உஜ்ஜைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
 
== வரலாறு ==
உஜ்ஜயினி என்னும் பெயரில் இந் நகரம் பற்றிய குறிப்பு [[புத்தர்]] காலத்திலிருந்தே கிடைக்கிறது. அக்காலத்தில் இது [[அவந்திதேசம்|அவந்தி]] அரசின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்தில் மௌரியப் பேரரசனான [[அசோகர்]] [[மௌரியப் பேரரசு|மௌரியப் பேரரசின்]] மேற்கு மாகாண அரசப் பேராளனாக இருந்தபோது உஜ்ஜயினியிலேயே வாழ்ந்தான். மௌரியர் காலத்துக்குப் பின்னர் உஜ்ஜைனைச் [[சுங்கர்]]களும், [[சாதவாகனர்]]களும் ஆண்டனர். சிறிதுகாலம் சாதவாகனர்களும், [[மேற்குச்மேற்கு சத்திரபதிகள்]] என அறியப்பட்ட [[இந்தோ சிதியன் பேரரசு|சாகர்களும்]] இந்நகருக்காகப் போட்டியிட்டனர். [[சாதவாகனர்|சாதவாகன]] மரபு முடிவுக்கு வந்தபின்னர் கிபி 2-4 ஆம் நூற்றாண்டுகள் வரை இந் நகர் சாகர்களிடம் இருந்தது. [[குப்தப் பேரரசு|குப்தர்கள்]] சாகர்களிடமிருந்து கைப்பற்றிய பின்னர் இது குப்தப் பேரரசின் முக்கிய நகரங்களில் ஒன்றானது. [[விக்ரமாதித்யா|விக்கிரமாதித்தன்]] எனப்பட்ட [[இரண்டாம் சந்திரகுப்தன்|இரண்டாம் சந்திரகுப்தனின்]] மரபு வழித் தலைநகரமாக இது கருதப்பட்டது. இவனது அரசவையிலேயே [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] இலக்கியத்தின் ஒன்பது மணிகள் என்று கொள்ளத்தக்க [[புலவர்]]கள் ஒன்பதின்மர் இருந்ததாக அறியப்படுகிறது.
 
[[பெருங்கதை]] என்னும் நூலில் [[பிரச்சோதனன்]] என்னும் அரசன் இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>{{cite book | title= [[பெருங்கதை]] (4 தொகுதிகள்) | publisher= [[உ. வே. சாமிநாதையர்]] பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40 | author= [[கொங்குவேளிர்]] | year= கி.பி. 7 ஆம் நூற்றாண்டு | location= சென்னை | pages=}} உ.வே.சா. எழுதிய உதயணன் சரித்திரச் சுருக்கம்</ref>
"https://ta.wikipedia.org/wiki/உஜ்ஜைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது