கனவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 83 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Do you still dream.jpg|right|200px]]
'''கனவு''' (''dream'') என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான அறிவியல் புரிதல் இன்னும் இல்லை. மூளையில் உள்ள நினைவுக்குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது அனைத்து [[பாலூட்டி]]களிலும் ஏற்படக்கூடிய விளைவாகும். [[ஆர்மடில்லோ]]க்களில் மிகுதியாக இருப்பதாக அறிந்துள்ளனர்.
==கனவுகளின் ஆழ்நிலை==
சாதாரணமாக கனவுகள் என்பது பல வகைப்படும் ,அவற்றுள் இந்த பதிவிற்கு ஏற்ற கனவு வகையாகவும் , தரவுகளை சேமிப்பதற்கு உதவவும் கூடிய கனவு வகையாக நான் தேர்ந்தெடுத்தது '''தெளிவான கனவுகள் (LUCID DREAMING )'''
பொதுவாக நாம் கனவுகளில் ஆழ்ந்து இருக்கும் சமயத்தில் நம்மால் கனவுகளை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல , ஆனால் இந்த தெளிவான கனவுகள் நமது உறக்க நிலையையும் தாண்டி நமது ஆழ்மனது விழிப்புணர்வுடன் இருக்கும் பொழுது ஏற்படுவதே ஆகும்.
 
==சாதாரண கனவுகள்==
இன்னும் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் எனில்,நாம் உறங்கும் பொது நமக்கு வரும் ஒரு கனவில் நமக்கு எதிரே ஒரு புத்தகம் இருப்பதாக நினைத்து கொள்ளுங்கள். சாதாரண கனவுகள் மூலம் இந்த எடுத்துக்காட்டை கூற விளைந்தால், அடுத்து என்ன நாம் செய்வோம் என்பதை நமது ஆழ்மனது தான் நிர்ணயிக்கும் அந்த நொடிபொழுதில் நாமே நினைத்தாலும் நமது எண்ண ஆற்றலால் அந்த புத்தகத்தின் மீதோ அந்த கனவுலகின் பொருட்களின் மீதோ நம்மால் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தி விட முடியாது இன்னும் கூற விளைந்தால் அந்த கனவு முடிந்து நாம் எழுந்த பின்பு தான் இப்படிப்பட்ட கனவை நாம் கண்டிருக்கிறோம் என்பதே தெரிய வரும்.
==தெளிவான கனவுகள் (LUCID DREAMING )==
ஆனால், இந்த தெளிவான கனவுகள் வகையை சார்ந்து நாம் காணும் கனவுகளின் உள்ளே நம்மால் பிரயாணிக்க இயலும் , மேலும் நம்மால் நமது உடல் சார்ந்தோ இயக்க நிலையை சார்ந்தோ எந்த ஒரு எளிதான காரியங்களையும் செய்ய இயலும் ,ஏன் நாம் உறங்கும் போதே நம்மால் ஒரு இமாலய மலையின் மேல் நடந்து செல்வதை போன்ற உணர்வை கொண்டு வர இயலும் . நாம் மேற்கூறிய எடுத்துகாட்டை வைத்து பார்த்தோமேயானால் , நம்மால் நமது உறக்க நிலையில் இருந்து கொண்டே நாம் புத்தகம் சார்ந்த கனவை காண்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள இயலும் , மேலும் அதே உறக்க நிலையில் இருந்து கொண்டே நம்மால் அந்த புத்தகத்தை திறந்து படிக்கச் நினைத்தால் அதுவும் சாத்தியமாகும் இந்த வகையான தெளிவான கனவில்.
== வெளி இணைப்புகள் ==
*http://www.lucidity.com/LucidDreamingFAQ2.html#whyLD
 
[[பகுப்பு:தன்னியல்பு வினைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கனவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது