சாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 69:
==நுண்கணிதம்==
[[File:Tangent function animation.gif|right|frame|வளைகோட்டின் மீதுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் வளைகோட்டிற்கு வரையப்படும் தொடுகோட்டின் சாய்வுக்குச் சமமாக, அப்புள்ளியில் காணப்படும் [[வகைக்கெழு]] உள்ளது. குறிப்பு: புள்ளியிடப்பட்ட பச்சை நிறக் கோடாகத் [[தொடுகோடு]] உள்ளபோது வகைக்கெழு நேர் எண்ணாகவும், புள்ளியிடப்பட்ட சிவப்பு நிறக் கோடாகத் தொடுகோடு உள்ளபோது வகைக்கெழு எதிர் எண்ணாகவும், கருப்பு நிற அழுத்தமான கோடாக தொடுகோடு உள்ள இடங்களில் சாய்வு பூச்சியமாகவும் உள்ளதைக் காணலாம்.]]
[[வகைநுண்கணிதம்வகை நுண்கணிதம்|வகைநுண்கணிதத்தில்வகை நுண்கணிதத்தில்]] சாய்வு முக்கியமான ஒரு கருத்துரு. நேரியலற்ற சார்புகளுக்கு அதன் மாறுவீதம் வளைகோட்டின் மீது மாறுபடுகிறது. ஒரு வளைகோட்டின் மீதமையும் ஒரு புள்ளியில் காணப்படும் வகைக்கெழுவானது, அப்புள்ளியில் வளைகோட்டிற்கு வரைப்படும் தொடுகோட்டின் சாய்விற்குச் சமம். எனவே ஒரு வளைகோட்டின் மீதமையும் ஒரு புள்ளியில் காணப்படும் வகைக்கெழு, அப்புள்ளியில் வளைக்கோட்டுச் சார்பின் மாறுவீதமாகும்.
 
வளைகோட்டின் மீதுள்ள இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட ''x'' , ''y'' -அச்சுக்களின் வழியான தூரங்கள் முறையே Δ''x'' , Δ''y'' எனில் அவ்விரு புள்ளிகளை இணைக்கும் [[வெட்டுக்கோடு|வெட்டுக்கோட்டின்]] சாய்வு:
வரிசை 78:
 
எடுத்துக்காட்டாக, ''y'' = ''x''<sup>2</sup> என்ற வளையின் புள்ளிகள் (0,0) , (3,9) இரண்டையும் இணைக்கும் வெட்டுக்கோட்டின் சாய்வு 3. [[இடைமதிப்புத் தேற்றம்|இடைமதிப்புத் தேற்றப்படி]], இவ்வளைகோட்டிற்கு {{nowrap|1=x = {{frac|3|2}}}} புள்ளியில் தொடுகோட்டின் சாய்வும் 3.)
 
Δ''y'' , Δ''x'' இன் அளவுகள் பூச்சியத்தை அணுகுமாறு, இரு புள்ளிகளையும் ஒன்று மற்றொன்றை நெருங்குமாறு நகர்த்தும்போது வெட்டுக்கோடு கிட்டத்தட்ட ஒரு தொடுகோடாக மாறும். எனவே அந்நிலையில் வெட்டுக்கோட்டின் சாய்வும் தொடுகோட்டின் சாய்வை அணுகும். [[வகை நுண்கணிதம்|வகை நுண்கணிதத்தைப்]] பயன்படுத்தி Δ''y'' , Δ''x'' இன் மதிப்புகள் [[0 (எண்)|0]] ஐ அணுகும்போது Δ''y''/Δ''x'' [[சார்பு எல்லை|எல்லை]] மதிப்பைக் காணலாம். இந்த எல்லையின் மதிப்பே தொடுகோட்டின் சாய்வு. ''y'' இன் மதிப்பு ''x'' ஐச் சார்ந்தது எனில், Δ''x'' மட்டும் [[0 (எண்)|0]] ஐ அணுகுவதாகக் கொண்டு Δ''y''/Δ''x'' இன் எல்லை மதிப்பைக் கணக்கிட்டால் போதுமானது. எனவே தொடுகோட்டின் சாய்வு Δ''x'' பூச்சியத்தை அணுகும்போதான Δ''y''/Δ''x'' இன் எல்லை மதிப்பு. [[வகையிடல்]] எனப்படும் இவ்வெல்லை மதிப்பு ''dy''/''dx'' எனக் குறிக்கப்படுகிறது.
 
:<math>\frac{dy}{dx} = \lim_{\Delta x \to 0}\frac{\Delta y}{\Delta x}</math>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சாய்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது