சாலிமார் பூங்கா, இலாகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வரலாறு: *விரிவாக்கம்*
→‎கட்டிடவியல்: *விரிவாக்கம்* *விரிவாக்கம்*
வரிசை 25:
==கட்டிடவியல்==
சாலிமார் பூங்கா நீள்சதுர [[இணைகரம்|இணைகர]] வடிவில் அமைந்துள்ளது; சுற்றிலும் நுணுக்கமான கலைவண்ணம் மிகுந்த செங்கற் சுவரால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா ''சார் பாக்'' பூங்காவை ஒட்டிய கருத்தியலில் கட்டமைக்கப்பட்டது. வடக்கு தெற்காக 658 மீட்டர்கள் நீளமும் கிழக்கு மேற்காக 258 மீட்டர்கள் நீளமும் கொண்டது. [[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்|யுனெசுக்கோவின்]] 1972இல் இயற்றிய உலக பண்பாட்டு, இயற்கை மரபிடங்களைப் பாதுகாக்கும் கொள்கைக்கேற்ப 1981இல் [[இலாகூர் கோட்டை]]யுடன் சாலிமார் பூங்கா [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டது.
===பூங்காவின் மூன்று நிலைத் தளங்கள்===
ஒன்றிலிருந்து ஒன்று 4–5 மீட்டர்கள் (13-15 [[அடி (அளவை)|அடிகள்]]) உயரமுடைய மூன்று நிலைகளில் தெற்கு வடக்காக அமைக்கப்பட்ட தளங்களில் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று தளங்களுக்கானப் பெயர்கள்:
[[File:Shalimar Gardens, Lahore (Faiz Baksh Tarrace- 2nd tarrace of the Garden).jpg|thumb|300px|''பையிசு பக்‌ஷ்'' என்று பெயரிடப்பட்டுள்ள நடுநிலைதளப் பூங்கா]]
* மேல்மாடி அல்லது மூன்றாம்நிலை தளம் ''ஃபாரா பக்‌ஷ்'' ( ''இன்பம் வழங்கி'' எனும் பொருள்படும்)
* நடுமாடி அல்லது இரண்டாம்நிலை தளம் ''ஃபைசு பக்‌ஷ்'' (''நல்லது வழங்கி'' எனும் பொருள்படும்)
* கீழ்தளம் அல்லது முதல்நிலை தளம் ''அயத் பக்‌ஷ்'' ( ''வாழ்வு வழங்கி'' எனும் பொருள்படும்)
===நீரூற்றுகள்===
அடித்தளத்திலிருந்தும் கால்வாய்களிலிருந்தும் 410 நீரூற்றுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; இவை பளிங்கு குளங்கில் நீரை இறைக்கின்றன. இந்த நீரமைப்பு மற்றும் வெப்பச்சலன பொறியியல் முகலாயப் பொறியாளர்களின் புத்தாக்கத் திறனுக்குச் சான்றுகளாக உள்ளன; இன்றைய அறிவியலாளர்களுக்கு இதன் நுட்பம் இன்னமும் புரிபடவில்லை. இந்த நீரூற்றுகளின் நீரோட்டத்தால் சுற்றுப்புற பகுதிகள் குளுமையாக வைத்திருக்கின்றன; {{convert|120|°F|°C}} வரை வெப்பநிலை நிலவும் இலாகூரில் சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் இதமாக உள்ளது. இந்த நீரூற்றுகளின் பரவல் பின்வருமாறு உள்ளது:
 
* மேல்நிலை தளத்தில் 105 நீரூற்றுகள்.
* நடுநிலை தளத்தில் 152 நீரூற்றுகள்.
* கீழ்நிலை தளத்தில் 153 நீரூற்றுகள்.
* அனைத்துமாக, பூங்காவில் 410 நீரூற்றுகள் உள்ளன.
 
பூங்காவில் 5 நீரோடைகள் அமைக்கப்பட்டுள்ளன; இவற்றில் ''பெரும் பளிங்கு நீரோடையும்'' ''சாவன் பாதூன்'' நீரோடையும் குறிப்பிடத்தக்கன.
 
==காட்சிக்கூடம்==
"https://ta.wikipedia.org/wiki/சாலிமார்_பூங்கா,_இலாகூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது