55,727
தொகுப்புகள்
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...) |
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக) |
||
{{unreferenced}}
'''இலங்கையில் உள்ளூராட்சி''' நீண்ட வரலாற்றையுடையது. [[இலங்கை]] வரலாற்று நூலான [[மகாவம்சம்]], உள்ளூர் நிர்வாகம் ''நாகர குட்டிக'' (Nagara Guttika) என அழைக்கப்படும் நகரத் தலைவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறுகிறது. இது தவிர ''கம்சபா'' என அழைக்கப்பட்டு வந்த கிராமச் சபைகளும் இருந்துள்ளன. கிராம நிர்வாகம் தொடர்பில் ஓரளவு அதிகாரம் கொண்ட கிராமத் தலைவர்களின் கீழ் அமைந்த இச் சபைகளுக்கு சிறிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாளவும், தகராறுகளைத் தீர்த்துவைக்கவும் உரிமைகள் இருந்தன. அக்காலத்துக் கிராம சபைகள், முக்கியமாக [[வேளாண்மை]] தொடர்பான பொறுப்புக்களையே கவனித்து வந்ததுடன் அவை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை.
==பிரித்தானியர் காலம்==
1818 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் கிராமசபை முறையை இல்லாதொழித்தது. எனினும் 1856 ஆம் ஆண்டில் அவ்வரசு நிறைவேற்றிய நீர்ப்பாசனச் சட்டவிதிகளின் கீழ் [[பயிர்]]ச் செய்கை மற்றும் [[பாசனம்]] தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வாய்ப்பு உள்ளூர் மக்களுக்குக் கிடைத்தது.
பிரித்தானிய ஆட்சியின் இறுதிப்பகுதியில் இலங்கையில் உள்ளூராட்சி தொடர்பான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1885 மற்றும் 86 ஆம் ஆண்டுகளில், [[கொழும்பு]], [[கண்டி]], [[காலி]] ஆகிய நகரங்களில் மாநகர சபைகள் உருவாக்கப்பட்டன. 1871 ஆம் ஆண்டில் கிராமக் குழுக்கள் சட்டவிதி (Village Committees Ordinance) நிறைவேற்றப்பட்டது. 1892 ல், சிறிய நகரங்களில் சுகாதாரக் குழுக்கள் (sanitary boards) அமைக்கப்பட்டன. 1939 இலும், 1946 இலும் முறையே நகர சபைகளும், பட்டின சபைகளும் உருவாகின.
==பிரித்தானியருக்குப் பின்==
1980 ஆம் ஆண்டில் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் உருவாக்கப்பட்டபோது கிராமசபைகளுக்கு உரிய அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்குக் கையளிக்கப்பட்டன. அரசியல் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பல காரணங்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாமல் போனது. பின்னர் புதிய சீர்திருத்தங்களின் கீழ், [[பிரதேச சபைகள்]] அமைக்கப்பட்டன. இன்றைய உள்ளூராட்சி முறைமையில், மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் என்பன அடங்கியுள்ளன. 2006 ஆம் ஆண்டின் நிலவரப்படி, இலங்கையில், 14 மாநகரசபைகளும், 37 நகரசபைகளும், 258 பிரதேச சபைகளுமாக மொத்தம் 309 உள்ளூராட்சி அமைப்புக்கள் உள்ளன.
{{இலங்கையின் உள்ளூராட்சி}}
[[பகுப்பு:இலங்கை அரசியல்]]
|