சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 126:
வேலப்ப தேசிக மூர்த்திகள் கோமதியம்மையின் திருமுன்பு ஒரு மந்திரச் சக்கரத்தைப் பதித்தருளினார். அச்சக்கரத்திற்குக் கோமதியம்மை தந்தருளிய வல்லமையினாலே இன்றும் அதனருகில் வரும் ஆடாத பேயும் ஆடுகின்றது. தீராத நோயும் தீர்ந்து போகின்றது. இந்தத் தேசிக மூர்த்திகள்
சங்கரன்கோவிலிலே வழிபாடியற்றி இருக்கும்போது ஒரு புரட்டாசி மாத மூல நாளிலே சங்கரனார் திருவடிமலர் சேர்ந்து பேரின்பம் எய்தினார். மேற்கு வீதியில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வீற்றிருந்து இன்றும் அருள்பாலித்து வருகின்றார். ஆண்டுதோறும் குருபூஜையும் சமபந்தி போஜனமும் இன்றும் தவறாமல் நடைபெற்று வருகின்றது., . .
 
== சங்கரன்கோவில் சிறுகுறிப்பு :==
1. இறைவன் பெயர் : ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி மற்றும் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி
2. இறைவி பெயர் : ஸ்ரீ கோமதி அம்பிகை (வேறு பெயர்கள் : சங்கரி, ஆவுடைய நாயகி , மனோன்மணி , வாளைகுமாரி மற்றும் மஹாயோகினி )
3. உற்சவர் : ஸ்ரீ உமா மகேஸ்வரர் .
4. விநாயகர் : சித்தி விநாயகர் , சர்ப்ப விநாயகர் , புன்னைவன விநாயகர் .
5. முருகர் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சஹித ஸ்ரீ ஷண்முகர் .
6. பைரவர் : மஹா கால சர்ப்ப பைரவர்
7. ஸ்தல துர்க்கை : ஸ்ரீ விஷ்ணு துர்க்கை (தெற்கு நோக்கி தரிசனம்)
8. தீர்த்தம் : நாக சுனை தீர்த்தம் , சங்கர தீர்த்தம் , கௌரி தீர்த்தம் , இந்திர தீர்த்தம் , அகஸ்திய தீர்த்தம் , சர்வ புண்ணிய கோடி தீர்த்தம்(அம்பிகையின் அபிஷேக தொட்டி )
9. ஸ்தல விருட்சம் : புன்னை மரம்
10. மேலும் இங்கு ஸ்ரீ சங்கர நாராயணர் சந்நிதியில் ஒரு வெள்ளி பேழையில் ஸ்படிக லிங்கமான ஸ்ரீ சந்திர மௌலீச்வர லிங்கம் உள்ளது . இதற்க்கு காலை வேளையில் தினமும் அபிஷேகம் உண்டு . இந்த லிங்கத்தை மறைந்த சிருங்கேரி பெரியவர் இந்த கோவிலுக்கு வழங்கினார் . மேலும் மறைந்த காஞ்சி மஹா பெரியவர் இங்கு தங்கி சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்துள்ளார்கள் .
11. பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்களில் இது பிரிதிவி அதாவது மண் ஸ்தலமாகும் .
12. திருவிழாக்கள் : ஆடி தபசு பிரம்மோத்சவம் (12 நாட்கள்) , சித்திரை பிரம்மோத்சவம் (10 நாட்கள்) , ஐப்பசி திருக்கல்யாண திருவிழா (12 நாட்கள்), மார்கழி திருவாதிரை திருவிழா (10 நாட்கள்) , நவராத்திரி விழா (9 நாட்கள்) , விநாயகர் சதுர்த்தி , ஸ்கந்த சஷ்டிவிழா , வசந்த விழா , எண்ணெய் காப்பு உற்ச்சவம். வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு .
13. ஸ்ரீ சாஸ்தா பீடம் , சப்த மாதாக்கள் , ஸ்ரீ சரஸ்வதி , ஸ்ரீ பிரம்மா , ஸ்ரீ சனீச்வரன் தனி சன்னதி , நாகராஜர் தனி சன்னதி , நாகராஜர் புற்றுகோவில் , யானை மாடம் (கோமதி என்ற யானை இங்கு வளர்கிறது) , தனி நடராஜர் சன்னதி ,போன்றவை இங்கு உள்ளன . 125 அடி ராஜ கோபுரம் கோவிலின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது .
14. மேலும் உள்ள சிறப்பு : இங்கே சுவாமி கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக ஸ்ரீ நரசிம்ஹர் கோயில் கொண்டுள்ளார். தாயார் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் . ஸ்ரீ லக்ஷ்மி நாராயணருக்கும் சன்னதி உள்ளது . ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சன்னதியின் பின்புறம் சித்திர வடிவமாய் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் கொண்டுள்ளார் ..
== ஸ்தலம் அமைதுள்ள இடம் ஊர் மற்றும் பயண விவரங்கள் :==
சங்கரன்கோவில் ராஜபாளயதிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலைக்கும் , கோவில்பட்டியிலிருந்து தென்காசி-கொல்லம் சாலைக்கும் இணைப்பாக (ஜன்க்ஷனாக) உள்ளது. சென்னையிலிருந்து செங்கோட்டை ரயில் பாதையில் ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு அடுத்த ரயில் நிறுத்தும் நிலையமாக உள்ளது . இந்த வழியே பொதிகை தொடர்வண்டி நின்று செல்கிறது . மேலும் செங்கோட்டையிலிருந்து மதுரைக்கும் , மதுரையிலிருந்து செங்கோட்டைக்கும் மூன்று + மூன்று மொத்தம் 6 தடவை பயணிகள் ரயில்போக்குவரத்து உள்ளது . சங்கரன்கோவிலில் இருந்து மதுரை விமான நிலையம் 139 கிலோமீட்டர் தொலைவிலும் , திருவனத்தபுரம் சர்வதேச விமான நிலையம் 163 கிலோமீட்டர் தொலைவிலும் ,தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் 96.2 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன .
 
== மேற்கோள்கள் ==