பௌத்தநாத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox religious building | building_name = பௌத்தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:56, 7 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பௌத்தநாத் (நேபாளி: बौद्धनाथ) (Baudhanath), நேபாள நாட்டின் திபெத்திய பௌத்தர்களின் பெரிய கோள வடிவ விகாரையில் அமைந்த உயரமான நினைவுத் தூண் ஆகும். பௌத்தநாத் கி பி நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பௌத்தநாத் மடாலயம், நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டூ நகரத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் இமயமலையில் அமைந்துள்ளது.[1]வானளாவிய உயரத்தில் காணப்படும், இப்பழைமையான பௌத்தநாத் மடாலயத்தின் நினைவுத்தூண் உலகின் பெரியதாகும். பௌத்தநாத் மடாலயத்தை, உலக தொல்லியற்களங்களில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் அவையின், யுனேஸ்கே நிறுவனம், 1979இல் அறிவித்ததுது.[2]

பௌத்தநாத்
बौध्दनाथ
பௌத்தநாத் மடாலயம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்காட்மாண்டு, நேபாளம்
சமயம்பௌத்தம்
Official name: காட்மாண்டு சமவெளி
வகை:பண்பாட்டுக் களம்
வரையறைகள்:iii, iv, vi
கொடுக்கப்பட்ட நாள்:1979 (3rd session)
மேற்கோள் எண்.121
அரசு: நேபாளம்
பௌத்தநாத் நினைவுத்தூணின் கண்கள்
பௌத்தநாத் மடாலயம், நேபாளம்

அமைவிடம்

காட்மாண்டு நகரத்தின் வடகிழக்கே நான்கு கிலோ மீட்டர் தொலைவில், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.[3]

வரலாறு

லிச்சாவி குடியரசின் மன்னர் சிவதேவன் (கி பி 590-604) காலத்தில் பௌத்தநாத் மடாலயத்தை நிறுவியதாக கோபாலாராஜவம்சாவளி (கோபு) கூறுகிறார். நேபாள மன்னர் மானதேவன் (கி பி 464-505) ஆட்சி காலத்தில் கட்டியதாகவும் கூறப்படுகிறது.[4][5] கி பி 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 16வது நூற்றாண்டில் முற்பகுதியில் இவ்விடத்தில் நடந்த அகழ்வராய்ச்சியில், கண்டெடுக்கப்பட்ட மன்னர் அம்சுவர்மாவின் (கி பி 605-621) எலும்புகள் தோண்டி எடுக்கும் போது, இப்பௌத்தநாதர் மடாலயம் கண்டெடுக்கப்பட்டதாக, திபெத்திய ஆதாரங்கள் ஆதாரங்கள் கூறுகிறது.[6] திபெத்திய பேரரசர், திர்சோங் டெட்சான் (ஆட்சி காலம்: 755 - 797) ஆட்சி காலத்தில் இப்பௌத்த மடாலயத்தை நிறுவியதாக கருதப்படுகிறது.[7]

2015 நேபாள நிலநடுக்கம்

 
2015 நேபாள நிலநடுக்கத்தில் சேதமடைந்த பௌத்தநாத்தை சீர் செய்யும் பணி

2015 நேபாள நிலநடுக்கத்தில் பௌத்தநாத் மடாலயத்தின் மேற்கூறையின் நினைவுத் தூண் முற்றிலும் சேதமடைந்தது. தற்போது சேதமடைந்த மேற்கூறையும், தூணையும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Fables of Boudhanath and Changunarayan". nepalnews.com. Archived from the original on 2007-02-09. பார்க்கப்பட்ட நாள் 2007-07-30.
  2. Kathmandu Valley
  3. http://www.distancesfrom.com/distance-from-Kathmandu-to-boudhanath-Nepal/DistanceHistory/295001.aspx
  4. Shaha, Rishikesh. Ancient and Medieval Nepal. (1992), p. 123. Manohar Publications, New Delhi. ISBN 81-85425-69-8.
  5. Ehrhard, Franz-Karl (1990). "The Stupa of Bodhnath: A Preliminary Analysis of the Written Sources." Ancient Nepal - Journal of the Department of Archaeology, Number 120, October–November 1990, pp. 1-6.
  6. Ehrhard, Franz-Karl (1990). "The Stupa of Bodhnath: A Preliminary Analysis of the Written Sources." Ancient Nepal - Journal of the Department of Archaeology, Number 120, October–November 1990, pp. 7-9.
  7. The Legend of the Great Stupa and The Life Story of the Lotus Born Guru, pp. 21-29. Keith Dowman (1973). Tibetan Nyingma Meditation Center. Dharma Books. Berkeley, California.

வெளி இணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Boudhanath
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் படிக்க

  • The Legend of the Great Stupa and The Life Story of the Lotus Born Guru. Keith Dowman. (1973). Tibetan Nyingma Meditation Center. Dharma Books. Berkeley, California.
  • Psycho-cosmic Symbolism of the Buddhist Stūpa. Lama Anagarika Govinda. (1976) Dharma Books. Berkeley, California. ISBN 0-913546-35-6; ISBN 0-913546-36-4 (pbk).


"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌத்தநாத்து&oldid=1949456" இலிருந்து மீள்விக்கப்பட்டது