"திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொடர்ச்சி
(/* திருத்தந்தை பிரான்சிசின் கியூபா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் பயணம் (செப்டம்பர் 19-28, 2015) பற்...)
சி (தொடர்ச்சி)
"இதுவே எனது இதயத்தில் தோன்றியவை. வேறு எதுவும் சொல்லாமல் விட்டிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இயேசு ஒருபோதும் நம்மைச் சோர்வுறவிடமாட்டார் என்பதை தயவுகூர்ந்து அறிந்திருங்கள். அன்னைமரியாவின் கனிவு உங்களைச் சோர்வுறவிடாது என்பதையும் அறிந்திருங்கள். அன்னைமரியாவையும், இயேசுவையும் பற்றிக்கொண்டு சகோதர சகோதரிகளாக ஆண்டவரில் ஒன்றிணைந்து நடப்போம்."
 
==பிரான்சிசின் கியூபா மற்றும் அமெரிக்கப்ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் (செப்டம்பர் 19-28, 2015) பற்றி சில தகவல்கள்==
===கியூபாவில் சமய சுதந்திரம் வளர வேண்டும் என்னும் கோரிக்கை===
திருத்தந்தை பிரான்சிசு, கியூபா நாட்டைச் சென்று சேர்ந்த உடனேயே, அலுவல்முறையில் இறைநம்பிக்கை இல்லா நாடு என்று தன்னை அறிமுகப்படுத்துகின்ற கியூபா நாட்டில் சமய சுதந்திரத்திற்குப் போதிய இடம், விரிவு, வகைமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பிரான்சிசு கேட்டுக் கொண்டார். கியூபா நாட்டு அதிபர் ராவுல் காஸ்ட்ரோ, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கியூபாவில் அமைத்துள்ள குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம் தளத்தை உடனே மூட வேண்டும் என்று கேட்டார். மேலும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பு இன்றைய புவியுலகை மாசுறச் செய்கிறது என்றும் அந்நிலை மாற வேண்டும் என்றும் கூறினார். இருப்பினும், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் கியூபா நாட்டிற்கும் இடையே நல்லுறவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்த நல்லுறவை ஏற்படுத்துவதில் திருத்தந்தை பிரான்சிசு முக்கிய பங்காற்றுகிறார் என்பதும் தெரிகிறது. பிரான்சிசு தம் உரையில், “கியூபா நாட்டிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இது உலகம் முழுவதற்கும் நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்படுவதற்கு ஒரு சீரிய முன்னுதாரணமாக அமையட்டும்” என்று குறிப்பிட்டார். <ref>[http://www.bbc.com/news/world-latin-america-34303109 திருத்தந்தை பிரான்சிசின் கியூபா பயணம் பற்றி பிபிசி செய்தி]</ref>
 
===பிரான்சிசு கியூபாவின் முன்னாள் அதிபர் பிடெல் காஸ்ட்ரோவை சந்திக்கிறார்===
திருத்தந்தை பிரான்சிசின் கியூபா பயணத்தின் ஒரு உச்சக்கட்டம் அவர் பிடெல் காஸ்ட்ரோவை சந்தித்தது ஆகும்.<ref>[http://www.cnn.com/2015/09/20/world/pope-cuba-conflicts/ திருத்தந்தை பிரான்சிசு - பிடெல் காஸ்ட்ரோ சந்திப்பு]</ref> இரு தலைவர்களும் உலக நடப்புப் பற்றியும், சுற்றுச் சூழல் சீரழிவு பற்றியும் பொதுவாக உரையாடியதாகத் தெரிகிறது.
 
அவானா நகரின் புரட்சி வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிசு மறையுரை ஆற்றியபோது, ஏழை எளியோருக்கும் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோருக்கும் ஆதரவு அளிப்பது தான் உண்மையான சமய நம்பிக்கை என்று கூறினார். இளையோருக்கு உரையாற்றுகையில், “அன்புமிக்க இளையோரே, நீங்கள் ஒளிமயமானதோர் உலகம் உருவாகும் என்று கனவு காண வேண்டும்” என்று கூறினார். மேலும், “கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுநன்மையை முன்னிறுத்தி அனைவரும் ஒத்துழைக்க முடியும், ஒத்துழைக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். ”பண ஆசைக்கு அடிமைகள் ஆகிவிடாமலும், எளியோரை உதறித் தள்ளாமலும் நாம் செயல்பட வேண்டும்” என்றும் அவர் எடுத்துரைத்தார். <ref>[http://www.cnn.com/2015/09/20/world/pope-cuba-conflicts/ திருத்தந்தை இளையோருக்கு உரையாற்றுகிறார்]</ref>
==வெளி இணைப்புகள்==
*[http://www.vatican.va/holy_father/francesco/index.htm?openMenu=15 திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள் - வத்திக்கான் அலுவல்முறை இணையத்தளம்]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1921025" இருந்து மீள்விக்கப்பட்டது