கலி. பூங்குன்றன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
கவிஞர் என்று திராவிடர் இயக்கத் தோழர்களால் அன்போடு அழைக்கப்படும் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பழைய தஞ்சை மாவட்டம் தற்போதைய நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மா.கந்தசாமி, தனம் ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 1939 ஆகஸ்டு 15ல் பிறந்தார் . இவரின் இயற்பெயர் கலியமூர்த்தி.
{{unreferenced}}
'''கலி. பூங்குன்றன்''' (பிறப்பு: 15 ஆகசுது, 1939) பகுத்தறிவாளர், எழுத்தாளர் செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவராக அறியப்படுகிறார். திராவிடர் கழகத் துணைத்தலைவராகவும் விடுதலை நாளிதழின் பொறுப்பாசிரியராகவும் இருந்து செயல்பட்டு வருபவர். தமிழ்க் கவிதைகளும் எழுதியுள்ளார். எனவே கவிஞர் என்று திராவிடர் கழக அன்பர்கள் இவரைக் கொண்டாடுகிறார்கள்.
[[கால்நடைத் துறையில் 22 ஆண்டுகள் பணியாற்றி, கால்நடை விரிவாக்க அலுவலராகப் பொறுப்பில் இருந்து விருப்ப ஒய்வு பெற்று திராவிடர் கழகத்தில் முழுநேர இயக்கப் பணியில் ஈடுபட்டார். பெரியார் ஈ. வெ. இராமசாமி]], [[மணியம்மையார்]] மற்றும் [[கி. வீரமணி]] ஆகியோர் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருபவர். [[விடுதலை (இதழ்)]]யில் பகுத்தறிவுக் கருத்துகளையும் தமிழின நலம் சார்ந்த எண்ணங்களையும் கட்டுரைகள் வழியாகப் பல ஆண்டுகள் எழுதி வருகிறார். நூல்களும் அவரால் எழுதப்பட்டுள்ளன. மின்சாரம், மயிலாடன் என்னும் புனை பெயர்களில் விடுதலையில் எழுதி வருகிறார். அவருடைய இரண்டு பெண் மக்களுக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார்வைத்துள்ளார்.
பள்ளிப்படிப்பை முடித்து தமிழ்மீது இருந்த பற்றால் புலவர் படிப்பை கல்லூரியில் தொடர விண்ணப்பித்த நிலையில் சாதியை மனதில் வைத்து சரியான காரணம் சொல்லாமலே, கல்லூரியில் பயில இடமளிக்க மறுத்தது தருமை ஆதீன தமிழ்க் கல்லூரி நிர்வாகம் . இளமையிலேயே சிறந்த கவிஞராக விளங்கிய பூங்குன்றனின் கவிதைகள் பல்வேறு திராவிட இயக்க இதழ்களிலும் வெளிவந்தது.பெரியாரைப்பற்றி அவர் எழுதிய பாடல்கள் திராவிடர் இயக்கத்தினரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று பதிவுத்தட்டுகளாகவும், ஒலி நாடாக்களாகவும், குறுந்தகடுகளாகவும் திராவிடர்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
1957ல் சட்ட எரிப்பு போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தார். பல்லாயிரக்கணக்கான தோழர்கள் சட்டத்தை எரித்து சிறைசென்றனர்.காவல்துறை கெடுபிடியைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் சட்ட நகலை தோழர்கள் கொளுத்தினர். அப்போது கவிஞர் இளம் வயதிலேயே ஏராளமான கை பந்தங்களை சுற்றித்தந்து போராட்டத்திற்கு உதவியாக இருந்ததை நினைவு கூறுகிறார் சட்ட எரிப்பு வீரர் கோ.அரங்கசாமி..
நாகை மாவட்டம் கீழ்வேளுர் பகுதியில் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட தந்தை பெரியார் "ஊருக்கு ஒரு கலியமூர்த்தி கிடைத்தால் என் பணி சுலபமாகிவிடும்" என்றுபேசியது குறிப்பிடத்தக்கது.
1968 ல் கவிஞருக்கும் நாகூர் நாத்திகன் சின்னத்தம்பியின் மூத்த மகள் வெற்றிச்செல்விக்கும் மயிலாடுதுறையில் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் திருமணம் நடைபெற்றது. தந்தை பெரியார் அவர்கள் பேசுகையில் "கலியமூர்த்தி இந்த இயக்கத்திற்கும், அம்மாவிற்கும் (மணியம்மையார்) செல்லப்பிள்ளை.இயக்க நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் தனது உத்தியோகத்தையும் பொருட்படுத்தாமல் வந்து விடுவார். இனி அப்படி இருக்கக்கூடாது. அரசாங்க உத்தியோகத்தில் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்." என்று அறிவுரை வழங்கினார்.
1960 களில் தந்தை பெரியார் அவர்கள் தஞ்சைப் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அவரோடு பயணமாகிவிடுவார். 1970 துவக்கத்தில் கவிஞர் பொறுப்பேற்று நடத்திய மயிலாடுதுறை பகுத்தறிவாளர் கழகத்தின் செயல்பாடுகள் இன்றளவும் பாராட்டப்பெற்றதாகும்.
1976 ல் "மிசா" . திராவிர் கழகப் பொதுச்செயலாளர் கி.வீரமணி அவர்கள் கைது செய்யப்படுகிறார். இயக்கத்திற்கும், விடுதலை இதழுக்கும் கடுமையான நெருக்கடி.கவிஞர் தனது அரசுப்பணியை சென்னைக்கு மாற்றிகொண்டு பெரியார் திடலிலேயே தங்கி விடுதலையில் பணியாற்றிகொண்டிருந்த காலம். பலபேர் பெரியார் திடலுக்கே வர அஞ்சிய நேரம். விடுதலை தலையங்கம் இல்லாமலே சில நாட்கள் வெளிவருகிறது. அன்னை மணியம்மையார் அவர்கள் கவிஞரை அழைத்து இன்னும் எத்தனை நாளைக்கு விடுதலை தலையங்கம் இல்லாமல் வரப்போகிறது.தலையங்கத்தை நீயே எழுது என்று ஆணையிட்டார்கள். தலைவர் பெரியார், மற்றும் ஆசிரியர் எழுதிய தலையங்கப் பகுதியை தாம் எழுதுவதா என எழுதத்தயங்கினார் கவிஞர். தொடர்ந்து சில நாட்கள் விடுதலை தலையங்கம் இல்லாமலேயே வெளிவருவதைக்கண்டு கவிஞரை மீண்டும் நேரில் அழைத்து தலையங்கத்தை எழுதுகிறாயா? விடுதலையை நிறுத்தவா? என்று கடிந்து கொண்டார் மணியம்மையார். அன்று தான் கவிஞரின் முதல் தலையங்கம் வெளிவந்தது.
. ஆசிரியர் வீரமணி அவர்களின் தந்தையாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதை கேள்வியுற்று சிறையிலிருந்த அன்னை மணியம்மையார் அவர்களும், ஆசிரியர் வீரமணி அவர்களும் பரோலில் கடலூர் வந்தனர். அப்போது கடலூரில் கூட்டுறவுத்துறையில் பணியாற்றி வந்த கவிஞரின் சகோதரர் கிருட்டினமூர்த்தி அவர்களை அழைத்துவருமாறு அரசுத்துறை அதிகாரியாக பணியாற்றிவந்த அறிவுக்கரசு (தற்போதைய திராவிடர்கழக செயலவைத் தலைவர்) அவர்களிடம் அன்னையார் சொல்ல அவர் தனது சைக்கிளிலேயே ஆசிரியரின் வீட்டுக்கு அழைத்து வந்தார். கழகத்தோழர்கள் மற்றும் குடும்ப நலன்களை விசாரித்து விடுதலை தொடர்ந்து பார்க்கிறீர்களா? எனகேட்டு "இந்த நேரத்தில் கலியமூர்த்தியின் பணியை மறக்க முடியாது. அவருக்கு இந்த இயக்கம் என்ன செய்யப்போகிறதோ?" என உருக்கத்துடன் குறிப்பிட்டார்.
பின் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களின் வேண்டுகோளுக்கினங்க தனது அரசுப்பணியைத் துறந்து முழு நேரப் பெரியார் பணியாளராகிவிட்டார் கவிஞர்.
திராவிடர்கழக தலைமை நிலைய செயலாளர், பொதுச்செயலாளர், துணைத்தலைவர் என திராவிடர்கழக தலைவர் கி.வீரமணி அவர்களால் நியமிக்கப்பட்டதோடு, விடுதலையின் பொறுப்பாசிரியராகவும் இருந்து பல ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறார்.
* திராவிடர் கழகத்தின் அணுகுமுறை
* சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர் ஏன்?
* தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும் (தொகுப்பு)
* பிள்ளை-யார்?
* இயக்க வரலாற்றில் இராமாயண எதிர்ப்பு
* பெரியார் ஒரு வாழ்க்கை நெறி
* தந்தை பெரியார் அறிவுரை 100
* மார்கிஸ்டுகளின் சிந்தனைக்கு
வைத்தியருக்கு தேவை வைத்தியம்(ராமதாசுக்கு பதில்)
* செங்கற்பட்டில் சுயமரியாதைச் சூறாவளி
* மனித வாழ்க்கைக்கு தேவை நாத்திகமா? ஆத்திகமா?
* சமுதாய இயக்கமா ஆர் எஸ் எஸ் ?
* சாமியார்களின் திருவிளையாடல்
* அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
* ஒற்றைப்பத்தி பாகம்-1
* ஒற்றைப்பத்தி பாகம்-2
* ஒற்றைப்பத்தி பாகம்-3
* ஒற்றைப்பத்தி பாகம்-4
* பார்ப்பனப் புரட்டுக்குப் பதிலடி
என காலத்தின் தேவைகருதி வெளியிடப்பட்ட இவரது நூல்கள் தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டவை.
கவிஞரின் குடும்பத்தில் 1950க்குப் பிறகு நடைபெற்ற திருமணங்கள் பெரும்பாலும் சுயமரியாதைத் திருமணங்களாகவே நடைபெற்றுவந்திருக்கிறது என்பதோடு 30க்கும் மேற்பட்ட சாதி,மத மறுப்புத்திருமணங்கள் நடைபெற்றிருப்பதும் சிறப்பான ஒன்றாகும்.
 
==பின்புலமும் பணிகளும்==
 
மயிலாடுதுறையில் பிறந்த இவரின் இயற்பெயர் கலியமூர்த்தி. கால்நடைத் துறையில் 22 ஆண்டுகள் பணியாற்றி, கால்நடை விரிவாக்க அலுவலராகப் பொறுப்பில் இருந்து விருப்ப ஒய்வு பெற்று திராவிடர் கழகத்தில் முழுநேர இயக்கப் பணியில் ஈடுபட்டார்.
[[பெரியார் ஈ. வெ. இராமசாமி]], [[மணியம்மையார்]] மற்றும் [[கி. வீரமணி]] ஆகியோர் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருபவர். [[விடுதலை (இதழ்)]]யில் பகுத்தறிவுக் கருத்துகளையும் தமிழின நலம் சார்ந்த எண்ணங்களையும் கட்டுரைகள் வழியாகப் பல ஆண்டுகள் எழுதி வருகிறார். நூல்களும் அவரால் எழுதப்பட்டுள்ளன. மின்சாரம், மயிலாடன் என்னும் புனை பெயர்களில் விடுதலையில் எழுதி வருகிறார். அவருடைய இரண்டு பெண் மக்களுக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார்.
 
==எழுதிய நூல்கள்==
 
* திராவிடர் கழகத்தின் அணுகுமுறை
* சாதி தீண்டாமை ஒழிப்பு அறப்போர் ஏன்?
* தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும் (தொகுப்பு)
* பிள்ளை-யார்?
* இயக்க வரலாற்றில் இராமாயண எதிர்ப்பு
* பெரியார் ஒரு வாழ்க்கை நெறி
* தந்தை பெரியார் அறிவுரை 100
* மார்கிஸ்டுகளின் சிந்தனைக்கு
* செங்கற்பட்டில் சுயமரியாதைச் சூறாவளி
* மனித வாழ்க்கைக்கு தேவை நாத்திகமா? ஆத்திகமா?
* சமுதாய இயக்கமா ஆர் எஸ் எஸ் ?
* சாமியார்களின் திருவிளையாடல்
* அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
* ஒற்றைப்பத்தி பாகம்-1
* ஒற்றைப்பத்தி பாகம்-2
* ஒற்றைப்பத்தி பாகம்-3
* ஒற்றைப்பத்தி பாகம்-4
* பார்ப்பனப் புரட்டுக்குப் பதிலடி
 
==சான்று==
 
திராவிடர் கழகக் குறிப்புகள்
"https://ta.wikipedia.org/wiki/கலி._பூங்குன்றன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது