கிருஷ்ணதேவராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 41:
 
==ஆளுமை==
இவரைப் பற்றி எழுதப்பட்டவற்றிலிருந்து, இவர் நடுத்தர [[உயரம்]] உடையவராக இருந்தார் என்றும், மகிழ்ச்சியான பண்புகளைக் கொண்டிருந்தார் என்றும் அறியப் படுகிறது. இவர் வெளிநாட்டு விருந்தினரை மதித்தார், சட்டத்தைப் பேணுவதில் கடுமையாக இருந்த இவர், அன்றாடம் பயிற்சி செய்வதன் மூலம் தனது உடற் தகுதியை உயர்ந்த நிலையில் வைத்திருந்தார். கிருஷ்ணதேவராயர் ஒரு சிறந்த நிர்வாகியாக மட்டுமன்றிச் சிறந்த தளபதியாகவும் விளங்கினார். தானே படைகளை முன்னின்று நடத்தியதோடு, காயமடைந்தவர்களுக்குத் தானே உதவும் பண்பும் அவனிடத்திற்அவரிடத்திற் காணப்பட்டது.
 
==படையெடுப்புக்களும், வெளிநாட்டுத் தொடர்புகளும்==
விஜயநகரப் படைகள் சென்ற இடமெல்லாம் வெற்றியைக் குவித்த, கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலம், அந் பேரரசின் வரலாற்றில் பெருமைக்குரிய பகுதியாகும். சமயங்களில், இப் பேரரசர், போர்த் திட்டங்களைச் சடுதியாக மாற்றியமைப்பதன் மூலம், தோல்விகளை வெற்றிகளாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இவரது ஆட்சிக்காலத்தின் முதற் பத்தாண்டுகள் நீண்ட முற்றுகைகளும், இரத்தம் சிந்திய படை நடவடிக்கைகளும், வெற்றிகளும் கொண்டதாக இருந்தது. இவர்இவரின் முக்கிய பகைவர்களாக, சாளுவ நரசிம்ம தேவ ராயன் காலத்திலிருந்தே தொடர்ச்சியான சண்டைகளில் ஈடுபட்டிருந்த [[ஒரிசா]]வின் [[கஜபதி]]கள், ஐந்து துண்டாகப் பிரிந்து விட்டாலும் தொடர்ந்தும் பேரரசுக்கு நெருக்கடி கொடுத்துவந்த பஹமானி சுல்தான்கள், வளர்ந்துவரும் கடல் வல்லரசாக இருந்துகொண்டு, கடல் வணிகத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போத்துக்கீசர்போத்துக்கீசியர் ஆகியோர் இருந்தனர். உம்மாத்தூர்த் தலைவர்கள், கொண்டவிடு ரெட்டிகள், புவனகிரி வேளமாக்கள் என்போரும் இடையிடையே பேரரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
 
==தக்காணத்து வெற்றிகள்==
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணதேவராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது