கரிம உலோக வேதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
'''கரிம உலோக வேதியியல்''' ''(Organometallic chemistry)'' என்பது [[கரிமச் சேர்மம்|கரிமச் சேர்மங்களுடன்]] [[உலோகம்| உலோகங்கள்]] சேர்ந்து உருவாக்கும் சேர்மங்களைக் குறித்து ஆய்வு செய்கின்ற [[அறிவியல்]] துறையாகும். கரிமச் சேர்மத்தில் உள்ள [[கார்பன்]] [[அணு]]வுக்கும் ஒரு உலோகத்திற்கும் இடையில் குறைந்தது ஒரு [[வேதியியல்]] [[ வேதிப் பிணைப்பு|பிணைப்பையாவது]] இப்பிரிவில் அடங்கியுள்ள சேர்மங்கள் பெற்றிருக்கும்<ref name="crabtree">{{cite book | title=The Organometallic Chemistry of the Transition Metals| url=http://www.wiley.com/WileyCDA/WileyTitle/productCd-0471662569.html| author=Robert H. Crabtree| year=2005| pages=560| publisher=Wiley| isbn=978-0-471-66256-3|authorlink=Robert H. Crabtree}}</ref><ref>{{cite web | title = Organometallics Defined | publisher = Interactive Learning Paradigms Incorporated | author = Toreki, R. | url = http://www.ilpi.com/organomet/organometallics.html | date = 2003-11-20}}</ref>
[[கனிம வேதியியல்]] மற்றும் [[கரிம வேதியியல்]] ஆகிய இரு பிரிவுகளின் அம்சங்களையும் உள்ளடக்கியது கரிம உலோக வேதியியல் பிரிவாகும். இந்த அறிவியல் பிரிவைச் சேர்ந்த சேர்ந்த சேர்மங்கள் பரவலாக ஒரு படித்தான [[வினையூக்கி]]களாகப் பயன்படுகின்றன<ref name="Gupta">{{cite book | title = Basic Organometallic Chemistry: Concepts, Syntheses and Applications| authors = Gupta, B. D., Elias, Anil J. | year = 2013| publisher = Universities Press, CRC Press| ISBN=978-81-7371-8748}}</ref>
 
== கரிம உலோகச் சேர்மங்கள் ==
 
”கரிம” என்ற [[முன்னொட்டு|முன்னொட்டைச்]] சேர்ப்பதால் கரிம உலோகச் சேர்மங்கள் வேறுபடுத்தி அறியப்படுகின்றன. உதாரணம், கரிம [[பலேடியம்]] சேர்மங்கள். இத்தகைய உதாரணங்களில் [[இலித்தியம்]] மற்றும் [[செப்பு|தாமிரம்]] உலோகங்களை உள்ளடக்கிய அனைத்து வகை [[கில்மான் கரணி]]கள் அல்லது [[கில்மான் செயலி]]களும் அடங்கும். [[நாற்கார்பனைல்நிக்கல்]] மற்றும் [[பெர்ரோசீன்]] ஆகியன [[தாண்டல் உலோகங்கள்| தாண்டல் உலோகங்களைக்]] கொண்டிருக்கும் கரிம உலோகச் சேர்மங்களாகும். இவை தவிர கரிம [[மக்னீசியம்]] சேர்மங்களான [[அயோடோ(மெத்தில்)மக்னீசியம்]] (MeMgI) [[ஈரெத்தில்மக்னீசியம்]] (Et2Mg) மற்றும் அனைத்து [[கிரிக்னார்டு வினை|கிரின்யார்டு கரணிகள்]]; n- [[பியூட்டைல் இலித்தியம்]] போன்ற கரிம [[இலித்தியம்]] சேர்மங்கள், [[ஈரெத்தில் துத்தநாகம்]] (Et2Zn) மற்றும் [[குளோரோ(ஈத்தாக்சிகார்பனைல்மெத்தில்)துத்தநாகம்]] போன்ற கரிமத் [[துத்தநாகம்|துத்தநாகச்]] சேர்மங்கள் மற்றும் [[இலித்தியம் இருமெத்தில்கியுப்ரேட்டு]] போன்ற கரிமத் [[செப்பு|தாமிரச்]] சேர்மங்கள் ஆகிய அனைத்து வகைச் சேர்மங்களும் கரிம உலோகச் சேர்மங்களேயாகும்.
 
உலோகங்களுக்கும் [[கார்பன்|கார்பனுக்கும்]] நேரடிப் பிணைப்பு ஏதுமில்லாமல் ஆனால், கரிம [[ஈனி]]கள் மூலம் பிணைக்கப்பட்டிருக்கும் சேர்மங்கள் பொதுவாக [[உலோகக்கரிமங்கள்]] என்ற பெயரால் அடையாளப் படுத்தப்படுகின்றன. உலோக பீட்டா- [[இருகீட்டோனேட்டு]]கள், [[ஆல்காக்சைடு]]கள் மற்றும் [[ஈரால்க்கைலமைடு]]கள் முதலியன இவ்வகையில் சேர்க்கப்படுகின்றன.
 
மரபார்ந்த உலோகங்களுடன் [[லாந்தனைடு]]கள், [[ஆக்டினைடு]]கள் மற்றும் அரையுலோகத் தனிமங்களான [[போரான்]], [[சிலிக்கன்]]. [[ஆர்சனிக்]] மற்றும் [[செலினியம்]] போன்ற உலோகங்களும் கரிம உலோகச் சேர்மங்களாக உருவாகும் தன்மையைக் கொண்டுள்ளன. உதாரணம், [[மூவெத்தில் போரேன்]] (Et3B) என்ற கரிமப் போரான் சேர்மம்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கரிம_உலோக_வேதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது