நயினாதீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
வரிசை 29:
 
== அமைவிடம் ==
[[படிமம்:Nainathivu Amman-2.png|thumb|நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில்]]
இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக, தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதற்குக் கிழக்குத் திசையில் [[புங்குடுதீவு]]ம், நேர் வடக்கில் [[அனலைதீவு]]ம் அமைந்துள்ளன.
 
== போக்குவரத்து ==
நயினா தீவிற்கு தரை வழியாக பயணிப்பதற்கான பாதைகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினா தீவு செல்வோர் குறிகாட்டுவான் வரை பேருந்தில் சென்று, குறிகாட்டுவானில் இருந்து படகு ஊடாக நயினாதீவு தீவிற்கு செல்ல முடியும். நயினா தீவிக்குள் ஒரு உள்ளூர் பேருந்து சேவை உள்ளது.
[[படிமம்:Nainathivu.JPG|thumb|நயினாதீவு கடலில் இருந்து காட்சி [[நாகபூஷணி அம்மன் கோவில்]] தெரிவதைக் காணலாம்]]
 
== நயினாதீவு வரலாறு - வரலாற்றுக்கு முன்பிருந்து கிபி 1000 வரை ==
{{Refimprove}}
[[படிமம்:NainathivuNagapooshani Amman-2 Temple.pngjpg|thumb|நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில்]]
இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் என்னும் நூலில் நயினாதீவு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்த இரண்டு [[நாகர்|நாக]] அரசர்களுக்கிடையில் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக அவர் நாகதீபத்துக்கு வந்ததாக [[மகாவம்சம்]] கூறுகிறது. இதே பிணக்கு/யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று ‘மணிமேகலை’க் காப்பியம் கூறுகின்றது. இங்கே [[பௌத்த கோவில்]] ஒன்று இருந்ததாகவும், இந் நூலில் குறிப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
 
[[படிமம்:NainathivuNahaVihara.JPG|left|thumb|180px|நயினாதீவு நாக விகாரை]]
நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டனவென்று கருதப்படுகிறது. [[குல. சபாநாதன்]] "இத்தலத்திற்கு நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினார்தீவு, நாகநயினார்தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம் (Haorlem), சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன"<ref>[[குல. சபாநாதன்]], ''நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் தேர்த் திருப்பணிச் சபை மலர்'', [[1957]]</ref> எனக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இவற்றுட் பல பெயர்கள், வெறும் செவிவழிக் கதைகளின் அடிப்படையில் நயினாதீவுடன் தொடர்புபடுத்தப்படுவனவாகவும் ஆய்வாளர்கள் ஏற்கத்தக்க சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பெயர்கள் எக்காலத்திலாவது நயினாதீவைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டன என்று நிரூபிக்கப்பட முடியாதவையாகவுமே உள்ளன.
 
வரி 79 ⟶ 77:
ஆபுத்திரன் அங்கு இறங்கி பசித்தோரைத் தேடிக்கொண்டிருந்தான். ஆபுத்திரன் வங்கத்தில் இருப்பதாக எண்ணிய நாய்கன் வங்கத்தை ஓட்டிச்சென்றுவிட்டான். கடவுள் கடிஞையைக் கொண்டு தன் பசியை மட்டும் நீக்கிக்கொண்டு உயிர்வாழ ஆபுத்திரன் விரும்பவில்லை. ‘ஆண்டுக்கு ஒருமுறை புத்தன் பிறந்த நாளில் தோன்றி வழங்குவோர் கையில் சேர்க’ என்று கூறி, அத்தீவிலிருந்த கோமுகி (ஆ முகம், பசு முகம் தோற்றம் கொண்ட பொய்கை) என்னும் பொய்கையில் எறிந்துவிட்டு உண்ணாதிருந்து உயிர்விட்டான்.
 
இந்த அமுதசுரபி பின்னர் மணிமேகலை கைக்கு வந்தது. அவள் பசிப்பிணியைப் போக்கிவந்தாள். பாம்பு-கருடன் போராட்டத்தின் விளைவாகவே தமிழகத்து மாநாய்கன் வணிகர் ஒருவரால் நயினைக் கோயில் அமைக்கப்பட்டது காவிரிப்பட்டிணத்தில் வாழ்ந்து வந்த மாநாய்கன் என்னும் வணிகன் என்பது செவிவழிக் கதை. பாம்பு சுற்றிக் கல்லையும், கருடன் கல்லையும் கோவிலையும் இன்று அடியார்கள் தரிசிக்கின்றனர்.
 
வரலாற்றுத்துறை அறிஞர்கள் தமது ஆய்வுகளின் அடிப்படையில் ‘புத்தர் இலங்கைக்கு வந்தார் என்பது வெறும் கட்டுக்கதை’ என்ற கூறியிருப்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. கலாநிதி ஜீ.சீ.மெண்டிஸ் போன்ற சிங்கள அறிஞர்கள் உட்பட்ட பல வரலாற்றுத்துறை அறிஞர்கள், ‘புத்தர் இலங்கைக்கு வந்தார்’ என்பது ‘இயேசுக் கிறீஸ்து லண்டனுக்கு போனார்’ என்பது போன்றதொரு கட்டுக்கதை என்று கருத்து வெளியிட்டுள்ளமையும் இங்கு மனங்கொள்ளத்தக்கது.
வரி 94 ⟶ 92:
“நயினார்தீவு” எனும் பெயருக்கான காரணம் தொடர்பாக இக்கட்டுரையாளர் வெளியிட்ட “நயினாதீவு நாகம்மாள்” என்ற நூலின் 102 ஆம் பக்கத்திலும், கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவிலின் திருக்குட முழுக்குப் பெருவிழா மலரில் இக்கட்டுரையாளர் வரைந்த “நயினாதீவு சிறி நாகபூசணி அம்மன் கோவில்” என்ற தலைப்பிலான கட்டுரையிலும் மேலதிக தகவல்களைக் காணலாம்.
 
இச்சிறுதீவு, நாகதீவு (சிங்களத்தில் ‘நாகதிவயின’), நயினாதீவு (அல்லது நயினார் தீவு) என்ற பெயர்களாலும், டச்சுக்காரர்களின் ஆட்சியின்போது (Haorlem) ‘ஹார்லெம்’ எனவும் அழைக்கப்பட்டதென்பது ஆதாரபூர்வமாக அறியக்கிடக்கின்றது. ‘ஹார்லெம்’ என்பது ஒல்லாந்தில் தலைநகர் ‘அம்ஸ்ரடாமு’க்கு அருகில் உள்ள சிறிய நகரின் பெயர். ஒல்லாந்தர் அமெரிக்காவில் குடியேறியபோது, தற்போதைய நியயோர்க் நகருக்கு அண்மையில் ஒரு குடியிருப்பை நிறுவி, அதற்கும் ‘ஹார்லெம்’ என்றே பெயரிட்டனர். நயினாதீவு தற்போது ‘ஹார்லெம்’ என்று அழைக்கப்படுவதில்லை.
 
=== நாகர்களது குடியிருப்பு ===
{{mainMain|நாகர் (தமிழகம் மற்றும் இலங்கை)}}
விசயனின் வருகைக்கு முந்திய காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடும் அயலிலுள்ள தீவுகளும், திருமலை, வன்னி, மன்னார், மற்றும் கிழக்கு மேற்குக் கரையோரப் பட்டினங்களும் நாகர்களது குடியிருப்புக்களாக இருந்தன. யாழ்ப்பாணக் குடாநாடும் அயல்தீவுகளும் ‘நாகதீபம்” என்ற பெயருக்கேற்றவாறு, கதிரமலையில் தனது தலைநகரைக் கொண்ட, ஒரு நாகர் அரசின் கீழ் இருந்தன. முதலியார் திரு.செ.இராசநாயகம், தமது “யாழ்ப்பாணச் சரித்திரம்” (1933) என்னும் நூலில் இதனை அறுதியிட்டுக் கூறியுள்ளார். “இத்தீவுகளிலும், இலங்கையின் மேற்பாகத்திலும், சரித்திர காலத்துக்கு முந்தியே நாகர் எனும் ஒரு சாதியார் குடியேறியிருந்தனர். இத்தீவுகளுக்கு இப்போது கந்தரோடை என்று அழைக்கப்படும் கதிரமலையே இராசதானியாகவிருந்தது.”
 
வரி 129 ⟶ 127:
 
=== தீவுப்பகுதி மக்களின் குடியமர்வு ===
 
அயல்தீவுகளில் வசித்த மக்களில் சிலரும் நயினாதீவில் திருமணத் தொடர்பு காரணமாக குடிவந்துள்ளார்கள். அதிகமான திருமணத் தொடர்புகள் பக்கத்தேயுள்ள புங்குடுதீவு மக்களுடன் ஏற்பட்டதைத் தொடர்ந்து கணிசமான தொகையினரான புங்குடுதீவு மக்கள் நயினாதீவுக்கு வந்து குடியமர்ந்துள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் புங்குடுதீவில் வசித்த மாதுங்கர் என்பவரின் மகன் சரவணமுத்து நயினாதீவில் உடையாராக நியமிக்கப்பட்டார். இவர் நயினாதீவில் திருமணம்செய்து அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்கியதன் பின்பு அவரது உறவினர் பலரும் நயினாதீவில் திருமணஞ்செய்து அங்கு சென்று குடியேறி வாழத் தலைப்பட்டனர். இவ்வாறே நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு மற்றும் தீவக மக்களும் திருமணத் தொடர்பு காரணமாக குடிவந்துள்ளனர். நயினை நாகம்மாள் தேவியின்மீது தீவுப்பகுதி மக்கள் கொண்ட பற்றும், பக்தியும் நயினாதீவு மக்களுடனான இத் திருமணத் தொடர்புகளை ஊக்குவித்த மற்றொரு காரணியாகலாம்.
 
=== நயினாதீவில் பௌத்தம் ===
[[படிமம்:NainathivuNahaVihara.JPG|leftright|thumb|180px|நயினாதீவு நாக விகாரை]]
1939 இல், நயினாதீவில் சிங்கள புத்த பிக்கு ஒருவர் வந்து, தெருவெங்கும் சுற்றித் திரிந்தார். மர நிழலில் படுத்து உறங்குவார். ‘ஒரு நாளுக்கு ஒரு வீட்டில்’ என்று முறை வைத்துப் போய் உணவு பெற்று உண்பார். சில ஆண்டுகள் செல்ல, நயினை திரு.இளையவர் கந்தர் என்பவர் திரு.நல்லதம்பி என்பவருக்கு ஈடுவைத்து நீண்டகாலமாக மீட்காமல் விட்டிருந்த சிறு துண்டுக்காணி ஒன்றை நல்ல விலை தந்து தான் வாங்கிக்கொள்வதாக காணி உரிமையாளரிடம் (திரு.இளையவர் கந்தர்) ஒரு ரூபாவை முற்பணமாகக் கொடுத்துவிட்டு திடீரென்று ஒருநாள் அந்த பிக்கு வெளியூர் புறப்பட்டுப் போனார். சில நாட்களில் அவர் திரும்பிவந்து, கணிசமான விலைக்கு அக்காணித் துண்டை வாங்கி, சில வருடங்களில் புத்த தாதுகோபம் ஒன்றை 1944 இல் நயினாதீவில் அமைத்தார். சிங்கள யாத்திரீகர் வருகை இந்தக் காலகட்டத்திலேயே முதன்முதலாக நயினாதீவில் இடம்பெற ஆரம்பித்தது. இதற்கு முன்னர் நயினாதீவில் தமிழ்ப் புத்தர் கோவில் ஒன்று இருந்திருக்கலாம். அல்லாமலும் இருக்கலாம். நயினாதீவு அல்ல - யாழ்ப்பாணக் குடாநாடுதான் ‘மணிபல்லவம்’ எனவும் ‘நாகதீபம்’ எனவும் அழைக்கப்பட்டது என்பது நிறுவப்பட்டுள்ள நிலையில், இதனை எவரும் திட்டவட்டமாகக் கூறுவதற்கு முடியாது. ஆனால், இங்கே சிங்களவர்களது புத்த விகாரை இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை.
 
கிறீஸ்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. ஆறாம் றூற்றாண்டு வரை பௌத்தம் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் தழைத்திருந்த காலத்து, நாகதீபத்தில் - அதாவது யாழ்ப்பாணக் குடாநாட்டில் - வாழ்ந்த தமிழ் நாகர்களும் அவர் பின்னோரும் பௌத்தர்களாக மதம் மாறி வாழ்ந்த காலத்தில், நயினாதீவிலும் பௌத்தமதம் காலூன்றி இருந்திருக்கலாம். மாமன்னர் முதலாம் இராஜஇராஜ சோழ தேவரும், அவரது புதல்வர் முதலாம் இராசேந்திர சோழ தேவரும் தமது நண்பரான சிறீவிசயத்து அரசரின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க நாகபட்டினத்தில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில்கூட மாபெரும் புத்தர் கோவில் ஒன்றை அமைத்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. சில நூற்றாண்டுக்கு முன்னர் பெருமளவுக்கு பௌத்தராக வாழ்ந்தோரின் சந்ததியாரே இன்றுள்ள தமிழர்கள் ஆவர்.
 
ஆகவே, 1939 இல் நயினாதீவுக்கு வந்த புத்தபிக்குவால் 1944 அளவில் இங்கு ஒரு புத்த விகாரமும் தாதுகோபமும் அமைக்கப்பட்டதற்கு முன்பு, நயினாதீவில் புத்தர்கோவில் ஏதாவது எக்காலத்திலாவது இருந்திருக்குமாயின் பௌத்தர்களாயிருந்த நயினையில் வாழ்ந்த தமிழ் நாகர்கள் சைவர்களாக மதமாற்றம் பெற்றமையாலும், அதன்பின் பௌத்தர்கள் யாரும் இங்கு குடியேறாமையாலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த அக்கோவிலும், நயினார் (அல்லது நாகம்மாள்) கோவிலைப் போன்று கி.பி.1620 அளவில் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டது என்று கருத இடமுண்டு. அப்படியான புத்தர்கோவில் இங்கே இருந்திருக்குமாயின், அந்தத் தமிழ்ப் பௌத்தர் கோவில் நயினாதீவில் எந்த இடத்தில் அமைந்திருந்தது என்பது இதுவரை ஆதாரபூர்வமாக அறியப்படவில்லை.
வரி 147 ⟶ 145:
மறுநாள் - அதாவது 11. சூன் 1958 அன்று - காலை இந்த ஏழுபேரும் கடற்படைப் படகு ஒன்றில் மீண்டும் நயினாதீவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அந்தப் படகில் பொலிசாரும், கடற்படையினரும், ஊர்காவற்றுறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, துணை ஆய்வாளர் சிட்னி ஐவர் பளிப்பான Sub-Inspector Sydney Ivor Palipane) என்பவரும் சென்றனர். நயினாதீவில் அன்றைய தினம் மேலும் பதினான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நயினாதீவுப் பால முகப்பில் ‘சிங்களவரே திரும்பிப் போங்கள்’ (Sinhalese Go Boack) என்று ஆங்கிலத்தில் தார் கொண்டு எழுதப்பட்டு இருந்த வாசகங்களை நாக்கால் நக்கும்படி படையினர் சில கைது செய்யப்பட்ட ஊர்மக்களைப் பலவந்தப்படுத்தி செய்வித்தார்கள். அன்று மாலை சுமார் 6.30 மணிவரை நயினாதீவில் படையினரின் அட்டகாசங்கள் தொடர்ந்தன. மாலை 6.30 மணிக்கு நயினாதீவில் இருந்து புறப்பட்ட படகு காரைநகர் கடற்படை முகாமுக்கு சென்றடைந்ததும் கைது செய்யப்பட்ட நயினை மக்கள் அனைவரும் வேறு ஒரு படகுக்குள் மாற்றப்பட்டு அதனுள் வைத்துத் தாக்கப்பட்டனர். இரவு 9.15 மணி அளவில் கைது செய்யப்பட்டோர் யாவரும் ஊர்காவற்றுறை பொலிசு நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு, இரவு முழுவதும் அடித்தும், வேறு அநாகரிகமான விதத்திலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். மறுநாள் 12. சூன் 1958 பகல் 12.00 மணிவரை இவர்கள் பொலிசு நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்ட பின்பு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிவான் திரு.பி.ஜி.எஸ்.டேவிட் முன்னிலையில் அன்றைய நாள் முன்னிலைப்படுத்தப்பட்டு, அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். ஒரு வாரத்தின் பின்பு, விளக்க மறியலில் இருந்தவர்களில் மூவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஏனையோரில் ஒருவரைத் தவிர, மற்றவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கடைசி நபர் 3. சூலை 1958 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்டு, அடித்துத் துன்புறுத்தப்பட்ட எந்த ஒருவருக்கும் எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் பொலிசாரால் நீதிமன்றத்தில தாக்கல் செய்யப்படவில்லை. தம்மை அடித்துக் கொடுமைப்படுத்தியோரை அடையாளம் காட்ட முடியுமென்று தாக்கப்பட்டவர்கள் கூறியும் அரசாங்கம் அவர்களைத் தாக்கிய பொலிஸ் மற்றும் கடற்படையினருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த விதமாக அப்பாவி நயினை மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டமையும், அது தொடர்பாக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமையும் பிற்காலத்தில் புத்த விகாரை நிருவாகத்தின் எந்தச் செயலையும் கண்மூடிப்பார்த்திருக்கும் போக்கை நயினாதீவில் வளர்த்துவிட்டன எனலாம்.
 
பிக்குவும் தனது தேவைகளுக்கு உதவுவதற்கும், தனக்கு ஊரவர்பற்றி தகவல் தருவதற்கும் நயினாதீவைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு குடும்பத்தவர்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார். 1979 மே மாதத்தில் இந்த புத்தபிக்கு புத்த விகாரைக்கு வழிபாட்டுக்காக வரும் யாத்திரீகர்கள் தங்குவதற்கான மடம் அமைப்பதற்கென அரசிடமிருந்து தான் பெற்ற அரச காணிக்குள் கடைகளைக் கட்டி வியாபார நோக்கத்துக்காக பயன்படுத்த முற்பட்டபோது இந்தக் கட்டுரையாளர் அதனை எதிர்த்து துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு, பொதுசன அபிப்பிராயத்தை பிக்குவின் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக திரட்ட முயன்றவேளை, 18.05. மே 1979 இல் பிக்குவின் தூண்டுதலின் பேரில் கொழும்பில் வைத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு சில மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். எனினும் நீதிமன்றில் பொலிசாரால் குற்றச்சாட்டுப் பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படாததால் பின்பு விடுதலை செய்யப்பட்டார். புத்தபிக்கு அமைத்த கடைகளுள் ஒன்று மேலே குறிப்பிடப்பட்ட குடும்பத்தினருக்குக் கொடுக்கப்பட்டது. பிக்குவின் பணத்தை ஊருக்குள் வட்டிக்குக் கொடுப்பதையும் இவர்களே கவனித்து வட்டியிலும் பங்கு பெற்றுக்கொண்டனர். ஐம்பது ஆண்டுகளாக தானும் தனக்கு முன் தனது குடும்பமும் நயினாதீவிலுள்ள பிக்குவுக்கு உணவு வழங்கி வருவதாக இக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்ததாக 2001 யூன் மாதத்தில் வெளிவந்த The Sri Lanka Reporter என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 
பேரினவாதிகளின் மற்றொரு படைத் தாக்குதல் நயினாதீவின் மீது 3. மார்ச் 1986 அன்று நிகழ்ந்தது. இது தொடர்பாக 05.035. மார்ச் 1986 இல் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகை பின்வருமாறு விவரிக்கின்றது:
 
“ஆலயத்தின் பெரிய கதவு 65 வீதம் எரிந்திருக்கக் காணப்பட்டது. அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள், பட்டாடைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.” “நயினை அம்மன் கண்ணீர் விடுகிறாள்! ஆலயத்தின் நட்டம் 20 இலட்சம்!” “நால்வர் பலி!(உண்மையில் ஐவர் அன்று கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு சடலம், இச்செய்தி வெளியான பின்பு கண்டு எடுக்கப்பட்டது.) வீடுகள் தீக்கிரை!”, “நாகபூசணி அம்மனின் இரண்டு தேர்கள், மஞ்சம் தீக்கிரையாகின!”, “நகைகளைக் கொள்ளையடித்த பின்பு வீட்டுக்காரரைச் சுட்டுக்கொன்றனர்”, “படகுகள் எரிப்பு!, போக்குவரத்து பாதிப்பு!”
 
அனைத்துலக மன்னிப்புச் சபையின் (Amnesty International) வெளியீடான “Sri Lanka: Disappearances” (D இணைப்பு – பக்கம் 24) என்ற பிரசுரத்தில் அன்று கடற்படையினர் நயினாதீவில் நடத்திய தாக்குதல் குறித்து முழு விவரங்களும் பிரசுரிக்கப்பட்டன. பின்னர், 1990 யூலையில் ஒரு நயினைவாசி படையினரால் கைக்குண்டு வீசிக் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் திரு.மாவை சேனாதிராசா அவர்கள் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்தார்.
 
இங்குள்ள கடற்படை முகாம் 24. சூலை 1983 அன்று நிறுவப்பட்டு, தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. இதன் விளைவாக, தற்போது நடுத்தர வயதிலும் இளைஞர்களாகவும் உள்ள தலைமுறைகளைச் சேர்ந்தோர் வாழ்நாள் முற்றிலும் உளத் தாக்கங்களுக்குட்பட்டு வாழ்கின்ற நிலை உள்ளது. அத்துடன், பல தனியார் வீடுகள், காணிகள், கிராம முன்னேற்றச் சங்கத்தின் அலுவலகம், வழித்துணை வைரவ சுவாமி கோயில், பொது வீதிகள் முதலியன கடற்படையினரால் அழிக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன.
வரி 183 ⟶ 181:
 
== வெளியிணைப்புகள் ==
{{Commons category|Nainativu}}
* [http://www.nainativu.org/ நயினாதீவு இணையம் - Nainativu.Org]
* [http://www.nainathivu.com/ இணையத்தில் நயினாதீவு - Nainathivu.com]
"https://ta.wikipedia.org/wiki/நயினாதீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது