மூச்சியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
→‎top: *திருத்தம்*
வரிசை 6:
[[மூச்சுத் தொகுதி]]யைக் கொண்டிருக்கும் [[மனிதன்|மனிதனைப்]] போன்ற [[முதுகெலும்பி]]களின் மூச்சியக்கத்தில் நான்கு நிலைகள் காணப்படுகின்றன.
 
* '''[[மூச்சுவிடல்]]''': இது வெளியில் இருந்து [[ஆக்சிசன்]] செறிவு கூடிய [[காற்று|வளி]] மூக்குத் துவாரங்கள், மூச்சுக்குழாய் வழியாக [[நுரையீரல்|நுரையீரலில்]] உள்ள [[காற்றுச் சிற்றறை]]களுக்கு (நுண்ணறைகளுக்கு) எடுத்துச் செல்லப்படுதலையும், பின்னர் நுரையீரலில் இருந்து [[காபனீரொட்சைட்டு]] செறிவு கூடிய வளி மூக்கினூடாக வெளிக்கொண்டு வரப்படுவதையும் குறிக்கும். இவை மூச்சிழுத்தல் (inhalation), மூச்செறிதல் (exhalation) எனப்படும் ஒன்றுவிட்டு ஒன்றாக நிகழும் ஒரு உடற்றொழிலியல் பொறிமுறையைக் குறிக்கும். [[நெஞ்சறை|மார்பறையில்]] ஏற்படும் அழுத்த மாற்றங்களால் இந்த மூச்சிழுத்தலும், மூச்செறிதலும் நடைபெறும். மார்பறையின் முன்புறம் [[மார்பெலும்பு]]ம், பின்புறம் [[முள்ளந்தண்டு வடம்|முதுகெலும்புத் தொடர்தொடரும்]], பக்கங்களில் [[விலா எலும்பு]]கள்களும், கீழ்ப்புறமாக [[பிரிமென்றகடு|பிரிமென்றகடு அல்லது உதரவிதானம்உதரவிதானமும்]] (diaphragm) என அமைக்கப்பட்டுள்ளதுஅமைந்துள்ளது. விலா எலும்புகளிடையே வெளிப்புற, உட்புற விலா எலும்பிடைத் [[தசை]]கள் உள்ளன. இத்தசைகளின் இயக்கத்தால் மார்பறையின் கொள்ளளவை அதிகரிக்கவும் குறைக்கவும் இயலும். மார்பறையில் அடிப்பரப்பினை உதரவிதானம் மூடியுள்ளது. மூச்சுவிடல் நிகழ்ச்சி மார்பறையை விரிவடையச் செய்வதாலும் குறுக்குவதாலும் நடைபெறும்.
* '''நுரையீரலில் வளிமப் பரிமாற்றம்''': நுரையீரலின் காற்றுச் சிற்றறைகளுக்கும், அங்கே காணப்படும் குருதி [[மயிர்த்துளைக் குழாய்]]களுக்கும் (capillary) இடையில் நடைபெறும் வளிமப் பரிமாற்றமாகும்.
* '''வளிமம் கொண்டு செல்லல்''': நுரையீரலுக்கு குருதி வழங்கும் குருதி நுண்துளைகளில் இருந்து ஆக்சிசன் செறிவு கூடிய [[குருதி]]யானது, [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]]யினூடாக, உறுப்புக்களிலுள்ள மயிர்த்துளைக் குழாய்களுக்கு கடத்தப்படுதலும், பின்னர் அங்கிருந்து காபனீரொட்சைட்டு செறிவு கூடிய குருதி நுரையீரலுக்கு கடத்தப்படுவதுமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மூச்சியக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது