உறவுமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
தனி மனிதர்களை [[சமுகக் குழு|சமூகக் குழுக்களாக]] ஒழுங்கு படுத்துவதற்கான மிகவும் அடிப்படையான அம்சம் '''உறவு முறைஉறவுமுறை''' ஆகும். ஆரம்பத்தில் இது [[உயிரியல்]] மரபுவழியால் தீர்மானிக்கப்படுவதாகக் கருதப்பட்டது.
 
ஒரு மனிதர்கள் பிறக்கும்போதே [[தாய்]], [தந்தை]], [[சகோதரர்கள்]] மற்றும் பல தாய்வழி, தந்தைவழி உறவினர்கள் எனப் பல உறவினர்கள் இருப்பார்கள். அவர்கள் வளர்ந்து மணம் செய்யும்போது அவர்களின் துணைவர்கள் வழியிலும் புதிய உறவுகள் சேர்கின்றன. [[பிள்ளை|பிள்ளைகள்]] பிறக்கும்போது உறவினர் வட்டம் விரிந்து கொண்டு செல்கின்றது. ஆயினும் ஒருவரைப் பொறுத்து அமையும் உறவுகள் எல்லாமே ஒரே விதமானவை அல்ல. சில மற்றவற்றை விட முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. சில உறவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கின்ற அதே வேளை வேறு சில மேம்போக்கானவையாக இருக்கின்றன.
 
==உருவாகும் விதத்தின் அடிப்படையில் உறவுகளின் வகைகள்==
ஒருவருடைய தாய், தந்தை, [[பாட்டன்]], [[பாட்டி]], [[பூட்டன்]], [[பூட்டி]], பிள்ளைகள், [[பேரப்பிள்ளை|பேரப் பிள்ளைகள்]], சகோதரர் ஆகியோர் [[உயிரியல்]] முறையில் தொடர்பானவர்கள். இவர்களுடைய உறவுகள் [[இரத்த உறவு]] எனப்படுகின்றது. ஏற்கெனவே இரத்த உறவினரல்லாத ஒருவரை மணம் செய்யும் போது அவருடைய [[கணவன்]] அல்லது மனைவியுடன் ஏற்படும் புதிய உறவு முறை [[மண உறவு]] ஆகும். அது மட்டுமன்றி [[மனைவி]] அல்லது கணவனுடைய உறவினர்களும் இவருக்கு உறவினராகின்றார்கள். இதுவும் மண உறவின் வகைப்பட்டதே. தவிர ஒருவரைத் தத்து எடுத்துக்கொள்வதன் மூலமும் உறவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய உறவுகள் [[புனைவியல் உறவு]] எனப்படும்.
 
==நெருக்கத்தின் அடிப்படையில் உறவின் வகைகள்==
இன்னொருவர் வழியாக அல்லாது ஒருவருடன் நேரடியாக உறவு உள்ளவர்கள் [[முதல் நிலை உறவினர்|முதல் நிலை உறவினர்கள்]] ஆவர். பெற்றோர், உடன் பிறந்தோர், பிள்ளைகள் என்போர் முதல் நிலை உறவினர் தகுதியைப் பெறுகின்றனர். இந்த முதல் நிலை உறவினரின் முதல் நிலை உறவினர் ஒருவருக்கு இரண்டாம் நிலை உறவினராவர். எடுத்துக்காட்டாகப் பேசுனரின் தந்தையின் முதல் நிலை உறவினரான அவருடைய தந்தை பேசுனருக்கு இரண்டாம் நிலை உறவினராகும். இம் முறையில் பெற்றோரின் பெற்றோர், பிள்ளைகளின் பிள்ளைகள், உடன் பிறந்தோரின் பிள்ளைகள் போன்றோர் பேசுனருக்கு இரண்டாம் நிலை உறவினர் ஆகின்றார்கள். இவ்வாறே பேசுனரின் இரண்டாம் நிலை உறவினரின் முதல் நிலை உறவினர் பேசுனருக்கு மூன்றாம் நிலை உறவினர் ஆவர். இவ்வாறே உறவுமுறையில் நான்காம், ஐந்தாம் நிலைகளும் ஏற்படுகின்றன. எனினும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் பொதுவாகத் தூரத்து உறவினர்கள் என்று குறிப்பிடப் படுவார்கள்.
 
==மரபு முறைமையும், உறவுமுறையும்==
மேலே கண்டவாறு பல் வேறு விதமாகவும், பல மட்டங்களிலும் உறவுகள் அமைந்தாலும், இத்தகைய உறவுகளின் முக்கியத்துவம் வேறு பல அடிப்படைகளையும் சார்ந்துள்ளது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/உறவுமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது