58
தொகுப்புகள்
பண்டிதர் '''கா. செ. நடராசா''' [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] எழுத்தாளரும், ஆசிரியரும், கவிஞரும் ஆவார். இணுவையூர் செ. நடராசன் என்ற பெயரில் எழுதியவர்.<ref name="Noolaham">{{cite web | url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D | title=இணுவை அப்பர் | accessdate=13 அக்டோபர் 2015 | pages=பக். 77}}</ref>
==வாழ்க்கை
இவர் இணுவையம்பதியில் வாழ்ந்த செல்லையா சீனிக்குட்டி தம்பதிகளுக்கு மூத்த புதல்வனாக 21.03.1930 இல் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியைத் தனது பெரிய தந்தையராகிய சேதுலிங்கச்சட்டம்பியாரிடம் திண்ணைப்பள்ளிக்கூடத்திற் கற்றார். பின்னர் இணுவிற் சைவமகாஜனாக் கல்லூரியிற் தனது கல்வியைத் தொடர்ந்தார். பாடசாலை நேரம் தவிர்ந்த மற்றைய நேரங்களிற் தந்தையாருக்குத் துணையாக விவசாயத்திற்கும், சுருட்டுத் தொழிலுக்கும் செல்வார்.
== கல்வி ==
சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் சைவசித்தாந்தம், தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இவர் தனது இருபதாவது வயதில், வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலை ஆசிரியர் வித்துவான் சுப்பையா பிள்ளை அவர்களிடமும். பண்டிதர் வித்துவான் இ.திருநவுக்கரசு. பண்டிதர் இ. இராசலிங்கம் அவர்களிடமும் பண்டிதர் பரீட்சைக்குரிய பாடங்களைக் கற்றார்.▼
சுருட்டுக்கொட்டிலிலே இராமாயணம், மகாபாரதம், ஆகியவை பற்றிய அறிவைப் பூரணமாகப் பெற்றுக்கொண்டார். தனது மாமனாராகிய வடிவேற் சுவாமிகளிடம் வேதாந்தம், உபநிடதம், கைவல்யம், தமிழ்க்காவியங்கள், நளவெண்பா, திருக்குறள் ஆகியவற்றைக் கற்றார்.
▲சேதுலிங்கச் சட்டம்பியாரிடம் சைவசித்தாந்தம், தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இவர் தனது இருபதாவது வயதில், வண்ணார் பண்ணை நாவலர் பாடசாலை ஆசிரியர் வித்துவான் சுப்பையா பிள்ளை அவர்களிடமும். பண்டிதர் வித்துவான் இ.திருநவுக்கரசு. பண்டிதர் இ. இராசலிங்கம் அவர்களிடமும் பண்டிதர் பரீட்சைக்குரிய பாடங்களைக் கற்றார். கொழும்பு தமிழ் சங்கச் செயலாளர் தமிழவேள் கா.கந்தசாமி அவர்களிடம் சிலப்பதிகாரத்தைக் கற்றார்.
கொழும்பு தமிழ் சங்கச் செயலாளர் தமிழவேள் கா.கந்தசாமி அவர்களிடம் சிலப்பதிகாரத்தைக் கற்றார். 1952 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. அதை ஏற்றுக்கொண்டு மலையகம் சென்று டிக்கோயாவிலுள்ள இன்வரித் தமிழ் கலவன் பாடசாலையில் தனது ஆசிரியப்பணியை ஆரம்பித்தார். கற்பித்தல் நேரம் தவிர்ந்த மிகுதி நேரத்தைத் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் விடிவிற்காய் உழைப்பதிலும் செலவிட்டார். ▼
1968 இல் வெளிவாரியாகத் தனது பட்ட மேற் படிப்பைத் தொடங்கினார். 1972 இல் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியானார். (B.A) <ref name=":0" />
== தொழில் ==
▲
1965 இல் ஆசிரியர் பயிற்சிக்காக யாழ்/கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் சென்றார். பயிற்சியை முடித்துக் கொண்டு பயிற்றப்பட்ட தமிழாசிரியராக மீண்டும் 1967 ஆம் ஆண்டு பூண்டுலோயா மகாவித்தியாலயத்தலும், 1968 இல் லிந்துல சிங்கள தமிழ் மகாவித்தியாலயத்திலும் தனது பணியைத் தொடர்ந்தார். 1974 இல் யாழ்/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி ஆசிரியராக நியமனம் பெற்றார். <ref name=":0" />
== அரசியலீடுபாடு ==
இவர் அரசியலிலும் ஈடுபாடு கொண்டவர். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற பாத யாத்திரையோடு இவரின் அரசியற் பணி ஆரம்பமாகின்றது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த காலம். இணுவிற் கந்தசுவாமி கோயில் முன்றலில் தமிழரசுக் கட்சியின் இளைஞர் மகாநாடு ஒன்று நடைபெற்றது (1956) அந்த மகாநாட்டில் தமிழர்களுடைய சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை முன் வைத்து காங்கேசன் துறையிலிருந்து திருமலை வரை பாதயாத்திரை ஒன்றை நடாத்தவேண்டும் என்று உறுதி பூணப்பட்டது. அதன்படி கோப்பாய் எம்பி வன்னியசிங்கம், செனற்றர் இ.எம்.பி.நாகநாதன் தலைமையில் காங்கேசன் துறையிலிருந்தும், கந்தசாமி ஆசிரியர் தலைமையில் இணுவிலில் இருந்தும் புறப்பட்ட இளைஞர் அணியுள் ஒருவராக நடராசாவும் இணைந்து கொண்டார். இதன் எதிரொலியாக மலையகத்தின் பல இடங்களிலும் சொற்பொழிவுகளை ஆற்றினார். இவர் மக்களிடையே ஆற்றிய சொற்பொழிவுகளில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்களே தமிழா விழித்தெழு என்னும் நூலாக உருவாக்கம் பெற்றது.
== பேச்சாளராக ==
நடராசா ஒரு சிறந்த பேச்சாளராகவும் விளங்கினார். தமிழ் ஆர்வலர்கள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்கி 1960, 1961 ஆம் ஆண்டுகளில் சிலப்பதிகாரம் பற்றியதோர் தொடர் சொற்பொழிவினை கற்றன் ஹைலன்ஸ் கல்லூரியில் நிகழ்த்தி வந்தார். இச்சொற்பொழிவுகளை மலையகத்தில் இருந்து வெளிவந்த குறுஞ்சி மலர் என்னும் பத்திரிகை பிரசுரித்து வந்தது. சிலப்பதிகாரம் பற்றிய இந்தச் சிந்தனைகளே இளங்கோவின் கனவு என்ற நூலாகத் தோற்றம் பெற்றது. இக்காலத்தில் நாவலப்பிட்டியில் நா.முத்தையா அவர்கள் ஆசிரியராக இருந்த ஆத்மஜோதி என்ற சஞ்சிகையில் சமயக்கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். இது தவிர இலங்கை வானொலியில் சைவநற்சிந்தனை வழங்கியுள்ளார். நாட்டார் வழக்கியல், சமூக சாகரம் போன்ற நிகழ்வுகளிற் கலந்து கொண்டு தொடர் உரையாற்றியுளார்.
== திருமணம் ==
1961 ஆம் ஆண்டு இணுவிலைச் சேர்ந்த கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் புதல்வி பரமேஸ்வரியை சீர்திருத்த முறையில் மிகவும் எளிமையாக மணந்து கொண்டார். இவர்களுக்கு குமரன், கார்த்தியாயினி, குருபரன், கார்த்திகேயன் ஆகிய பிள்ளைகள் உள்ளனர்.
==எழுதிய நூல்கள்==
|
தொகுப்புகள்