"தஞ்சைவாணன் கோவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

907 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன)
{{unreferenced}}
'''தஞ்சைவாணன் கோவை''' [[பொய்யாமொழிப் புலவர்]] என்பவரால் இயற்றப்பட்ட ஒரு [[அகப்பொருட்கோவை]] நூலாகும். இது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நூல் தற்பொழுது [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை மாவட்டத்தில்]] உள்ள [[தஞ்சாக்கூர்|தஞ்சாக்கூரில்]] வாழ்ந்த தஞ்சைவாணன் என்னும் சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. <ref name="thanjai"> [[உ. வே. சாமிநாதையர்|சாமிநாதையர் உ.வே]], என் சரித்திரம்:அத்தியாயம்-51 சிதம்பரம்பிள்ளையின் கலியாணம் </ref> தஞ்சைவாணன், [[பாண்டிநாடுபாண்டிய நாடு|பாண்டிநாட்டைபாண்டிய நாட்டை]] ஆண்ட குலசேகர பாண்டியனின் படைத் தலைவனாகவும் அமைச்சராகவும் இருந்ததோடு, மாறை என்னும் நாட்டை ஆண்டு வந்ததாகவும் தஞ்சைவாணன் கோவை கூறுகிறது.
 
==நூலமைப்பு==
கோவை நூல்கள் அகப்பொருள் இலக்கியமாகவே எழுதப்படும் மரபுக்கு ஏற்ப இது தலைவன் தலைவியின் அகவாழ்க்கை பற்றியதாக அமைந்துள்ளது. இதற்கு ஒப்ப இது, களவியல், வரைவியல், கற்பியல் என்னும் மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று இயல்களிலும் உள்ள முப்பத்துமூன்று பிரிவுகளில் மொத்தம் 425 பாடல்கள் அடங்கியுள்ளன. இவற்றுள், களவியலில், 18 பிரிவுகளில் 280 பாடல்களும், வரைவியலில் 8 பிரிவுகளில் 86 பாடல்களும், கற்பியலில் 7 பிரிவுகளில் 59 பாடல்களும் அடங்குகின்றன. இந்நூல் முழுதும் [[கட்டளைக் கலித்துறை]] என்னும் பாவகையில் எழுதப்பட்டுள்ளது.
 
==சான்றடைவு==
<references/>
 
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
[[பகுப்பு: அகப்பொருள் இலக்கியம்]]
[[பகுப்பு: சிற்றிலக்கியம்]]
[[பகுப்பு: கோவை நூல்]]
[[பகுப்பு: அகப்பொருட்கோவை]]
2,413

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1938556" இருந்து மீள்விக்கப்பட்டது