ஆப்கானித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
'ஆப்கானித்தான்' என்பதன் நேரடிப்பொருள் -[[மொழிபெயர்ப்பு]]- ஆப்கானியரின் பூமி (நிலம்) என்பதாகும். இது 'அஃப்கான்' என்ற சொல்லில் இருந்து -தற்கால வழக்கு- மருவி வந்துள்ளது. பழ்சுட்டுன்-கள்(பட்டாணியர்கள்) இசுலாமியர் காலத்தில் இருந்து, இந்த 'அப்கான்' என்ற பதத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். டபிள்யு.கே ஃபிரைசர் டெய்லர், எம்.சி சில்லட் மற்றும் சில துறைசார் அறிஞர்களின் கருத்துப்படி, "அப்கான் என்ற சொல் முதன்முதலாக வரலாற்றில் கி.பி. 982 இல் 'அதூத்-அல்-அலாம்' என்ற கி பி 10ஆவது நூற்றாண்டு வரலாற்று நூலில்தான் காணப்படுகின்றது. ” இறுதிச் சொல்லான '-த்தான்' (ஸ்தான்) (நாடு, நிலம்) என்பது [[பாரசீக மொழி]]யில் இருந்து உருவாகியதாகும். ஆப்கான்லாண்ட் (Afghanland) என்ற ஆங்கிலச்சொல், 1781 முதல் 1925 வரை பாரசீகத்தை ஆண்ட 'குவாச்சார்' அரசவம்சத்திற்கும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திற்கும்]] இடையிலான பல்வேறு உடன்படிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
ஆயினும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெயர் உச்சரிப்பு முறையானது 18 ஆம் நூற்றாண்டில் [[அகமத்அகமது ஷா துரானி]] என்பவர் [[துராணிப் பேரரசு]] என்ற அரசை அமைத்ததில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இது பின்னர் 'அப்துர் ரகுமான் கான்' என்பவரால் இது அரச ஏற்புடைய பெயராக அறிவிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆப்கானித்தான் பெயர் ''குராசான்'' என்றே வழங்கப்பட்டது. இன்றைய ஆப்கானித்தானின் பெரும் நிலப்பகுதி குராசானையே மையமாகக் கொண்டுள்ளது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/ஆப்கானித்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது