடர்களோடு பழகுவதைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. என்னுடைய மனைவி வழியினர் அனைவரும் கன்னடத்தையே முதன்மை மொழியாகப் பேசி கருநாடகத்தில் வாழ்ந்து வருபவர்கள். அது மட்டுமின்றி, கன்னட மொழி அடிப்படையை ஓரளவு நானும் கற்றுள்ளேன். ஆகையால், என்னாலும் கன்னட மொழி அறிவு எனக்கும் ஓரளவு உண்டு. இதுவே இந்த சொல் விளிச் சொல்லாக இருந்திருந்தால், அதாவது விளி வேற்றுமையாக இருந்திருந்தால் கன்னட எகரம், தமிழில் ஏகாரமாய் மாற்றுவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை. கௌடரெ என வந்திருந்தால் கௌடரே என மாற்றலாம், சுந்தர் ஒருவேளை இந்த விளிவேற்றுமையை கவனித்துவிட்டு எல்லா இடத்திலும் எகரம் ஏகாரமாகும் என்கிறார் போல. அதே போல எதிர்மறை பொருளைத் தரும் கன்னட எகரம், தமிழில் ஏகாரமாய் மாற்றலாம். ஆனால், இந்த இரண்டும் கண்டந்தெ என்ற சொல்லுக்கு பொருந்தாது.
 
:: பிரபல தமிழ் எழுத்தாளர் இமயம் எழுதிய எங் கதெ என்ற புத்தகம் தமிழில் வெளிவந்துள்ளது. அதில் எகர விகுதியோடு தலைப்பை வைத்திருக்கின்றார் ஆசிரியார். தமிழில் குறிப்பாக வட தமிழகத்தில் பல வட்டார மொழிகளில் எகர விகுதி புழங்கி வருகின்றது.
 
:: தமிழில் ஐகாரக் குறுக்கம் ஐகாரக் குறுக்கம் என்ற ஒன்றுண்டு. இந்த ஐகாரக் குறுக்கும் சொல்லீற்றில் வரும் போது மாத்திரை அளவில் குறைந்து ஒலிக்கும். எடுத்துக் காட்டுக்கு கதை என்பதை Kathai என பலுக்கக் கூடாது, அதை Katha என்பதாகவே பலுக்க வேண்டும். இந்த ஐகாரக் குறுக்கமானது கன்னட மொழியில் எகரமாக மாறுகின்றது. இந்த மாற்றம் தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட பல வட தமிழக வட்டார மொழிகளும் காணப்படுகின்றது. இந்த எகரம் பொதுவில் எழுதும் போது ஐகாரமாகவே நாம் எழுத வேண்டும். அத எடு என பேசினாலும் அதை எடு என்று தான் எழுத வேண்டும்.
 
:: மீண்டும் கண்டந்தெவுக்கு வருவோம், கண்டந்தெ என்பதன் பொருள் என்ன? கண்டு, காணப்பட்டது என்ற தான் பொருள் தரும். கன்னட மூல ஒலிக்கு நெருக்கி இந்த சொல்லை மாற்ற வேண்டும் என்றால் கண்டந்த என்று தான் மாற்றிக்கொள்ள முடியும், அப்போது தான் பொருள் மயக்கம் தராது, ஆனால், இலக்கணப் படி நோக்கினால் கண்டந்தை என்பதே சரி, அதற்கான விளக்கங்களை மேலே கொடுத்தும் விட்டேன். --[[பயனர்:அருணன்|அருணன்]] ([[பயனர் பேச்சு:அருணன்|பேச்சு]]) 00:28, 10 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:உளிதவரு_கண்டந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "உளிதவரு கண்டந்தை" page.