செ. சுந்தரலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள் using HotCat |
|||
வரிசை 54:
சுந்தரலிங்கம் அரசியலில் ஈடுபாடு கொண்டு 1940 ஆம் ஆண்டில் தனது பணியில் இருந்து ஓய்வு எடுத்தார். [[இலங்கை அரசாங்க சபை]]க்கு 1943, 1944 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் 1947 இல் நடந்த [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|நாடாளுமன்றத் தேர்தலில்]] [[வவுனியா தேர்தல் தொகுதி|வவுனியா]]வில் [[சுயேட்சை (அரசியல்வாதி)|சுயேட்சை]]யாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கையின் முதலாவது [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றத்துக்குத்]] தெரிவானார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1947%20GENERAL%20ELECTION.PDF|title=Result_of_Parliamentary_General_Election_1947|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> அன்றைய [[ஐக்கிய தேசியக் கட்சி]] அரசில் இணைந்து 1947 செப்டம்பர் 26 இல் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரானார். இலங்கையின் 11 விழுக்காடு மக்களுக்கு (இந்தியத் தமிழருக்கு) குடியுரிமையைப் பறிந்த்த சர்ச்சைக்குரிய [[இலங்கைக் குடியுரிமைச் சட்டம்|இலங்கைக் குடியுரிமைச் சட்டத்துக்கு]] ஆதரவாக அன்று வாக்களித்தார். ஆனாலும், 1948 திசம்பர் 10 இல் சமர்ப்பிக்கப்பட்ட "இந்தியப் பாக்கித்தானிய குடிமக்கள் குடியுரிமைச் சட்டம்" நாடாளுமன்றத்தில் வாக்களிப்புக்கு விடப்பட்ட போது வெளிநடப்புச் செய்தார். அன்றைய [[இலங்கை பிரதமர்]] [[டொன் ஸ்டீபன் சேனாநாயக்க|டி. எசு. சேனநாயக்கா]] இவரது நடத்தை குறித்துக் கேள்வி எழுப்பியதை அடுத்து, தனது அமைச்சர் பதவியைத் துறந்தார்.
1951 ஆம் ஆண்டில் [[இலங்கையின் தேசியக்கொடி]]யாக சிங்களக் கொடி ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து சுந்தரலிங்கம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து 1951 அக்டோபர் 31 இல் நடந்த இடைத்தேர்தலில்
1959 ஆம் ஆண்டில் "ஈழத் தமிழ்ர் ஒற்றுமை முன்னணி" என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாததால் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|1960 மார்ச்சு]] தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு [[தா. சிவசிதம்பரம்]] என்ற சுயேட்சை வேட்பாளரிடம் தோற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=Department of Elections, Sri Lanka}}</ref>
|