"தேயிலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தேயிலை''' (''Tea'', ''Camellia sinensis'') ஒரு பசுமைத் [[தாவரம்]]. இது ஒரு வாணிகப் பயிராகும் இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் [[இலை]]களையும் கொய்து அதனை உலர வைத்து, [[நொதிப்பு|நொதிக்கச்]] செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி [[தேனீர்|தேநீர்]] தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலைத்திணை தொடக்கத்தில் கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு [[ஆசியா]]வில் காணப்பட்டது. [[வெள்ளைத் தேயிலை]], [[பச்சைத் தேயிலை]], [[ஊலோங் தேயிலை]], [[கறுப்புத் தேயிலை]] போன்ற வெவ்வேறு வகையான தேயிலைகள் இவ்வின நிலைத்திணையிலிருந்து பெறப்பட்டாலும், பக்குவப்படுத்தல் முறையில் வேறுபடுகின்றன. [[குக்கிச்சா]]வில் இவ்வின நிலைத்திணையின் இலைகளுக்குப் பதிலாக கொப்பு, தண்டு என்பவற்றைப் பக்குவப்படுத்திச் செய்யப்படுகிறது.
 
இந்நிலைத்திணையின் [[இருசொற் பெயரீடு|இருசொற்பெயர்]] ''Camellia sinensis'' என்பதாகும், இங்கு ''sinensis'' என்பது [[இலத்தீன்]] மொழியில் [[சீனா|சீனாவைச் சேர்ந்த]] என்ற பொருள்படும். ''Camellia'' என்பது அருட்திரு. செரொக் காமெல் (1661-1706) என்ற [[இயேசு சபை]] பாதிரியாருடைய பெயரின் இலத்தீனாக்கப்பட்ட வடிவமாகும். அருட்திரு. செரொக் காமெல் தேயிலைச் செடியைக் கண்டுப்பிடிக்கவோ அல்லது பெயரிடவோ இல்லை எனினும் திணைவகையீட்டை உருவாக்கிய [[கரோலஸ் லின்னேயஸ்]] அறியப்பட்ட தாவரவியலாளரான அருட்திரு. செரொக் காமெல் அடிகள் அறிவியல்துறைக்குஅறிவியல் ஆற்றியதுறைக்காற்றிய சேவையை பாராட்டும் வகையில் இப்பேரினத்துக்கு இப்பெயரை இட்டார்.
 
== தேயிலைதேயிலையின் வரலாறு ==
தேயிலை முதலில் [[சீனா|சீனாவில்]] கண்டு பிடிக்கப்பட்டது.{{ஆதாரம்}} இதனை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவிற்கு [[புத்த மதம்|புத்த மதத்தைக்]] கற்க வந்த [[ஜப்பான்|ஜப்பானிய]] புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு 800 களில் தேயிலை ஜப்பானுக்குப் பரவியது.
ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாக [[இங்கிலாந்து]], [[பிரான்ஸ்]] போன்ற[[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. 1840-50 களில் [[இந்தியா|இந்தியாவிலிருந்தும்]] [[சீனா|சீனாவிலிருந்தும்]] வரவழைக்கப்பட்ட தேயிலை [[இலங்கை|இலங்கையில்]] சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு [[தென்கிழக்காசியா]] மற்றும் [[ஆப்பிரிக்கா]] போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1936648" இருந்து மீள்விக்கப்பட்டது