"உருசிய மரபுவழித் திருச்சபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,593 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎வரவாறு: விரிவாக்கம்
(விரிவாக்கம்)
(→‎வரவாறு: விரிவாக்கம்)
இப்போது உருசிய மரபுவழித் திருச்சபை என வளர்ந்துள்ள கிறித்தவ சமூகம், [[கருங்கடல்|கருங்கடலின்]] வடக்கு கரையையொட்டிய கிரேக்க குடியேற்றங்கள், சீத்தியா (மத்திய [[ஐரோவாசியா]] பகுதிகள்) ஆகிய பகுதிகளுக்கு சென்றதாக நம்பப்படும் திருத்தூதர் [[அந்திரேயா (திருத்தூதர்)|அந்திரேயாவினால்]] நிறுவப்பட்டதாக பாரம்பரியமாக கூறப்பட்டு வருகிறது. பாரம்பரியக் கதை ஒன்றின்படி, [[கீவ்]]வின் மேலதிக பகுதி வரைக்கும் சென்று பாரிய கிறித்தவ நகரத்தின் உருவாக்கம் பற்றி முன்னறிவித்தார் என்று சொல்லப்படுகிறது.<ref>{{cite web|url = http://www.chrysostom.org/firstcalled/life.html | title = Life of the Apostle Andrew| publisher = Chrysostom | last = Damick | first = Andrew S.|accessdate= 2007-06-25}}</ref><ref>{{cite web| url = http://www.orthodox.clara.net/baptism_rus.htm | title = The Baptism of Russia and Its Significance for Today | work = Orthodox | publisher = Clara | last = Voronov | first = Theodore| date= 2001-10-13 | accessdate = 2007-06-25 | archiveurl = //web.archive.org/web/20070418065947/http://www.orthodox.clara.net/baptism_rus.htm | archivedate = 2007-04-18}}</ref> கீவ்விலுள்ள புனித அந்திரேயா பேராலயம் அமைந்துள்ள இடத்தில்தான் அவர் சிலுவையில் அறையப்பட்டார் எனப்படுகிறது.
 
கி.பி முதலாம் நூற்றாண்டின் இறுதியில், கிழக்கு [[சிலாவிக் மக்கள்|சிலாவிக்]] நிலங்கள் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசின்]] கலாச்சார செல்வாக்கின் கீழ் வந்தது. 863–869 இல், பைசாந்தியத் துறவிகளும் கிரேக்க மசிதோனியாவிலிருந்தவர்களுமான புனித சிறிலும் புனித மெதோடியசும், முதன்முறையாக [[விவிலியம்|விவிலியத்தின்]] பகுதிகளை [[பண்டைய மசிதோனிய மொழி]]க்கு மொழிபெயர்த்தனர். இது [[கிழக்கு ஐரோப்பா]], [[பால்கன் குடா]], தென் உருசிய சிலாவிக் மக்களின் கிறித்தவ மயமாக்கலுக்கு பங்களிப்புச் செய்தது. முதலாவது கிறித்தவ ஆயர் கொண்தாந்திநோபிளிலிருந்து நொவ்கொரொட்டுக்கு இறைமுதுவர் போத்தியுஸ் அல்லது இறைமுதுவர் இக்னாட்டியஸ் மூலம் கி.பி. 866-867 காலப்பகுதியில் அனுப்பப்பட்டார்.
 
10 ஆம் நூற்றாண்டின் மத்தியில் கிறித்தவ சமூகம் கிவ் மக்களிடம் பைசாந்திய கிரேக்க குருக்களின் தலைமையின் கீழ் இருந்தபோது [[அஞ்ஞானி]] மதம் அப்பகுதிகளில் செல்வாக்குச் செலுத்தியது. முதலாவது கிவ்வின் ஆட்சியாளர் ஒல்கா 945 அல்லது 957 காலப்பகுதியில் கிறித்தவத்திற்கு மாறினார். அவருடைய பேரன் பெரிய விளாடிமிர் கீவ்வியன் ரூசை கிறித்தவ நாடாக மாற்றினார்.
 
இதன் விளைவாக கீவ்வின் முதலாம் விளாடிமிர் பைசாந்திய கிரேக்க முறை கிறித்தவத்தை அலுவலக ரீதியாக 988 இல் உள்வாங்கினார். இதுவே உத்தியோகபூர்வ உருசிய மரபுவழித் திருச்சபையின் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது. 1988 இல் திருச்சபை இதன் மில்லேனிய விழாவைக் கொண்டாடியது.
 
== உசாத்துணை ==
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1949018" இருந்து மீள்விக்கப்பட்டது