பனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி better image
சிNo edit summary
வரிசை 13:
|}}
 
'''பனை''' (''Palmyra Palm''), [[புல்]]லினத்தைச் சேர்ந்த ஒரு [[தாவரம்|தாவரப்]] பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் '''போரசசு''' (''borassus'') என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.
 
பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் [[வடலி]] என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 [[மீட்டர்]] உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 - 40 வரையான [[விசிறி]] வடிவ [[ஓலை]]கள் வட்டமாக அமைந்திருக்கும்.
 
பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும்
 
[[Imageபடிமம்:Borassus aethiopum MS 4049.jpg|thumb|ஆப்பிரிக்கப் பனை வடலி (இளம் பனை) ''போராசசு அத்தியோபம்'']]
 
== பெயரிடல் ==
பொது வழக்கில் மரம் என்று [[தமிழ்|தமிழில்]] வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான [[தொல்காப்பியம்]] புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.
 
வரிசை 27:
:அகக் காழனவே மரமெனப் படுமே (பாடல் 631)
 
பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் [[கற்பகதரு]]வுக்கு ஒப்பிடுவர்.
 
== சிற்றினங்கள் ==
போரசசு (பனை) என்னும் பேரினத்தில் வரும் சிற்றினங்கள் [http://www.lankanewspapers.com/news/2008/2/24416_space.html]
* போராசசு அத்தியோபம் - ஆப்பிரிக்கப் பனை மரம் (Borassus aethiopum)
* போ. அகேசி - மேற்கு ஆப்பிரிக்கப் பனை (Borassus akeassii - Ake Assi`s Palmyra Palm (West Africa) )
* போ. ஃப்ளாபெல்லிபர் - [[ஆசியப் பனை]] (Borassus flabellifer - Asian Palmyra Palm (southern Asia and southeast Asia) )
* போ. என்னியனசு - நியூ கினி பனை (Borassus heineanus - New Guinea Palmyra Palm (New Guinea) )
* போ. மடகாசுகரியன்சிசு - மடகாசுகர் பனை (Borassus madagascariensis - Madagascar Palmyra Palm (Madagascar) )
* போ. சாம்பிரானென்சிசு - சாம்பிரானோ பனை (மடகாசுகர்)(Borassus sambiranensis - Sambirano Palmyra Palm (Madagascar) )
 
== காணப்படும் இடங்கள் ==
இது எவ்விடத்தில் தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. [[ஆசியா|ஆசிய]] நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன. தற்காலத்தில் ஆசியாவில் [[இந்தியா]], [[இலங்கை]], [[மலேசியா]], [[இந்தோனீசியா]], [[மியன்மார்]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]], [[சீனா]] போன்ற நாடுகளிலும், [[கொங்கோ]] போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.
[[Imageபடிமம்:Borassus flabellifer fruit on the tree.JPG|thumb|right|200px|பனையுச்சி]]
 
கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்ந்துள்ளன. சேலம், சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவானதே.
வரிசை 49:
அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.
 
விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 - 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும்.
 
== பனையின் இன்னல்கள் ==
[[படிமம்:Palm branches new.jpg|thumb|190px|பனங்கருக்குப் பகுதி|right]]
[[Fileபடிமம்:Jaffna vesak.jpg|thumb|190px|பனைமரமேறி|right]]
*'''பனங்கருக்கு'''
:பனங்கருக்குகள், பனைமரமேறிகளுக்கு மிகுந்த ஊறு விளைவிப்பவையாகும். கூர்மையான அந்த முட்கள் போன்ற அமைவுகள், அவ்வேழை பனைமரமேறிகளுக்கு இன்னல் தருகிறது.
வரிசை 66:
பனையேற்றம் என்பது மரமேறுதல், பூ பக்குவம் அறிதல், சாறு சேகரித்தல் எனப் பல்வேறு திறன்களை உள்ளடக்கிய தொழில் ஆகும். மரமேற நெஞ்சப் பட்டை, இடை வார், தளை ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. இத்தொழில் புரியும்போது மரத்தின் சொரசொரப்பான பகுதியில் உடல் உராயும்பொழுது சிராய்ப்பு ஏற்பட்டு உடல் பொலிவிழக்கிறது. மரம் ஏறுதலின் இடரையும் துன்பத்தையும் களைய இயந்திரச் சாதனங்கள் எதுவுமில்லை. ஒரு மரம் சராசரி 36 முதல் 42 மீட்டர் வரை உயரமுடையது. எனவே ஒரு நாளைக்கு இரு முறை 30 முதல் 40 மரங்கள் ஏறுதல் என்பது பெரும் இடர் மிகுந்தது ஆகும். எனவே மிகுந்த அனுபவசாலிகளே பனைமரமேறுவர். தளைநாரைக் காலில் கட்டி பனைமரம் ஏறுவர்.
 
== பனைத்தொழிலாளர் நிலை ==
 
80 விழுக்காட்டிற்கும் அதிகமான பனைத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்கிறார்கள். ஒரு பனைத் தொழிலாளர் நாள்தோறும் 10 முதல் 15 மணி நேரம் வரை மேற்கொள்ளும் வேலைக்கு 15 ரூபாய்கள் வரை சம்பாதிக்கிறார். எனவே ஒரு பனைத் தொழிலாளரின் குடும்ப வருமானமானது அவர் எத்தனை பனை மரங்கள் ஏறுகிறார் என்பதனையும் அவர் குடும்பத்தில் எத்தனை உழைப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் பொருத்தே அமைகிறது. பெரும்பான்மையான பனைத் தொழிலாளர்களுக்கு சொந்த மரங்களில்லை. தமிழகத்தில் உள்ள பனையேறும் குடும்பங்களில் 67.85% குடும்பங்களுக்கு சொந்த மரங்கள் கிடையாது என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நிலக்கிழார்கள் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கக் குறைந்த கூலிக்கு ஆள்களை நியமித்துக்கொள்கிறார்கள்.
வரிசை 75:
உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்தல், சந்தையிடல் ஆகியவற்றிலும் கூடச் சிக்கல்கள் உள்ளன. போதிய முதலீடின்மை, தொழிலாளர் எண்ணிக்கைக் குறைவு ஆகியன பெரும் சிக்கல்கள் எனக் கூறப்படுகின்றன. மிகக் குறைந்த வருமானத்தையே நல்கும்நிலையில் பனைத்தொழில் இருப்பதால் தொழிலாளர்களை பெருமளவில் ஈர்க்க முடியாமல் இத்தொழில் மெல்ல மெல்ல நலிந்து கொண்டிருக்கிறது.
 
எவ்வாறாயினும் பனைத்தொழில் பெருமளவு வேலைவாய்ப்பும்; உணவு மற்றும் உணவிலிப் பனைப் பொருள்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேவை இருத்தல் வெள்ளிடை மலை. பனங்கற்கண்டு போன்ற மதிப்புடை உணவுப் பொருள்களை உற்பத்தி செய்தல் மூலம் முன்னைய சிக்கல்களை வினைவலிமையோடு எதிர்கொள்ள முடியும் என்பதை மார்த்தாண்டத்திலுள்ள பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் கண்டது. பதநீரைக் கொண்டு வெல்லம் காய்ச்சுவதைக் காட்டிலும் பனங்கற்கண்டு தயாரித்தல் இலாபமுடையது என்று கண்டறியப்பட்டது. இவ்வுற்பத்தியால் பனைத்தொழிலாளர் வாழ்வும் தொழிற்றுறையின் வளர்ச்சியும் மேம்படுவது ஐயத்திற்கு இடமின்றி நிரூபனமானது. உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்யும் அலகுகளை தோற்றுவிக்கும் பணியில் கூட்டுறவுத்துறையும் தன்னார்வத் தொண்டகங்களும் தனியார்களும் ஈடுபட்டுள்ளனர். வடிவமைத்தல் பயிற்சி, உற்பத்திப் பொருள்களை பரவலாக்கல், சரியான முதலீடு, சந்தையிடல் வசதிகள் ஆகியன உணவிலிப் பொருள்களின் உற்பத்தியையும் சந்தையிடலையும் அதிகப்படுத்தியுள்ளன.
 
தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு பனைத் தொழில் கொண்டுள்ள வளவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு தந்து அவர்கள் வாழ்க்கையை சீர்படுத்துவதில் பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் முன்னோடியாகத் திகழ்கிறது.
 
== காட்சியகம் ==
<gallery>
Imageபடிமம்:Beauty of Bangla1.JPG|ஆசிய பனைக்கூடு
Imageபடிமம்:TRUNK I IMG 9026.jpg|பனைமரத் தண்டு
Imageபடிமம்:Tree I IMG 1497.jpg|[[மேற்கு வங்காளம்]]
Imageபடிமம்:Leaves & Rufous Treepie I IMG 7800.jpg|<small>ஆசியப்பனை, [[கொல்கத்தா]]. </small>
Imageபடிமம்:Borassus aethiopum seedsSéléki-Landscape.jpgJPG|<small>ஆப்பிரிக்கப் பனை விதை</small>
Image:Palmyrah fruit sweets.jpg| [[பனங்காய்ப் பணியாரம்]]
Imageபடிமம்:Séléki-LandscapeBorassus aethiopum 0012.JPGjpg|ஆப்பிரிக்கப் பனை பனம்பழம்
Imageபடிமம்:Borassus aethiopum 0012seeds.jpg|<small>ஆப்பிரிக்கப் பனம்பழம்பனை விதை</small>
Image:Borassus aethiopum seeds.jpg|<small>ஆப்பிரிக்கப் பனை விதை</small>
படிமம்:Toddy fresh&bubbling.jpg|பனங்[[கள்ளு|கள்]], [[ஆந்திரா]].
படிமம்:Root.jpg|<small>கிளைப்பனை,[[வல்லிபுரம்]]</small>
Fileபடிமம்:Aerial view of palmyra tubers.jpg|பனங்கிழங்கு
</gallery>
 
== மேற்கோள்கள் ==
<Referencesreferences />
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[பனையிலிருந்து பெறப்படும் பயன்கள்]]
* [[ஆசியப் பனை]]
 
== வெளி இணைப்புகள் ==
 
 
[[பகுப்பு:பனை]]
[[பகுப்பு:AFTv5Test‎AFTv5Test]]
"https://ta.wikipedia.org/wiki/பனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது