பிக்குகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
[[தமிழ்நாடு|தமிழகத்தில்]] புத்த பிக்குகள் ஆங்காங்கிருந்த அரசர், வணிகர், செல்வந்தர் முதலானவர்களின் பொருளுதவி பெற்று [[புத்த விகாரம்|புத்த விகாரைகளையும்]], பள்ளிகளையும், சேதியங்களையும், ஆராமங்களையும் ஆங்காங்கே நிறுவினார்கள். மடங்களில் வாழும் பௌத்தத் துறவிகள் மருத்துவம் பயின்று, தம்மிடம் வரும் பிணியாளர்களுக்கு இலவசமாக மருந்து கொடுத்துத் தொண்டு செய்து வந்தார்கள். அன்றியும் தமது பள்ளிகளில் பாடசாலைகளை அமைத்துச் சிறுவர்களுக்குக் கல்வியையுங் கற்பித்து வந்தார்கள். பௌத்தருக்குரிய நன்னாட்களில் நாட்டுமக்களைத் தமது பள்ளிக்கு அழைத்து, மணல் பரப்பிய முற்றங்களில் அமரச் செய்து, திரிபிடகம், புத்த ஜாதகக் கதைகள்' புத்த சரித்திரம் முதலான நூல்களை ஓதிப் பொருள் சொல்லியும் மக்களுக்கு மதபோதனை செய்துவந்தனர். மற்றும் குருடர், செவிடர், முடவர் முதலானவருக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுத்துதவ அறச்சாலைகளை அரசர் செல்வந்தர் முதலானோர் உதவி பெற்று நிறுவினார்கள்.<ref>[https://sites.google.com/site/budhhasangham/Home/mylaiseeni/mylaich5 பௌத்தமதம் தமிழ்நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு]</ref>
 
பெண் புத்த பிக்குகள் ஆரம்ப கால புத்த மதத்தில் இல்லை. பிற்காலத்தில் பெண்களும் புத்த பிக்குகள் ஆயினர். [[மணிமேகலை]] கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த [[கோவலன்]]-[[கண்ணகி]] இணையரின் மகள் ஆவாள். பௌத்த மதம் புகுந்து துறவு பூண்டு, புகார்ப்பட்டினத்துக்கு அருகில் இருந்த சக்கரவாளக் கோட்டத்தைச் சேர்ந்த உலக அறவி என்னும் அம்பலத்தில் இருந்த குருடர், முடவர், பசிநோய்கொண்ட வறியவர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்து ஆதரித்த செய்தியை மணிமேகலை 17ஆம் காதையினால் அறிகிறோம். அன்றியும், மணிமேகலை சிறைக்கோட்டம் சென்று சிறையில் வாடும் மக்களுக்கு உணவு கொடுத்து உண்பிக்க, அதனை அறிந்த சோழ அரசன் அவளை அழைத்து, நான் உனக்குச் செய்யவேண்டுவது என்ன என்று கேட்க, அவள், சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்க வேண்டும் என்று கேட்க, அரசனும் அவ்வாறே சிறைக் கோட்டத்தை அறக்கோட்டமாக்கிக் கொடுத்தான் என்று மணிமேகலை 19ஆம் காதையினால் அறிகிறோம்.
 
==படக்காட்சியகம்==
<gallery widths="145px">
File:Young Indian Buddhist monk in Indian monastery.png|Young Indian Buddhist monk in India.
File:Ajahn Outhai.jpg|A Theravada Buddhist monk in Laos
File:Tianjin Chinese Buddhist Monk.jpeg|A Buddhist monk in China
File:心培和尚.JPG|A Buddhist monk in Taiwan
File:Hengsure.jpg|A Buddhist monk in the U.S. ([[Chinese Buddhism]])
File:Buddhist Monk in Drepung Monastery near Lhasa Tibet Luca Galuzzi 2006.jpg|A Buddhist monk in Tibet
File:Luang Prabang Takuhatsu ルアンパバーン 托鉢僧 DSCF6990.JPG|Monks in [[Luang Prabang]]
File:Watpailom 07.jpg|Monks in Thailand
 
</gallery>
 
== மேற்கோள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிக்குகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது