"மனோரமா (நடிகை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,968 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
== ஆரம்பகால வாழ்க்கை ==
இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசி 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள]] [[மன்னார்குடி]]யில் பிறந்தவர்.<ref name="maalaimalar.com">{{cite web|url=http://cinema.maalaimalar.com/2013/11/29222621/manorama-cinema-history.html|title=வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்ட மனோரமா: 1,300 படங்களில் நடித்து 'கின்னஸ்' சாதனை |publisher=cinema.maalaimalar.com|accessdate=2014-07-20}}</ref> இவரது சிறு வயதிலேயே வறுமையின் காரணமாக [[காரைக்குடி]] அருகே உள்ள [[பள்ளத்தூர்]] என்ற ஊருக்கு குடிபெயர்ந்தனர்.<ref>{{cite web|url=http://www.hinduonnet.com/thehindu/lf/2002/02/27/stories/2002022700840200.htm |title=The Hindu : Evening of stardust memories |publisher=Hinduonnet.com |date=27 பிப்ரவரி 2002 |accessdate=2010-05-26}}</ref> 6 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.<ref>தினமணி தீபாவளி மலர்,1999,பக்கம் 36</ref> தனது 12ஆவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார்.<ref>[http://www.nilacharal.com/enter/celeb/manorama.html A Tamil entertainment ezine presenting interesting contents and useful services]. Nilacharal. Retrieved on 2011-07-27.</ref> "பள்ளத்தூர் பாப்பா" என அழைக்கப்பட்ட அவர்<ref name=hindu/> நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட்டினர்.
 
ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் [[புதுக்கோட்டை]]யில் [[எஸ். எஸ். ராஜேந்திரன்]] நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் ''மணிமகுடம்'',<ref name=hindu/> ''தென்பாண்டிவீரன்'', ''புதுவெள்ளம்'' உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார்.<ref name="maalaimalar">{{cite web|url=http://cinema.maalaimalar.com/2013/12/01202352/actress-manorama-cinema-histor.html|title=நடிகை மனோரமா காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது &#124;&#124; actress manorama cinema history|publisher=cinema.maalaimalar.com|accessdate=2014-07-20}}</ref> ராஜேந்திரன், [[தேவிகா]] நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது.<ref name=hindu/>
 
==திருமணம்==
1,15,094

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1932131" இருந்து மீள்விக்கப்பட்டது