"திவாகர நிகண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,112 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
இந்த நிகண்டினை இயற்றியவர் ‘சைவன்‘ என ஒருசாராரும், ஆனால் பெரும்பான்மையான ஆய்வாளர்கள் ‘ஜைனன்‘ எனவும் கூறுவர். பேராசிரியர் வையாபுரி பிள்ளை இது பற்றித் தனது "History of Tamil Language and Literature" என்ற நூலின் பக்கம் - 164இல் "The earliest Nighandu (lexicon) in Tamil, Divakaram, is a Jain work. Forgetting this, Saivaite scribes and editors have placed Siva's name at the beginning of the first section in contravention of Jain practice" எனக் கூறியுள்ளார்.
 
ஆனால், சேந்தன் திவாகரத்தின் தொகுதி மூன்றானது, பின்வரும் பாட்டூடாக முடிகிறது:
“காதலி கையில் போதிப் பெருந்தவன்
தெவ்வடு கால வெவ்வேல் எழிலி
அவ்வை பாடிய அம்பர் கிழவன்
தேன் தார்ச் சேந்தன் தெரிசொல் திவாகரத்துள்
மூன்றாவது
விலங்கின் பெயர்த் தொகுதி
முற்றிற்று.”
இதில், “போதிப் பெருந்தவன்” எனக் குறிப்பிடப்பட்டிருப்பது, புத்தபெருமானையாகும்!
அப்படியானால், சேந்தன் திவாகாரத்தை இயற்றியவன் எப்படி ஜைனனாக இருக்கமுடியும்?
 
‘சேந்தன் திவாகரம்’ என்ற நிகண்டானது, சென்னைக் கல்விச் சங்கத்துத் தாண்டவராய முதலியாரால் பதிப்பிக்கப்பட்ட பத்துத் தொகுதிகளின் மூலத்தையும், சென்னைக் கல்விச் சங்கத்து வித்துவான்களால் பதிப்பிக்கப்பட்ட மிகுதி இரண்டு மூலத்தையும் இணைத்து, 1923ஆம் ஆண்டில், முதன்முதலாக, அச்சு வடிவில் முழுமையான நூலாக வெளியிடப்பட்டிருந்தது. பின்னர், அது 1958ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1913836" இருந்து மீள்விக்கப்பட்டது