முத்துசுவாமி தீட்சிதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி unreliable source
வரிசை 46:
==இறுதிக்காலம்==
குகன் திருவருளால் அழியாப்புகழ் பெற்றுள்ள தீட்சிதர் 1835ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகை அன்று தன் தம்பியும், சிஷ்யர்களும் மீனாம்பிகை பெயரில் அமைந்த ''"மீனலோசனி பாப மோசனி"'' என்ற கிருதியைப் பாடப் பாடக் கேட்டுக் கொண்டு, ஆனந்தக் கண்ணீர் வடித்து, இரு கைகளையும் தலை மேல் குவித்து ''சிவே பாஹி.. சிவே பாஹி ஓம் சிவே'' என்றார். உடனே அவரது ஆவி ஒளி வடிவாகப் பிரிந்தது. தற்சமயம் இவரது சமாதி [[எட்டயபுரம்|எட்டயபுரத்தில்]] அமைந்துள்ளது.
 
நுாற்றி எண்பது ஆண்டுகளுக்கு முன்... அந்த சம்பவம் தீபாவளியன்று நடந்தது.
எட்டயபுரத்து மக்கள் தீபாவளியைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்தனர். எட்டயபுரம் மன்னர் குமாரவெங்கடேச பூபதி, தீபாவளியன்று தன் சமஸ்தானத்துப் பட்டத்து யானைக்கு காலையில் 'கஜ' பூஜை செய்வது வழக்கம். பாகன், எட்டயபுரத்திலுள்ள பெரிய தெப்பக்குளத்தில் இருக்கும் யானைப்படித்துறைக்கு அழைத்து சென்றான்.
 
வழக்கமாக நீரில் இறங்கி துதிக்கையால் நீர் பீய்ச்சி விளையாடும் காங்கேயன் யானை, அன்று நீரில் இறங்க மறுத்தது. பாகன் நீரில் இறங்கக் கட்டளையிட்டான். காங்கேயன் நீரில் இறங்காமல் வெறித்துப்பார்த்தவாறு நின்றது. பின், குளத்தில் கிழக்குப் பக்கமாக ஓடி சுடுகாட்டில் போய் படுத்துக் கொண்டு பிளிறியது.
 
பாகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை? இது அபசகுனமாகுமே! அதுவும் இன்று
தீபாவளி. கவலையுடன் பாகன் ஓட்டமும், நடையுமாக அரண்மனை சென்று, அரசரிடம் நடந்ததைக் கூறினான். திடுக்கிட்ட மன்னர் குமாரவெங்கடேச எட்டப்ப பூபதி 'இது கெட்ட சகுனமாகத் தெரிகிறதே; என் சமஸ்தானத்துக்கோ என் மகளுக்கோ ஏதேனும் விரும்பத்தகாதது நடக்கப் போகிறதோ' என்று புலம்பினார்.
 
மனைவியின் அறிவுரை :மன்னரின் மனைவி... 'ராஜா, பதட்டப்பட வேண்டாம்; நமது சமஸ்தானத்து வித்வான், உங்கள் குரு முத்துசுவாமி தீட்சிதரிடம் போய் இது பற்றி கேளுங்கள்' என்றவுடன் 'நல்ல யோசனை!' என்ற மன்னர் எட்டையபுரம் மாட வீதியில் கடைசி வீட்டில் தங்கி இருந்த தீட்சிதரைப் பார்க்க, பல்லக்கை தவிர்த்து நடந்து வந்தார்.
 
தீபாவளித் திருநாள் என்பதால் சமஸ்தான வித்வான், முத்துசாமி தீட்சிதர், அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்து மாடத்தில் இருக்கும் காசி அன்ன லட்சுமிக்கு விளக்கேற்றி, அவர் அம்பாள் மேல் இயற்றிய பாடல்களை ராகத்துடன் சிஷ்யர்களை பாடச் சொன்னார்.
சிஷ்யர்கள் பாடிக்கொண்டிருந்தனர். முத்துசுவாமி தீட்சிதர் கண் மூடி தியானத்திலிருந்தார்.
 
அப்போது பதட்டத்துடன்தீட்சிதர் முன் நின்றார் மன்னன், எட்டப்பன்.மன்னருக்கு ஆறுதல்
கண்மூடி தியானத்திலிருந்த தீட்சிதர் மெல்ல கண் திறந்து, எட்டப்ப மன்னரை சற்று நோக்கினார். எட்டப்ப மன்னர் தேடி வந்த நோக்கம் ஒரு நொடியில் தீட்சிதருக்குப் புரிந்தது.
 
'எட்டப்ப மன்னரே..! உன் மனக்குழப்பம் அறிகிறேன். உன் சமஸ்தானத்து மக்களுக்கோ, உன் குடும்பத்தாருக்கோ, உனக்கோ எந்தவித தீங்கும் நேரா; பட்டத்து யானை அரண்மனைக்கு திரும்பி வரும்' என்றார். மனம் லேசான மன்னர், மனக்கவலை நீங்கி அரண்மனைக்கு திரும்பினார்.பாகனும் மன்னரிடம் 'பட்டத்து யானை அமைதியாகி கொட்டடிக்கு வந்து விட்டது' என்ற மகிழ்ச்சியான செய்தியை கூறினான்.
 
தீட்சிதரின் கடைசி நிமிடம் :மன்னர் சென்றவுடன் முத்துசுவாமி தீட்சிதர் தன் சிஷ்யர்களிடம்... 'இன்று சதுர்தசி, தேவிக்கு உகந்த நாள். எனவே தேவியின் மீதான கீர்த்தனங்களை பாடுங்கள் என்று கூற, சிஷ்யர்கள் தேவி மீதான 'மீனாஷி மேமுதம் தேஹி' என்று பாடினர்.
 
சுருதியின் அனுபல்லவியில்'மீனலோசனிபாசமோசனி'மானலோசனிபாசலோசனி
என்ற வரியை மீண்டும், மீண்டும் பாடச் சொன்ன தீட்சிதர், கண்மூடி கேட்டுக் கொண்டே, வீட்டின் மாடத்தில் அன்னலட்சுமி முன் ஏற்றிய விளக்கின் ஜோதியோடு இரண்டறக் கலந்தார்.
 
தீட்சிதர் மறைவு எட்டப்ப மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த எட்டப்பர், விரைந்து தீட்சிதர் இல்லம் சென்று உடலைப் பார்த்து, 'உனக்கோ, உன் சமஸ்தானத்து மக்களுக்கோ, உன் குடும்பத்தாருக்கோ ஒன்றும் நேராது என்று கூறினீர்களே... உங்களை நான் மறந்து விட்டேனே...' என்று அழுதார்.
 
மன்னர் எட்டப்பர், தீட்சிதரின் உடலை தகுந்த வைதீக முறைப்படி, எட்டயபுரம் பஸ் நிலையம் சமீபம் இருக்கும் 'அட்டக்குளம்' கரையில் அடக்கம் செய்தார். பின் ஒரு சமாதி கட்டி வழிபாடு செய்தார். தற்போது நல்ல பொலிவுடன் இச்சமாதி, மண்டபமாக உள்ளது.சாஸ்திரிய சங்கீதம் கற்பவர்கள், ஒரு முறையேனும் அங்கு சென்று, தீட்சிதரின் சமாதி யின் முன் அமர்ந்து, இரண்டு நிமிடம் அவரின் கீர்த்தனையைப் பாடி, மானசீகமாக ஆசீர்வாதம் பெற வேண்டும்.
 
அமிர்தவர்ஷினியும் ஆனந்தமழையும் முத்துசாமி தீட்சிதர் எட்டயபுரம் வந்தது தனிக்கதை. அவரது தம்பி பாலுசாமி தீட்சிதருக்கு (எட்டயபுரம் சமஸ்தானத்தில் வித்வானாக இருந்தார்)
திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தார் எட்டயபுரம் மன்னர். இதை அறிந்த முத்துசாமி தீட்சிதர் தம்பியைக் காணவும், திருமணத்தில் கலந்து கொள்ளவும், எட்டயபுரம் வந்தார். வரும் வழியில் மழையின்றி கரிசல் நிலங்கள் பாளம், பாளமாக வெடித்திருந்ததையும், நீர் நிலைகள் வறண்டு இருந்ததையும் கண்டு வருந்தினார் முத்துசாமி தீட்சிதர்.
 
இதனை தொடர்ந்து 'ஆனந்த மருதார்கர்ஷினி! அம்ருதவர்ஷினி!'என உருகிப் பாட கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது. மகிழ்ச்சி அடைந்த மன்னன், முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய அரண்மனையின் வித்வானாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதனால் தான்
எட்டயபுரத்தில் தன் இறுதிக் காலம் வரை வாழ்ந்தார்.
 
காசியில் தீட்சிதர் இருக்கும் பொழுது, கங்கையில் ஒரு வீணை கிடைத்தது. அதன் யாழி வழக்கத்துக்கு மாறாக மேல் நோக்கி இருந்தது. மேலும் அதில் ராமா என்ற சொல் செதுக்கப்பட்டிருந்தது.
 
==தீட்சிதரின் கீர்த்தனைகள்==
"https://ta.wikipedia.org/wiki/முத்துசுவாமி_தீட்சிதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது