உருசிய மரபுவழித் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
விரிவாக்கம்
வரிசை 22:
 
உருசிய மரபுவழித் திருச்சபை தற்போது [[சியார்சியா]], [[ஆர்மீனியா]] நீங்கலான முன்னைய சோவியத் ஒன்றியத்தில் நீண்ட காலமாக இருந்தவர்களினதும், அவர்களின் இனப் பின்புலத்தை கருத்திற் கொள்ளாது, மரபுவழிக் கிறித்தவர்கள் மீது அதன் பிரத்தியேக அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. ஆயினும், இந்நிலைப்பாடு [[எசுத்தோனியா]], [[மல்தோவா]] போன்ற நாடுகள் மட்டில் சர்ச்சைக்குரியதும், அதன் விளைவாக மரபுவழித் திருச்சபையின் அதிகார வரம்புகள் எசுத்தோனியா அப்போஸ்தலிக்க மரபுவழித் திருச்சபை, பெஸ்சரேபியவின் குருக்களின் தலைமைப்பீடம் ஆகியவற்றில் சமாந்தரமாகக் காணப்படுகின்றது. இது [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசில்]] உள்ள மரபுவழிக் கிறித்தவர்கள், சப்பானிய மரபுவழித் திருச்சபை என்பனவற்றின் மீது சமய அதிகார உரிமையைச் செலுத்துகிறது. [[பெலருஸ்]], [[எசுத்தோனியா]], [[லாத்வியா]], [[மல்தோவா]], [[உக்ரைன்]] ஆகியவற்றிலுள்ள உருசிய மரபுவழித் திருச்சபைக் கிளைகள் 1990 முதல் பல்வேறு அளவிலான சுய ஆட்சியைக் கொண்டுள்ளன.
 
உருசிய மரபுவழித் திருச்சபையும் அமெரிக்காவிலுள்ள மரபுவழித் திருச்சபையும் ஒன்றாகக் கருத முடியாது. உருசிய மறைபரப்புனர்கள் [[அலாஸ்கா]]வில் ([[உருசியப் பேரரசு|உருசியப் பேரரசின்]] பகுதியாக இருந்தபோது) 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சேவையாற்றியபோது [[வட அமெரிக்கா]]வில் அமெரிக்காவிலுள்ள மரபுவழித் திருச்சபை இருந்தது.
 
அதேபோல், ஐக்கிய அமெரிக்காவின் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தை]] தலைமையகமாகக் கொண்ட உருசியாவிற்கு வெளியேயுள்ள உருசிய மரபுவழித் திருச்சபையும் (வெளிநாட்டு உருசிய மரபுவழித் திருச்சபை எனவும் அழைக்கப்படுகிறது) உருசிய மரபுவழித் திருச்சபையும் ஒன்றாகக் கருத முடியாது. மாஸ்கோ திருச்சபை உறைவிடத்தை [[சோவியத் ஒன்றியம்|பொதுவுடமைவாத உருசியா]] அங்கிகரிக்க மறுத்த காரணத்தினால், வெளியே இருந்த உருசிய சமுகத்தினர்களால் 1920 களில் உருசியாவிற்கு வெளியேயுள்ள உருசிய மரபுவழித் திருச்சபை நிறுவப்பட்டது. இரண்டு திருச்சபைகளும் மே 17, 2007 அன்று அங்கீகரிக்கப்பட்டன. தற்போது, உருசியாவிற்கு வெளியேயுள்ள உருசிய மரபுவழித் திருச்சபை சுய ஆட்சியுள்ளதாகவுள்ளது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_மரபுவழித்_திருச்சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது