விக்கிப்பீடியா:கிரந்த எழுத்துப் பயன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *எழுத்துப்பிழை திருத்தம்* ண-->ணி
சி keep it general or remove it
வரிசை 16:
**ஒலிப்புத்துல்லியம் கூடுதலாக இருக்க வேண்டும் எனில் ஃஆ, ஃகா, ஃஇ ஃகி என்று எழுதலாம். Hitler = இட்லர், ஆனால் ஃகிட்லர் என்றோ ஃஇட்லர் என்றோ எழுதலாம்.
* (ரவியின் கருத்து) ஹ சொல்லின் இடையில் வரும் போது மட்டுமே க ஆகும். எடுத்துக்காட்டுக்கு, மஹாத்மா - > மகாத்மா, மோஹன் - மோகன். சொல்லின் முதலில் ஹகரத்தோடு ஒட்டி வரும் உயிர் ஒலியை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஹோட்டல் -> ஓட்டல், ஹல்வா - > அல்வா, ஹிந்து - > இந்து.
 
* (செல்வாவின் கருத்து) இடையே வரும் பொழுதும் Magaathmaa, Mogan என்றுதான் வரும், ஆனால் அந்த மெலிந்த ககரத்தில் மிகச்சிறிதளவு காற்றொலி வரும் (பேச்சு வழக்கில்), ஆனால் அது ஹ ஆகாது. காகம், பாகம் என்னும் சொற்களை kaagam, paagam என்றுதான் ஒலித்தல் வேண்டும். உற்று நோக்கினால் மிகச்சிறிதளவு காற்றொலி வருவதைக் காணலாம். kaaham, paaham என்று முழு காற்றொலியாகக் கூறுவது கொச்சை ஒலிப்பு.
 
*சில இடங்களில், தேவை இருப்பின் ஆய்த எழுத்தைப் பயன்படுத்தலாம். ரஹ்மான் என்பதைப் பொதுவாக ரகுமான் என்று எழுதுவது வழக்கம். ஆனால் ரஃமான் என்றும் ரஃகுமான் என்றும் எழுதலாம். Uhuru என்பதை உகுரு என்றும் உஃகுரு என்றும் எழுதலாம்.