வங்காளதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 90:
 
அராபிய முஸ்லிம் வணிகர்களால் 12ம் நூற்றாண்டளவில் வங்காளப்பகுதியில் இசுலாமிய சமயம் அறிமுகப்படுத்தப்பட்டது. சூஃபி போதகர்கள், மற்றும் அதனையடுத்த முஸ்லிம் ஆட்சி ஆகியவை இப்பகுதி முழுவதும் இசுலாம் பரவ வழி செய்தன.<ref name="eaton">{{cite book |last=Eaton |first=R |year=1996 |title=The Rise of Islam and the Bengal Frontier |publisher=University of California Press |isbn=0-520-20507-3 |oclc=26634922 76881262}}</ref> துருக்கிய தளபதியான பக்தியார் கில்ஜி, 1204ல், சேன வம்சத்தின் லக்‌ஷ்மண் சேன் என்பவரைத் தோற்கடித்து, வங்காளத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினார். இப்பகுதி அடுத்த சில நூறு வருடங்களுக்கு பல சுல்தான்களாலும், இந்து அரசர்களாலும், நிலப்பிரபுக்களாலும் (பரோ-புய்யான்கள்) ஆளப்பட்டன. 16ம் நூற்றாண்டளவில், [[முகலாயப் பேரரசு]] வங்காளத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, டாக்கா முகலாய நிர்வாகத்தின் முக்கிய நிலையமாக உருவானது. 1517இலிருந்து, கோவாவிலிருந்த போர்த்துக்கீச வியாபாரிகள் வங்காளத்துக்கான கடல்வழியைக் கண்டுபிடித்தனர். 1537ல் மட்டும் அவர்கள் குடியேற அனுமதிக்கப்பட்டதோடு, சிட்டகொங்கில் சுங்கச் சாவடிகள் அமைக்கவும் அனுமதிக்கப்பட்டது. 1577ல், முகலாயப் பேரரசரான அக்பர், நிலையான குடியேற்றங்களை அமைக்கவும், தேவாலயங்கள் அமைக்கவும் போர்த்துக்கீசருக்கு அனுமதி வழங்கினார்.<ref name="D'Costa">{{cite book
|last=D'Costa |first=Jerome|year=1986 |title=Bangladeshey Catholic Mondoli (The Catholic Church in Bangladesh) |publisher=Dhaka: Pratibeshi Prakashani}}</ref> ஐரோப்பிய வணிகர்களின் செல்வாக்கு அதிகரித்து, இறுதியில் 1757 பிளாசிப் போரின் பின் [[இந்தியாவில் கம்பெனி ஆட்சி|பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] வங்காளத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.<ref name="baxter">Baxter</ref> [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்திற்குப்]] பின், இதன் அதிகாரம் [[பிரித்தானிய இந்தியப் பேரரசு|பிரித்தானிய முடியின்]] கீழ் வந்ததுடன், பிரித்தானிய வைஸ்ராய் இதன் நிர்வாகத்தலைவராக நியமிக்கப்பட்டார்.<ref>Baxter, pp. 30–32</ref> காலனித்துவ ஆட்சியின்போது, [[தெற்காசியா]] முழுவதும் பெரும் பஞ்சங்கள் ஏற்பட்டன. இவற்றுள் 1943ன் வங்காளப் பெரும் பஞ்சம் காரணமாக 3 மில்லியன் பேர் இறந்தனர்.<ref name="sen">{{cite book |last=Sen |first=Amartya |year=1973 |title=Poverty and Famines |publisher=Oxford University Press |isbn=0-19-828463-2 |oclc=10362534 177334002 191827132 31051320 40394309 53621338 63294006}}</ref>
 
[[File:Lalbager Kella 01.jpg|thumb|லால்பாக் கோட்டை, 17ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஔரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில், டாக்காவில் கட்டப்பட்டது.]]
"https://ta.wikipedia.org/wiki/வங்காளதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது