ஒடியல் புட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:பிட்டு சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''ஒடியல் பிட்டு''' அல்லது '''ஒடியல் புட்டு''' என்பது ஒடியல் மாவில் இருந்து தயாரிக்கப் படும் ஒருவகை உணவுப் பண்டம். இது இலங்கைத் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. இது மிகவும் சத்தான உணவு என தமிழ் மக்களால் கருதப்படுகிறது. ஒடியல் பிட்டு கூடுதலாக மதிய உணவாகவே உண்ணப்பட்டது. சாதாரண ஒடியல்பிட்டு தேங்காய்ப்பூ போட்டு அவிக்கப்பட்டு மதியஉணவாக சோறுடன் சேர்த்து உண்ணப்படும். வயல் வேலைக்குச் செல்பவர்கள் ஒடியல்பிட்டை அவித்து உதிர்த்தாமல் வைத்து விடுவார்கள். இது கட்டியாக இறுகி விடும். அடுத்தநாள் காலையில் கடினமாக இருக்கும் அப்பிட்டை மெது மெதுவாக உதிர்த்தி தேநீருடன் சேர்த்துச் சாப்பிட்டுச் செல்வார்கள். ஒடியல் பிட்டுக்கு மரக்கறிகள் போட்டும் அவிப்பார்கள். இது காய்ப்பிட்டு எனப்படும். இப்பிட்டை அவித்து இறக்கியவுடன் சூடாக இருக்கும் போதே நல்லெண்ணெய் விட்டுக் கிளறிச் சாப்பிடுவார்கள். நெத்தலி போட்டு அவிக்கப்படும் நெத்தலிப்பிட்டும் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒன்று.
 
"https://ta.wikipedia.org/wiki/ஒடியல்_புட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது