காந்தாரத்தில் புத்தர் சிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
==விபரங்கள்==
[[File:Seated Buddha, British Museum.jpg|thumb|200px|left|இருக்கும் புத்தர் சிலையின் இன்னொரு தோற்றம்]]
இச்சிலை இளகல் தீப்பாறையில் செதுக்கப்பட்டதனால், விரல் நகங்கள் வரையான நுணுக்கமாகச் செதுக்க முடிந்தது. நியம நிலைகளுள் ஒன்றாகக் கருதப்படும் இச்சிலையில் நிலை தர்மச்சக்கர முத்திரையையைக் காட்டுகிறது. ஞானம் பெற்று, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசிக்கு அருகில் சாரநாத்தில் தனது முதலாவது உபதேசத்தை வழங்கிய பின்னரே புத்தர் இத்தகைய ஒரு நிலையை மேற்கொண்டார்.புத்தர் கிமு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தாலும், கிபி இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டில் செய்யப்பட்ட இச்சிலை தொடக்ககாலச் சிலையாகும். இவ்வாறான சிலைகள் கிபி முதலாம் நூற்றாண்டு வரை உருவாக்கப்படவில்லை. புத்தர் இறந்து முதல் நான்கு நூற்றாண்டுகள் புத்தர் அவரது காலடி போன்ற குறியீடுகளாலேயே காட்டப்பட்டார்.<ref name="bbc"/>[
 
இப்புத்தர் அரசிருக்கை அல்லது ஒரு மேடையில் இடப்பட்ட மெத்தையில் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இருக்கைக்கு முன்னால் தலையில் முடியும் ஒளிவட்டமும் பொருந்திய போதிசத்வர்களும், இரு புறமும் முழந்தாழிட்ட நிலையில் ஆணும் பெண்ணுமான இரு உருவங்களும் உள்ளன. இவ்விருவரும், இச்சிலையை உருவாக்குவதற்கான நிதியை வழங்கியவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.<ref>[http://www.britishmuseum.org/research/search_the_collection_database/search_object_details.aspx?objectid=225497&partid=1&searchText=RRI5353&fromADBC=ad&toADBC=ad&numpages=10&orig=%2fresearch%2fsearch_the_collection_database.aspx&currentPage=1 Collection database, British Museum]</ref>
"https://ta.wikipedia.org/wiki/காந்தாரத்தில்_புத்தர்_சிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது