திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
இற்றையாக்கம்
(/* பிரான்சிசின் கியூபா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குப் பயணம் (செப்டம்பர் 19-28, 2015) பற்றி சில...)
சி (இற்றையாக்கம்)
====புலம்பெயர்ந்து, அடைக்கலம் தேடி வருவோரை வரவேற்றல் வேண்டும்====
திருத்தந்தை தமது பயணத்தின்போது வலியுறுத்திய ஒரு முக்கிய கருத்து, புலம்பெயர்ந்து, அடைக்கலம் தேடி வருகின்ற மக்களை வரவேற்றல் வேண்டும் என்பதாகும். அவர் வெள்ளை மாளிகைத் தோட்ட வளாகத்தில் ஆற்றிய உரையின்போது, “நானும் புலம்பெயர்ந்து குடியேறிய ஓர் குடும்பத்தில் பிறந்தவன் தான்” என்றார். திருத்தந்தையின் பெற்றோர் இத்தாலி நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து அர்ஜெண்டீனா நாட்டில் குடியேறினார். அங்குதான் பிரான்சிசு பிறந்தார். எசுப்பானிய மொழி பேசுகின்ற கத்தோலிக்கர் பெருமளவில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் குடியேறியுள்ளனர். அவர்களுள் சிலர் குடியேற்ற ஆவணங்கள் இல்லாமல் உள்ளனர். அவர்களை மீண்டும் அவர்களுடைய நாடுகளுக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்றொரு கருத்தை சிலர் முன்வைக்கின்ற வேளையில் திருத்தந்தை பிரான்சிசு புலம்பெயர்வோரை ஆதரிக்க வேண்டும் என்று கேட்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிரியா, லிபியா, சூடான் போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பா செல்ல முயல்கின்ற பின்னணியில் அவருடைய வேண்டுகோள் பலமாகவே ஒலிக்கின்றது.<ref>[https://www.washingtonpost.com/local/washingtons-welcome-for-francis-early-crowds-prayers-and-songs/2015/09/23/263141e8-61e0-11e5-b38e-06883aacba64_story.html?wpmm=1&wpisrc=nl_evening புலம்பெயர்ந்து குடியேறுவோரை வரவேற்றல் பற்றி திருத்தந்தை பிரான்சிசு]</ref>
 
====ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திருத்தந்தை பிரான்சிசு உரையாற்றுகின்றார்====
அரசியம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்ற இந்த உரையின்போது திருத்தந்தை அமெரிக்கா என்பது ஒரு பெருநிலம். அதில் வடக்கு நோக்கிச் சென்று வேலை வாய்ப்புத் தேடுவோரை, புலம்பெயர்ந்து வருவோரை கைவிரித்து ஏற்கவேண்டும் என்றார் திருத்தந்தை.
 
அமெரிக்க வரலாற்றில் சிறப்பு மிக்க மனிதர்களாக விளங்கிய ஆபிரகாம் லிங்கன், மார்ட்டின் லுத்தர் கிங், டோரதி டே, தாமஸ் மெர்ட்டன் ஆகிய நால்வரைப் பெயர் சொல்லிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிசு, அந்த வரலாற்று உணர்வோடு ஐக்கிய அமெரிக்க நாட்டு மக்கள் செயல்படுவது உலக அமைதிக்கும், புவியுலகப் பாதுகாப்புக்கும் தேவை என்றார். ஆபிரகாம் லிங்கன் அடிமைமுறையை ஒழிக்க பாடுபட்டார். மார்ட்டின் லுத்தர் கிங் கருப்பு இன மக்களின் சம உரிமைக்காக உழைத்தார். டோரதி டே என்பவர் சமூக நீதிக்காகவும் உழைப்பாளர் வளர்ச்சிக்காகவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார். தாமஸ் மெர்ட்டன் என்பவர் வன்முறை களைந்து, பல்சமய உரையாடல் வழி மக்களிடையே நல்லிணக்கம் வளர வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தகைய பெருமனிதர்களின் வழிவருகின்ற ஐக்கிய அமெரிக்க நாட்டு மக்கள் தங்கள் வரலாற்றுப் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிசு வலியுறுத்தினார்.<ref>[http://wgntv.com/2015/09/24/read-the-full-transcript-of-pope-francis-address-to-congress/ ஐக்கிய அமெரிக்க நாட்டு நாடாளுமன்றத்தில் பிரான்சிசு உரை]</ref>
 
====ஹஜ் திருப்பயண நிகழ்வில் இறந்தோருக்கு இரங்கல்====
செப்டம்பர் 24, வியாழக்கிழமை மாலையில் திருத்தந்தை பிரான்சிசு நியூயார்க் நகரில் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட புனித பாட்ரிக் பெருங்கோவில் வழிபாடு நடத்தினார். அப்போது தம் உரையைத் தொடங்குமுன், அவர் வியாழன் காலையில் மெக்காவில் ஹஜ் பயணம் சென்ற முஸ்லிம்களும் சுமார் 700 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தற்கு இரங்கல் தெரிவித்தார். அவர் பின்வருமாறு கூறினார்: “இசுலாமியருக்குப் புனித நாளான தியாகத் திருநாளான இன்று அனைவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில், இன்று மெக்காவில் உயிரிழந்தோரை நினைத்து இரங்கல் தெரிவிக்கின்றேன். இத்துயரத்தில் நானும் பங்கேற்கின்றேன். இறைவனை நோக்கி மன்றாட்டுகளை எழுப்புகின்றேன்.” <ref>[http://www.cnn.com/2015/09/24/middleeast/stampede-hajj-pilgrimage/ இசுலாமியரின் தியாகத் திருநாளன்று உயிரிழந்தோரை நினைந்து பிரான்சிசு இரங்கற் செய்தி]</ref>
 
====ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவையில் திருத்தந்தை பிரான்சிசின் உரை====
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1923397" இருந்து மீள்விக்கப்பட்டது