அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
== இயற்கை அரசு ==
 
1651 ஆம் ஆண்டில், [[தாமசு ஆபிசு|தோமஸ் ஹோப்ஸ்]] (Thomas Hobbes) என்பவர் தனது புகழ்பெற்ற ''[[லெவியாதன்]]'' (Leviathan) என்னும் நூலை வெளியிட்டார். அதிலே, அரசின் தோற்றத்தை நியாயப்படுத்துவதற்கான தொடக்ககால மனித வளர்ச்சியின் மாதிரி (model) ஒன்றை முன் மொழிந்தார். இலட்சியத் தன்மை கொண்ட இயற்கையின் அரசு பற்றிய அவரது விளக்கத்தின்படி, ஒவ்வொரு மனிதனும், இயற்கையின் வளங்கள் தொடர்பில் சம உரிமை கொண்டிருந்ததுடன், அவ்வளங்களை அடைவதற்கு எத்தகைய வழியையும் பயன்படுத்துவதற்கான சுதந்திரத்தையும் பெற்றிருந்தார்கள். இவ்வாறான ஒரு ஒழுங்கு, எல்லோருக்கும் எதிராக எல்லோரும் போர் செய்யும் ஒரு நிலையை உருவாக்கியதாக ஹோப்ஸ் கூறுகிறார். மேலும், குறிப்பிட்ட பாதுகாப்புக்காக, ஒரு சமூக ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டு முழு அளவு உரிமையை விட்டுக்கொடுக்கவும் மனிதர்கள் தயாராக இருந்தார்கள் என அவர் குறிப்பிடுகின்றார். இத்தகைய சண்டைப் போக்குகளுக்கான தீர்வு, ஒரு மையப்படுத்தப்பட்ட [[ஆதிக்கவாதம்|ஆதிக்கவாத]] அரசொன்றை உருவாக்கமே என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்வரசையே அவர் ''லெவியாதன்'' என்று குறிப்பிட்டார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது