யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Adding wikilink(s)
வரிசை 8:
 
==மாநாடுகள்==
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் தமது ஆண்டு விழாக்களை வெகு விமரிசையாகக் கொண்டாடி வந்தனர். [[ஐசாக் தம்பையா]], [[சுவாமி விபுலாநந்தர்]] போன்றோர் இவர்களின் விழாக்களுக்குத் தலைமை தாங்கி ஊக்குவித்தனர். தென்னிலங்கையில் இருந்தும் [[சிங்களம்|சிங்கள]]ப் பெரியார்களும், அரசியல்வாதிகளும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளைஞர்களின் பல முற்போக்குக் கொள்கைகள் காரணமாக பல சிங்களத் தலைவர்களின் ஆதரவை இளைஞர் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது. [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]] இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு முதற் தடவையாக இலங்கைக்கான சமஷ்டி அரசியலமைப்பை முன்வைத்து உரையாற்றினார்.
 
[[1927]] ஆம் ஆண்டு மாநாட்டில் [[மகாத்மா காந்தி]] கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் [[சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி|சி. இராசகோபாலாச்சாரி]], எஸ். சத்தியமூர்த்தி, போன்ற பல இந்திய விடுதலைப் போராட்டப் பெரியார்கள் வருகை தந்து [[கீரிமலை]], யாழ்ப்பாண முற்றவெளி, ரிட்ச்வே மண்டபம் போன்ற இடங்களில் பிரசாரக் கூட்டங்களை நடத்தினார்கள்<ref name="north">குலரத்தினம், க. சி., ''நோத் முதல் கோபல்லவா வரை'', சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008</ref>. [[1931]] இல் இடம்பெற்ற யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் மாநாட்டை இந்திய காங்கிரஸ் சோசலிஸக் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான [[கமலாதேவி சட்டோபத்தியாயா]] திறந்து வைத்து உரையாற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணம்_இளைஞர்_காங்கிரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது