திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

/* பிரான்சிசின் கியூபா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் (செப்டம்பர் 19-28, 2015) பற்றி சில...
சி (இற்றையாக்கம்)
(/* பிரான்சிசின் கியூபா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் (செப்டம்பர் 19-28, 2015) பற்றி சில...)
"இதுவே எனது இதயத்தில் தோன்றியவை. வேறு எதுவும் சொல்லாமல் விட்டிருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இயேசு ஒருபோதும் நம்மைச் சோர்வுறவிடமாட்டார் என்பதை தயவுகூர்ந்து அறிந்திருங்கள். அன்னைமரியாவின் கனிவு உங்களைச் சோர்வுறவிடாது என்பதையும் அறிந்திருங்கள். அன்னைமரியாவையும், இயேசுவையும் பற்றிக்கொண்டு சகோதர சகோதரிகளாக ஆண்டவரில் ஒன்றிணைந்து நடப்போம்."
 
==பிரான்சிசின் கியூபா மற்றும், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குப்நாடுகளுக்கான பயணம் (- செப்டம்பர் 19-28, 2015) பற்றி சில தகவல்கள்==
===கியூபாவில் சமய சுதந்திரம் வளர வேண்டும் என்னும் கோரிக்கை===
திருத்தந்தை பிரான்சிசு, கியூபா நாட்டைச் சென்று சேர்ந்த உடனேயே, அலுவல்முறையில் இறைநம்பிக்கை இல்லா நாடு என்று தன்னை அறிமுகப்படுத்துகின்ற கியூபா நாட்டில் சமய சுதந்திரத்திற்குப் போதிய இடம், விரிவு, வகைமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பிரான்சிசு கேட்டுக் கொண்டார். கியூபா நாட்டு அதிபர் ராவுல் காஸ்ட்ரோ, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கியூபாவில் அமைத்துள்ள குவாண்டானமோ விரிகுடா தடுப்பு முகாம் தளத்தை உடனே மூட வேண்டும் என்று கேட்டார். மேலும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பு இன்றைய புவியுலகை மாசுறச் செய்கிறது என்றும் அந்நிலை மாற வேண்டும் என்றும் கூறினார். இருப்பினும், ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் கியூபா நாட்டிற்கும் இடையே நல்லுறவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இந்த நல்லுறவை ஏற்படுத்துவதில் திருத்தந்தை பிரான்சிசு முக்கிய பங்காற்றுகிறார் என்பதும் தெரிகிறது. பிரான்சிசு தம் உரையில், “கியூபா நாட்டிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்படுவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இது உலகம் முழுவதற்கும் நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்படுவதற்கு ஒரு சீரிய முன்னுதாரணமாக அமையட்டும்” என்று குறிப்பிட்டார். <ref>[http://www.bbc.com/news/world-latin-america-34303109 திருத்தந்தை பிரான்சிசின் கியூபா பயணம் பற்றி பிபிசி செய்தி]</ref>
 
====புலம்பெயர்ந்து, அடைக்கலம் தேடி வருவோரை வரவேற்றல் வேண்டும்====
திருத்தந்தை தமது பயணத்தின்போது வலியுறுத்திய ஒரு முக்கிய கருத்து, புலம்பெயர்ந்து, அடைக்கலம் தேடி வருகின்ற மக்களை வரவேற்றல் வேண்டும் என்பதாகும். அவர் வெள்ளை மாளிகைத் தோட்ட வளாகத்தில் ஆற்றிய உரையின்போது, “நானும் புலம்பெயர்ந்து குடியேறிய ஓர் குடும்பத்தில் பிறந்தவன் தான்” என்றார். திருத்தந்தையின் பெற்றோர் இத்தாலி நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அர்ஜெண்டீனா நாட்டில் குடியேறினார். அங்குதான் பிரான்சிசு பிறந்தார். எசுப்பானிய மொழி பேசுகின்ற கத்தோலிக்கர் பெருமளவில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் குடியேறியுள்ளனர். அவர்களுள் சிலர் குடியேற்ற ஆவணங்கள் இல்லாமல் உள்ளனர். அவர்களை மீண்டும் அவர்களுடைய நாடுகளுக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றொரு கருத்தை சிலர் முன்வைக்கின்ற வேளையில் திருத்தந்தை பிரான்சிசு புலம்பெயர்வோரை ஆதரிக்க வேண்டும் என்று கேட்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிரியா, லிபியா, சூடான் போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பா செல்ல முயல்கின்ற பின்னணியில் அவருடைய வேண்டுகோள் பலமாகவே ஒலிக்கின்றது.<ref>[https://www.washingtonpost.com/local/washingtons-welcome-for-francis-early-crowds-prayers-and-songs/2015/09/23/263141e8-61e0-11e5-b38e-06883aacba64_story.html?wpmm=1&wpisrc=nl_evening புலம்பெயர்ந்து குடியேறுவோரை வரவேற்றல் பற்றி திருத்தந்தை பிரான்சிசு]</ref>
 
==வெளி இணைப்புகள்==
1,21,097

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1922633" இருந்து மீள்விக்கப்பட்டது