மணிலால் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
'''மணிலால் காந்தி''' (ஆங்கிலம்: Manilal Mohandas Gandhi) (28 அக்டோபர் 1892 – 5 ஏப்ரல் 1956) <ref>http://lccn.loc.gov/n90712835</ref><ref>Dhupelia-Mesthrie: ''Gandhi’s Prisoner? The Life of Gandhi’s Son Manilal'', p. 384</ref>, [[மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி]], [[கஸ்தூரிபாய் காந்தி]] இணையரின் இரண்டாவது மகனாவார். மணிலால் [[ராஜ்கோட்|இராஜ்கோட்டில்]] பிறந்தார். 1897இல் முதன் முறையாக [[தென்னாப்பிரிக்கா]] சென்று, டர்பனுக்கு அருகில் உள்ள போனிக்சு ஆசிரமத்தில் சிறிதுகாலம் இருந்தார். பிறகு [[இந்தியா]] திரும்பினார். 1917இல் மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற மணிலால், போனிக்சு ஆசிரமத்தில் குசராத்தி-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்ட ’இந்தியன் ஒபீனியன்’ என்ற வார இதழில் பணியாற்றினார். 1918இல் அந்த இதழ் தொடர்பான பெரும்பங்கு பணிகளை மேற்கொண்ட மணிலால் , 1920-ல் அதன் ஆசிரியர் ஆனார். தன் தந்தைபோலவே நிறவெறி ஆட்சியாளர்களால் மணிலால் பலமுறை சிறை சென்றார். அவர் இறந்த 1956-ம் ஆண்டுவரை அவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.
 
1927-ல் மணிலால் சுசிலா மஷ்ருவாலா என்பவரை மணந்தார். இவர்களுக்கு சீதா (1928), இலா (1940) என இரு பெண் குழந்தைகளும், [[அருண் காந்தி]] (1934) என்கிற மகனும் ஆவர். அருண், இலா ஆகியோர் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆவர். சீதாவின் மகளான உமா டி.மெஸ்திரி அண்மையில் மணிலால் வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிட்டார். <ref>Uma Dhupelia Mesthrie, ''Gandhi’s Prisoner? The Life of Gandhi’s Son Manilal''. (Permanent Black: Cape Town, South Africa, 2003).</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மணிலால்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது