திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
இற்றையாக்கம்
சி (தொடர்ச்சி)
சி (இற்றையாக்கம்)
 
அவானா நகரின் புரட்சி வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிசு திருப்பலி நிறைவேற்றினார். 200,000 மக்கள் குழுமியிருந்த வளாகத்தில் மறையுரை ஆற்றியபோது, ஏழை எளியோருக்கும் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோருக்கும் ஆதரவு அளிப்பது தான் உண்மையான சமய நம்பிக்கை என்று பிரான்சிசு கூறினார். இளையோருக்கு உரையாற்றுகையில், “அன்புமிக்க இளையோரே, நீங்கள் ஒளிமயமானதோர் உலகம் உருவாகும் என்று கனவு காண வேண்டும்” என்று கூறினார். மேலும், “கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுநன்மையை முன்னிறுத்தி அனைவரும் ஒத்துழைக்க முடியும், ஒத்துழைக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். ”பண ஆசைக்கு அடிமைகள் ஆகிவிடாமலும், எளியோரை உதறித் தள்ளாமலும் நாம் செயல்பட வேண்டும்” என்றும் அவர் எடுத்துரைத்தார். <ref>[http://www.cnn.com/2015/09/20/world/pope-cuba-conflicts/ திருத்தந்தை இளையோருக்கு உரையாற்றுகிறார்]</ref>
 
===திருத்தந்தை பிரான்சிசின் ஐக்கிய அமெரிக்க நாடுகள் பயணம்===
கியூபாவில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து நேரடியாக ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தலைநகரான வாசிங்டனுக்குத் திருத்தந்தை பிரான்சிசு வருவதில் ஆழ்ந்த பொருள் உள்ளது. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக எதிரிகள் போல செயல்பட்டுவந்த இந்த இரண்டு நாடுகளும் பகைமை அகற்றி நல்லுறவுகள் ஏற்படுத்திட திருத்தந்தை பிரான்சிசு உழைத்தார். இரு நாடுகளின் பிரதிநிதிகளும் கூடி வந்து பேச்சு வார்த்தை நடத்த அவரே ஏற்பாடு செய்தார். எனவே, ஒரு விதத்தில் இந்த இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவைக் கொணர்வதில் பிரான்சிசு ஒரு பாலமாக அமைகின்றார்.
 
====அதிபர் ஒபாமா, திருத்தந்தை பிரான்சிசை வெள்ளை மாளிகையில் வரவேற்கிறார்====
செப்டம்பர் 23, புதன் காலை 9 மணியளவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திருத்தந்தை பிரான்சிசை வெள்ளை மாளிகைத் தோட்ட வளாகத்தில் வரவேற்றார். சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் ஆதரவு அளிப்பதிலும், சுற்றுச் சூழல் மாசுறுவதைத் தடுத்து புவியுலகத்தை உலக மக்கள் அனைவரும் வாழ உகந்த இல்லமாக மாற்றுவதிலும், சமயச் சுதந்திரத்தை ஆதரிப்பதிலும் திருத்தந்தை தலைசிறந்த விதத்தில் உழைத்து வருகிறார் என்று தம் வரவேற்புரையில் கூறிய அதிபர் ஒபாமா, திருத்தந்தை பிரான்சிசை அமெரிக்க மக்கள் பெயரால் வரவேற்றார். தமது ஏற்புரையின் போது, திருத்தந்தை இரு முக்கிய கருத்துக்களை வலியுறுத்தினார். அமெரிக்க நாடு வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறிய மக்களின் ஒத்துழைப்பால் உருவானது என்றும், இந்நாட்டில் குடியேற விரும்பும் மக்களுக்கு வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அதுபோலவே, சுற்றுச் சூழல் மற்றும் புவியுலகு பாதுகாப்பில் அமெரிக்கா எடுக்கின்ற முயற்சிகளைப் பாராட்டிய பிரான்சிசு, அம்முயற்சிகள் தொடர வேண்டும் என்றும் கூறினார். <ref>[http://www.nytimes.com/2015/09/24/us/politics/pope-francis-obama-white-house.html?_r=0 அதிபர் ஒபாமா, திருத்தந்தை பிரான்சிசை வெள்ளை மாளிகையில் வரவேற்றல்]</ref>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1922459" இருந்து மீள்விக்கப்பட்டது