இந்தோனேசிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
update
வரிசை 2:
|name=இந்தோனேசிய மொழி
|nativename=''Bahasa Indonesia''<br />பஹாசா இந்தோனேசியா
|speakers={{sigfig|42.766|2}}&nbsp;மில்லியன்
|date=2010 கணக்கெடுப்பு
|ref=<ref name="sensus2010">{{cite web |url=http://bps.go.id/index.php/publikasi/14| title=Penduduk Indonesia Hasil Sensus Penduduk 2010 (Result of Indonesia Population Census 2010)| pages=421, 427|author=Badan Pusat Statistik|date=28 March 2013|issn=2302-8513}}</ref>
|speakers2= இரண்டாம் மொழியாகப் பேசுவோர்: {{sigfig|155.93|3}}&nbsp;மில்லியன் (2010 கணக்கெடுப்பு)<ref name="sensus2010"/>
|familycolor=ஆஸ்திரோனீசிய
|region=[[தென்கிழக்கு ஆசியா]]
|states=[[இந்தோனேசியா]], [[கிழக்குத் திமோர்]]
|speakers=கிட்டத்தட்ட 200 [[மில்லியன்]] (17 மில்லியன் தாய்மொழி)
|rank=52 (தாய்மொழி வரிசை)
|fam2=[[மலாய-பொலினீசிய மொழிகள்|மலாய-பொலினீசிய]]
|fam3=[[கரு மலாய-பொலினீசிய மொழிகள்|கரு மலாய-பொலினீசிய]]
|fam4=[[சுண்டா-சுலவெசி மொழிகள்|சுண்டா-சுலவெசி]]
வரி 16 ⟶ 19:
|script=[[இலத்தீன் அரிச்சுவடி]]
|agency=[[புசட் பஹசா]]
|iso1=id
|iso2=ind
|iso3=ind}}
|glotto=indo1316
|glottorefname=Indonesian
|notice=IPA
}}
 
'''இந்தோனேசிய மொழி''' (''Indonesian language'') [[இந்தோனேசியா]]வின் உத்தியோகபூர்வ மொழி. பல நூற்றாண்டுகளாக இந்தோனேசியத் தீவுகளுக்கிடையே இடைத் தரகர் மொழியாகச் செயற்பட்டு வந்த இந்தோனேசியாவின் [[ரியாவு]] மாநிலத்தின் பேச்சு வழக்கினை ஒத்ததாகும். இந்தோனேசியா, [[கிழக்கு திமோர்]] போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. [[மலாய்]] மொழியை ஒத்தது. [[1945]] இல் இந்தோனேசியா சுதந்திரம் பெற்றபோது வரையறுக்கப்பட்டுத் தனிமொழியானது. கிட்டத்தட்ட 100% இந்தோனேசியர்களால் சரளமாகப் பேசப்படக்கூடிய இம்மொழி, உலகில் அதிகளவு மக்களால் பேசப்படும் மொழிகளுள் ஒன்றாக விளங்குகிறது.
 
இந்தோனேசிய மொழியில் [[சாவக மொழி|சாவக]] மொழியின் செல்வாக்கு மிகுந்திருப்பதுடன் [[அரபு]], [[சமஸ்கிருதம்]], [[தமிழ்]], [[சிங்களம்]], [[ஆங்கிலம்]], [[நெதர்லாந்து மொழி]], [[சீனம்]] போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட ஏராளமான வேற்று மொழிச் சொற்கள் காணப்படுகின்றன. [[ஜகார்த்தா]]விலும் அதன் புறநகர் பகுதிகளிலும் பேசப்படும் மொழி வழக்கில் [[பத்தாவி மொழி]]யின் தாக்கம் அதிகம். இதன் இலக்கணவமைப்பு பெரும்பாலும் அரபு மொழியின் இலக்கணவமைப்பை ஒத்திருப்பதையும் காண முடிகின்றது. எனினும், இந்தோனேசிய மொழியில் பால், எண், இடம், காலம், ஒருமை-பன்மை போன்ற வேறுபாடுகள் காணப்படுவதில்லை.
 
== வரிவடிவம் ==
அவுத்திரனீசிய மொழிகளில் ஒன்றாகிய இந்தோனேசிய மொழி மலாய மொழியின் தரப்படுத்தப்பட்ட ஒரு வடிவமாகும். இந்தோனேசியாவின் அலுவல் முறை மொழியாகிய இது [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[கிழக்குத் திமோர்]] போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இந்தோனேசியாவில் [[சாவகம் (மொழி)|சாவக மொழியைப்]] பேசுவோரே பெருமளவிற் காணப்பட்ட போதிலும் பல்லாயிரக் கணக்கான தீவுகளிலும் பல நூற்றுக் கணக்கான மொழிகளும் பல்லாயிரக் கணக்கான வட்டார வழக்குகளும் காணப்படுகின்றன.
முன்னர் இம்மொழி அரபு வரிவடிவத்தைச் சேர்ந்த [[ஜாவி எழுத்து முறை]]யில்<ref>http://gimonca.com/sejarah/pronounce.html</ref> எழுதப்பட்ட போதிலும் இருபதாம் நூற்றாண்டில் [[இலத்தீன்]] எழுத்துக்களில் எழுதப்படத் தொடங்கியது. 1972 ஆம் ஆண்டில் இதன் பழைய எழுத்தமைப்பு மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது<ref>http://www.omniglot.com/writing/indonesian.htm</ref>. திருத்தப்பட்ட எழுத்தமைப்புக்கள் பின்வருமாறு:
வரி 44 ⟶ 53:
|}
 
== ஒலி அரிச்சுவடி ==
 
'''உயிர்'''
வரி 74 ⟶ 83:
இலத்தீன் எழத்தாகிய X என்பது இந்தோனேசிய மொழிச் சொற்களில் பயன்படுத்தப்படுவதில்லை. இதற்குப் பதிலாக KS ஆகிய இரு எழுத்துக்களுமே பயன்படுத்தப்படுகின்றன. முன்னர் வாடகை வண்டியை Taxi எனக் குறிக்கப்பட்ட போதிலும், தற்காலத்தில் Taksi (''தக்ஸி'') என்றே எழுதப்படுகிறது.
 
== ஒலியமைப்பு ==
இந்தோனேசிய மொழியில் குறில், நெடில் வேறுபாடுகள் காணப்படுவதில்லை. ஆயினும் மொழியும் போது வெவ்வேறு இடங்களில் குறிலாகவும் நெடிலாகவும் மொழியப்படுவதுண்டு. பொதுவாக மொழியின் தொடக்கத்தில் வரும் உயிர்மெய் ஓசைகள் குறிலாகவும், நெடிலாக ஒலித்த பின் தொடரும் வேறுபட்ட உயிர் மெய் குறிலாகவும் ஒலிப்பதுண்டு. ம(ச்)சம் மா(ச்)சம் (macam-macam), ஜலான் ஜாலன் (jalan-jalan) என்பது போன்று ஒரே சொல் இரட்டித்து வரும் போது முதலாவதில் குறிலாகவும் பின்னர் நெடிலாகவும் மொழியப்படும் இடங்களும் காணப்படுகின்றன. ஆயினும் இதற்குப் பொதுவான விதி என்று எதனையும் கூறுவது கடினம்.
 
வரி 95 ⟶ 104:
இந்தோனேசிய மொழியில் சாவக மொழியைப் போன்றே பெரும்பாலான சொற்களின் இறுதியில் வரும் K எனும் எழுத்து மொழியப்படாதிருப்பதும் சில வேளைகளில் கால் மாத்திரையளவு மொழியப்படுவதுமுண்டு. அத்தகைய சொற்கள் ஆய்த எழுத்து இறுதியில் வருவது போன்றே பெரும்பாலும் மொழியப்படுகின்றன<ref>http://gimonca.com/sejarah/pronounce.html</ref>. எடுத்துக் காட்டாக batuk (பத்துஃ), demak (டெமாஃ), perak (பெராஃ) போன்ற சொற்களைக் குறிக்கலாம். பத்துக் அல்லது பத்துகு என்றவாறோ, டெமாக் அல்லது டெமாகு அல்லது தெமாகு என்றவாறோ, பெராக், பெராகு, பேராக் என்றவாறோ மொழியும் போது இத்தகைய சொற்களின் பொருள் மாறுபடலாம். இவ்வாறான ஒலிபெயர்ப்பு “வட்டுக் கோட்டைக்கு வழிகேட்டால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு” என்ற கதையைப் போன்ற நிகழ்வுகளுக்கு வழிவகுக்கலாம்.
 
== ஒலிபெயர்ப்பு ==
இந்தோனேசிய மொழியில் சில ஓசைகள் தமிழுக்கு நெருங்கி ஒலிக்கின்ற போதிலும் அவற்றுட் சில இந்தோனேசியச் சூழலுக்குப் பழகாத வேற்று மொழிக்காரால் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படுவது கடினமாகும். அதனால், அது வேற்று மொழிக்காரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் வாய்ப்புக்கள் அதிகம்.
 
வரி 116 ⟶ 125:
இத்தகைய தவறான ஒலிபெயர்ப்புக்கு மேலும் பல உதாரணங்களைக் காட்டலாம். ''மலாய்சியா'' (Malaysia) என்பது மலேசியா என்றெழுதப்படுவதும், ''மலாயா'' (Malaya) என்பது மலேயா என்றெழுதப்படுவதும், ''மலாயு'' (Melayu) என்பது மலே (Malay) என்றெழுதப்படுவதும், ''குவாளா ளும்பூர்'' (Kuala Lumpur) என்பது கோலாலம்பூர் என்றெழுதப்படுவதும் இத்தகைய ஆங்கில வழி ஒலிபெயர்ப்பின் விளைவுகளே.
 
== உண்ணாட்டு மொழிகளின் தாக்கம் ==
இந்தோனேசியாவில் காணப்படும் பல நூற்றுக் கணக்கான மொழிகளையும் பல்லாயிரக் கணக்கான பண்பாடுகளையும் கொண்டோர் ''இந்தோனேசிய மொழி'' என்ற பெயரில் தரப்படுத்தப்பட்ட ஒரு மொழியினூடாகவே இணைக்கப்படுகின்றனர். பல்வேறு மொழிக்காரரும் தத்தம் மொழியின் சொற்களைப் புகுத்திப் பேசுவதுமுண்டு. அவரவரது தாய்மொழிக்கு ஏற்றவாறு இந்தோனேசிய மொழிச் சொற்கள் மொழியப்படுவதுமுண்டு. இதன் காரணமாக சாவகம், சுண்டா, மதுரா, பாலி, பத்தா, படாங், அச்சே, கொரொன்தாளோ, மகசார், பஞ்சார் போன்ற பல்வேறு மொழிகளினதும் சொற்கள் இந்தோனேசிய மொழியை வளப்படுத்துகின்றன.
 
வரி 123 ⟶ 132:
இந்தோனேசியாவில் சொற்றொடர்களைச் சுருக்கி மொழியும் வழக்கம் காணப்படுகிறது. பெயர்களையும் அவ்வாறே சுருக்கி மொழிவதுண்டு. எடுத்துக் காட்டாக, ''நாஸி கோரெங்'' (nasi goreng) என்பதை ''நஸ்கோர்'' (nasgor) என்று மொழிவதும் சுகர்னோ ஹத்தா (Soekarno-Hatta) என்பதை சுத்தா (Soetta) என்றும் மொழிவதும் சர்வ சாதாரணம். ஆயினும் இத்தகைய சுருக்கல் இடத்துக்கிடம் வேறுபட்ட விதத்தில் புரிந்து கொள்ளப்படுவதுமுண்டு. எடுத்துக் காட்டாக, ஜகார்த்தாவில் பனிக்கட்டியிட்ட இனிப்பான தேனீர் என்பதை ''எஸ் தேஹ் மானிஸ்'' (es teh manis) என்று கூறப்படுகிறது. இதுவே மேடானில் குளிர்ந்த இனிப்பான தேனீர் என்றவாறு, தேஹ் மானிஸ் டிஙின் (teh manis dingin) என்பதைச் சுருக்கி ''தேஹ் மாண்டி'' என்றோ (teh mandi) வெறுமனே ''மாண்டி'' (mandi) என்றோ கூறப்படுகிறது. உண்மையிலேயே மாண்டி என்றால் குளித்தல் என்று பொருள். இத்தகைய சொற் பயன்பாடுகள் குழப்பத்தை ஏற்படுத்துவதுண்டு.
 
== உசாத்துணைகள் ==
{{reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தோனேசிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது