மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தகவல்கள் மற்றும் படிமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
வரிசை 1:
{{தகவற்சட்டம் சிவாலயம் <!-- விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்-->
| பெயர் = மயிலாடுதுறை மயூரநாதசுவாமி திருக்கோயில்
| படிமம் = Raja Gopuram.jpg
| படிமத்_தலைப்பு = ராஜ கோபுரம்
| படிம_அளவு =
| தலைப்பு =
வரிசை 52:
}}
 
'''[[மயிலாடுதுறை]] மயூரநாதசுவாமி கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள 6 திருத்தலங்கள் காசிக்கு இணையாக போற்றப்படுகின்றன. அவற்றில் மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயமும் ஒன்று. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான திருக்கோவில். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், வள்ளலார், மகாவித்வான், ஆதியப்ப நாவலர், வேதநாயகம் பிள்ளை, உ.வே.சா., மாரிமுத்தாப்பிள்ளை, முத்துத்தாண்டவராயர், அருணாசலகவிராயர், முத்துசாமி தீட்சிதர், மகாகவி காளமேகப் புலவர், கோபாலகிருஷ்ண பாரதி, புலவர் இராமையர், துரைசாமி பிள்ளை, கிருஷ்ணசாமி ஐயர், சிதம்பர ஸ்வாமிகள் ஆகியோரால் போற்றப்பட்டத் தலம்.
'''[[மயிலாடுதுறை]] மயூரநாதசுவாமி கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும்.
 
==பெயர் காரணம் ==
[[File:Mayuranathar.jpg|thumb|Mayuranathar]]
இக்கோவிலின் திருப்பெயர் காரணத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன
* சிவ பெருமானை மயில் வடிவத்திலிருந்த பார்வதி தேவி வணங்கி பாவவிமோசனம் பெற்ற தலம் ஆதலால் மயூரநாதர் ஆலயம் என்றும், ஊரின் பெயர் மாயுரம் என்றும் வழங்கப்படுகிறது.
 
==தலப்பெருமை==
"'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது"' என்பது மாயவரத்தைப் பற்றிய சொல் வழக்கு. இச்சொல் வழக்கு முக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய சொல்வழக்கு. சூதவனம், சிகண்டிபுரம், பிரமபுரம், தென்மயிலை என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாம்.
 
==தலச் சிறப்புகள்==
 
* இக்கோயிலில் நடக்கும் அர்த்தஜாமபூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணமாகாதவர்கள் திருமணம் வேண்டி நேர்ந்துகொண்டு, இந்த அர்த்த ஜாம பூஜையில் கலந்து கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
* மயூரநாதரை திலீபன், திருமால், பிரம்மன், இந்திரன், அகத்தியர், கண்ணுவர், கவுண்டில்யன், சுசன்மன், நாதசர்மா, தருமன், லெட்சுமி, விசாலன், காமன், ஆகியோரும், அஃறிணை உயிர்களான, கழுகு, கிளி, காகம், குதிரை, நரி, யானை, வானரம், பூனை, கழுதை, போன்றவைகளும் வழிபடும் பேறு பெற்றனர். தெற்குப் பகுதியில் அகத்திய விநாயகர், நடராஜர், ஜுரதேவர், ஆலிங்கனசந்திர சேகரர் எழுந்தருளியுள்ளனர்.
 
==கோவிலின் அமைப்பு==
[[File:Mayuranathan15.jpg|thumb|வடக்கு வாசல்]]
 
[[File:Thirukkualm.jpg|thumb|Thirukkualm]]
[[File:16 கால் மண்டபம்.jpg|thumb|16 கால் மண்டபம்]]
[[File:Mayuranathar8.jpg|thumb|Kovil]]
 
சுமார் 5000 வருடப் பழமையானது இந்த ஆதி மயூரநாதர் திருக்கோயிலில், சுவாமி சுயம்பு வடிவிலும், அன்னை மயில் வடிவிலும் காட்சி தருகின்றனர். பெருமானையும், அம்பாளையும் மயில் உருவமாக ஒன்றாகக் கண்டு ரசிப்பது இக்கோயிலில் மட்டுமே சாத்தியம். இத்திருக்கோயில் 3 பிரகாரங்களைக் கொண்ட அழகிய திருக்கோயில். இரண்டாவது பிரகாரம், மூன்றாவது பிரகாரம் ஆகியவற்றின் வெளிப் புறத்தில் 16 அடி உயரத்தில் செங்கல்லால் ஆன சுற்றுச் சுவர் உள்ளது. இக்கோயிலின் ஆதி மயூரநாதர் முன் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தேவாரப் பாடல்களை, பெருமான் நேரடியாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆதிமயூரநாதர் ஆலயத்தை திருக்கோயிலின் வடக்கு வாசல் வழியாக வந்தால் காணலாம்
 
இத்திருக்கோயிலின் ராஜகோபுரம் 164 அடி உயரம் கொண்டது. ஒன்பது நிலைகளைகளுடனும் ஒன்பது கலசங்களுடனும் மிக அழகாக காட்சி தருகிறது ராஜகோபுரம். இக்கோபுரம் கட்டப்பட்ட காலம் கிபி. 1513, 1514, 1515-ம் ஆண்டுகளில் என்பது போன்ற விவரங்கள் இக்கோயில் கல்வெட்டுக்கள் மூலம் நமக்குத் தெரிய வருகிறது. தற்காலத்தில் இக்கோயில் சுவாமி கோயில், அம்பாள் கோயில் என்ற இரண்டு பகுதியாக காணப்படுகிறது. இத்தகைய பழக்கம் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
 
அழகிய ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்திருக்குளம் பிரம்மனால் உருவாக்கப்பட்ட குளம். குளத்தின் நடுவே நீராழி மண்டபம் உள்ளது. மார்கழி மாத திருவாதிரை நாளிலும், சித்திராப் பௌர்ணமியிலும், வைகாசி விசாக தினத்திலும், அருள்மிகு மயூரநாதர், அபயாம்பிகை முன்னிலையில் இத்திருக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இத்தீர்த்த குளத்தில் வைகாசி வசந்த உற்சவம் 10 நாட்கள் நடந்தபின் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
 
கோபுரத்தை அடுத்து கோயிலின் உள்ளே அழகிய 16 கால் மண்டபம் கட்டப் பட்டுள்ளது. சுவாமியின் திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை இங்கேதான் நடைபெறும். கோயிலின் உள்ளே முதல் தரிசனம் முக்குறுணி விநாயகர் என்றழைக்கப்படும் பெரிய விநாயகர் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ளார். வடகிழக்கு மூலையில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் தரிசனம்.
 
கி.பி 1070 - 1118-ம் வருடங்களில் கட்டப்பட்ட செங்கல் கற்றளி மண்டபங்களாக இருந்த சுவாமி, அம்பாள் திருக்கோயில் இடிக்கப் பட்டு இப்போது உள்ள கருங்கல் கற்றளி 1928-ம் ஆண்டு எழுப்பப் பட்டுள்ளது. இங்கே அழகிய சித்திர வேலைப்பாடுகள் கொண்ட கற்ப கிரகத்தினுள் மயூரநாதர் எழுந்தருளியுள்ளார்.
 
கோயிலின் உள் பிரகாரத்தில் உற்சவர்களின் சன்னதி, நடராஜர் சன்னதி, விநாயகர், வித்யாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், சேக்கிழார், நால்வர், சப்த மாதாக்கள், அறுபத்து மூவர் போன்றோரது சன்னதிகளும் உள்ளன. இவற்றோடு அல்லாமல் சகஸ்ரலிங்கம், சட்டைநாதர் பலிபீடம், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். இதை அடுத்து மகா விஷ்ணு , வாயுலிங்கம், வருணலிங்கம், மகாலெட்சுமி, பிரம்மலிங்கம் நந்தியுடன் காட்சி தருகின்றனர்.
 
தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு மேற்புறமாக குதம்பைச் சித்தர் ஸ்வாமிகள் ஜீவ சமாதி உள்ளது.
 
இத்திருக்கோயிலில் அம்பாள் சன்னதி தனிச் சன்னதியாக காணப்படுகிறது. அம்பாள் 5 அடி உயரத்தில் 4 திருக்கரங்களுடன் அபயவரத முத்திரையுடன் எழுந்தருளி உள்ளார். அம்பாளுக்கு வலப்புறம் நாத சர்மாவின் மனைவி அநவித்யாம்பிகை இறைவன் காட்டிய இடத்தில் ஐக்கியமாகி லிங்க வடிவத்தில் காட்சி தருகிறார். இந்த லிங்கத்திற்கு சிவப்பு நிறத்திலேயே புடவை சாத்தப்படுகிறது. இந்தத் தலத்தில் மட்டுமே லிங்க உருவமாக உள்ள அம்மைக்கு புடவை சாத்தி வழிபடப் படுகிறது.அம்பாள் கோயிலின் முன் மண்டப வாசலில் இத்தலத்தின் பதிகப் பாடல்களும், உள்ப்ரகாரத்தில் அவயாம்பிகை சதகப் பாடல்களும், அகவல் பாடல்களும் கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளன.
==அமைவிடம்==
இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] [[குத்தாலம் | குத்தாலம் வட்டத்தில்]] அமைந்துள்ளது.
வரி 61 ⟶ 96:
இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் மயூரநாதர், இறைவி அபயாம்பிகை.
 
""திருஞானசம்பந்தர் பெருமானால் இத்தலத்தில் பாடப்பட்ட தேவாரப் பாடல்""
<poem>
::::கரவுஇன் றிநன்மா மலர்கொண்டு
::::இரவும் பகலும் தொழுவார்கள்
::::சிரம்ஒன் றியசெஞ் சடையான் வாழ்
::::வரவா மயிலாடு துறையே !!
 
::::உரவெங் கரியின் னுரிபோர்த்த
::::பரமன் னுறையும் பதிஎன்பர்
::::குரவம் சுரபுன் னையும்வன்னி
::::மருவும் மயிலாடு துறையே !!
 
::::ஊனத்து இருள்நீங் கிடவேண்டில்
::::ஞானப் பொருள்கொண்டு அடிபேணும்
::::தேன்ஒத்து இனியான் அமரும்சேர்
::::வானம் மயிலாடு துறையே !!
 
::::அஞ்சுஒண் புலனும் மவைசெற்ற
::::மஞ்சன் மயிலா டுதுறையை
::::நெஞ்சுஒன் றிநினைத்து எழுவார்மேல்
::::துஞ்சும் பிணிஆ யினதானே !!
 
::::தணியார் மதிசெஞ் சடையான்றன்
::::அணிஆர்ந் தவருக்கு அருள்என்றும்
::::பிணியா யினதீர்த்து அருள்செய்யும்
::::மணியான் மயிலாடு துறையே !!
 
::::தொண்டர் இசைபா டியும்கூடிக்
::::கண்டு துதிசெய் பவன்ஊராம்
::::பண்டும் பலவே தியர்ஓத
::::வந்தார் மயிலாடு துறையே !!
 
::::அணங்கோடு ஒருபா கம்அமர்ந்து
::::இணங்கி அருள்செய் தவன்ஊராம்
::::நுணங்கும் புரிநூ லர்கள்கூடி
::::வணங்கும் மயிலாடு துறையே !!
 
::::சிரம்கை யினில் ஏந் திஇரந்த
::::பரம்கொள் பரமேட் டிவரையால்
::::அரங்கஅவ் அரக்கன் வலிசெற்ற
::::வரங்கொள் மயிலாடு துறையே !!
 
::::ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்
::::கோலத்து அயனும் மறியாத
::::சீலத்தவனூர் சிலர் கூடி
::::மாலைத் தீர்மயி லாடுதுறையே !!
 
::::நின்றுஉண் சமணும் நெடுந்தேரர்
::::ஒன்றும் மறியா மைஉயர்ந்த
::::வென்றி அருளான் அவன்ஊரான்
::::மன்றல் மயிலாடு துறையே !!
 
::::நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
::::மயல்தீர் மயிலா டுதுறைமேல்
::::செயலால் உரைசெய் தனபத்தும்
::::உயர்வாம் இவைஉற்று உணர்வார்க்கே !!
::::திருச்சிற்றம்பலம் !!
</poem>
<br/>
"பாடல் பெற்ற 276 திருத்தலங்களுள் 38வது திருத்தலமாகும்"
<br/>
""திருநாவுக்கரசர் பாடிய பாடல்"""
<poem>
::::நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய்
::::கலைகளாய வல்லான் கயிலாய நன்
::::மலையன் மாமயிலாடுதுறையன் நம்
::::தலையின் மேலும் மனத்துள்ளும் தங்கவே
</poem>
<br/>
== மயிலாடுதுறை சப்தஸ்தானம் ==
மயிலாடுதுறையில், [[திருவாவடுதுறை ஆதீனம்|திருவாவடுதுறை ஆதீனத்திற்குச்]] சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மயிலாடுதுறை_மயூரநாதசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது