அரபுத் தமிழ் எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
சிNo edit summary
வரிசை 35:
குர்ஆனின் அரபுத் தமிழ் விரி உரைகளான தப்சீர் பத் ஹுல்கரீம், தப்சீர் பத் ஹுல் ரஹீம், புதூ ஹாதூர் ரஹ்மானியா பீதப்சீரி கலாமிர் ராப்பானியா ஆகியவை பிரசித்தி பெற்ற நூலாகும். இவை காயல்பட்டண்திலிருந்து வெளிவந்தவை. காயல்பட்டணம் ஷாம் சிஹாபுதீன் வலி அவர்கள் அரபுத் தமிழில் பல பாமாலைகள் இயற்றியுள்ளனர். கி. பி.1889 ஆம் ஆண்டில் "கஷ்பூர் ரான் பீ கல்பில் ஜான்" என்ற ஒரு வார ஏடும், கி பி 1906 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து "அஜாயிபுல் அக்பர் (செய்தி வினோதம்) என்று ஒரு வார ஏடும் வெளிவந்துள்ளன.
 
பொதுவாக ஆண்களைவிட பெண்கள் தாம் இவ்வரபுத் தமிழை அதிகமாக எழுதப் படிக்க தெரிந்திருந்தனர். அக்காலத்தில் கடிதங்கள் கூட அரபுத் தமிழில் எழுதப்பட்டு வந்தன. தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் இது பிரபல்யமாக இருந்தது. தமிழ்நாட்டில் இதில் பல பாரிசி, உருது சொற்கள் கலந்து விட்ட பொழுது இலங்கையில் இது தன் நிலைகுலையாது இருந்தது. கி.பி 8 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரை அரபுத் தமிழ் சிறப்புற்று விளங்கியது. அச்சுப் பொறி வந்தப் பின் இதன் மதிப்பு மங்கலாயிற்று. மேலும் இதில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் பேச்சு வழக்கில் உள்ள சாதாரண சொற்களாக இருந்ததாலும் இதனுடைய நடையும், பழங்காலததாயிருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சில முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்கள் இதனை வன்மையாக தாக்கினர். இழித்தும் கூறினார். அதன் காரணமாகவும் அரபி மதராசாக்களில் இது வழகொழிந்ததால் தமிழ்நாட்டில் முஸ்லிம் பொது மக்களிடத்திலும், பெண்களிடத்திலும் இந்நூல்களை படிக்கும் ஆர்வம் அற்று பொய் விட்டது. எனினும் இலங்கை வாழ் முஸ்லிம்களிடம் இது இன்றும் மதிப்புடன் விளங்குகிறது." அரபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்" என்று இதனை அங்குள்ள முஸ்லிம்கள் போற்றுகின்றனர்.{{cn}} அங்கு தோன்றிய செய்கு முஸ்தபா ஆலிம் வலி " பதுகுர் ரஹ்மான் பி தப்சீர் இல் குரான்" என்ற பெயருடன் அரபுத் தமிழில் திருக்குரானுக்கு ஒரு விரிவுரை எழுதி உள்ளார். அதில் ஐந்து அத்தியாயங்களே அச்சில் வெளிவந்துள்ளன.
[[படிமம்:Arwi-lan1.png|thumbnail]]
 
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கடல்வழி வணிகத்துக்குத் தமிழகம் வந்த முஸ்லீம் வணிகர்கள் இஸ்லாம் தோன்றிய காலத்திலேயே தமிழகத்தின் பெருவழி என்றழைக்கப்பட்ட பாதையில் கள்ளிக்கோட்டையில் இருந்து புலிகட் வரை பரவி வாழ்ந்து தமிழக வ்ணிகமும் இஸ்லாமியக் கொள்கைகளும் கிழக்காசியாவில் பரவக் காரணமாக இருந்தார்கள். அவர்களே அறபிக் தமிழ் வரிவடிவத்தை உருவாக்கித் தென் தமிழகத்திலும் இலங்கையிலும் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து போற்றி வளர்த்து பள்ளிகளின் இளஞ் சிறார்களுக்கும் சிறூமிகளுக்கும் கற்பித்து வந்ததாக இணைப்பில் உள்ள ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/அரபுத்_தமிழ்_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது