இங்கிலாந்தின் முதலாம் சார்லசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
தந்தையின் இறப்பிற்குப் பின்னர், முதலாம் சார்லசு 1625 இல் மூன்று இராச்சியங்களுக்கும் அரசனாக முடிசூடினார். சார்லசு மன்னரின் சிறப்புரிமை அதிகாரத்தைக் கட்டுப்படுத்த இங்கிலாந்து நாடாளுமன்றம் முனைந்ததை அடுத்து சார்லசிற்கும், நாடாளுமன்றத்திற்கும் இடையில் மோதல் வெடித்தது. அரசர்களின் தெய்வீக உரிமையில் நம்பிக்கை கொண்டிருந்த சார்லசு, தனது மனசாட்சியின் படி ஆட்சி முடியும் என நினைத்தார். அரசரின் பல கொள்கைகளை நாடாளுமன்றத்தினர் எதிர்த்தனர், குறிப்பாக நாடாளுமன்ற அனுமதி இன்றி வரி வசூலித்தல், மற்றும் ஒரு கொடுமையான, கேட்பாரற்ற அரசரின் நடவடிக்கைகள் அவருக்கு எதிராகத் திரும்பின. [[கத்தோலிக்க திருச்சபை|உரோமன் கத்தோலிக்க]]ப் பெண்ணை மணந்தமை, மற்றும் அவரது கத்தோலிக்கம் சார்பான கொள்கைகள் கரஞ்சீர்திருத்தச் சமயவாதிகள் (பியூரித்தான்கள்), மற்றும் கால்வினீஸ்து சீர்திருத்தவாதிகள் அவர் மீது அவநம்பிக்கை கொள்ள வைத்தன.{{sfn|Gregg|1981|pp=130–131}} ரிச்சார்டு மொன்டேகு, வில்லியம் லோட் போன்ற உயர் திருச்சபைத் தலைவர்களை அவர் ஆதரித்தாலும், [[முப்பதாண்டுப் போர்|முப்பதான்டுப் போரில்]] [[சீர்திருத்தத் திருச்சபை|சீர்திருத்தவாதிகளின்]] சக்திகளுக்கு உதவத் தவறினார்.{{sfn|Gregg|1981|p=131}} இசுக்கொட்லாந்து திருச்சபையினர் [[இங்கிலாந்து திருச்சபை|ஆங்கிலிக்க]] நடைமுறைகளைப் பின்பற்ற சார்ல்சு கட்டாயப்படுத்தியமை ஆயர்களின் போருக்கு வழிவகுத்தது. இவை அனைத்தும், ஆங்கிலேய, இசுக்கொட்லாந்து நாடாளுமன்றங்களை வலுப்படுத்தவும், மற்றும் அவரது சொந்த வீழ்ச்சிக்கும் மட்டுமே உதவியது.
 
1642 முதல், [[இங்கிலாந்து உள்நாட்டுப் போர்|இங்கிலாந்து உள்நாட்டுப் போரின்]] போது சார்ல்சு ஆங்கிலேய, இசுக்கொட்லாந்து நாடாளுமன்றங்களின் இராணுவத்தினருடன் போரில் ஈடுபட்டார். இப்போரில் 1645 ஆம் ஆண்டில் தோல்வியடைந்ததை அடுத்து, சார்ல்சு இசுக்கொட்லாந்துப் படையினரிடன் சரணடைந்தார். அவர்கள் அவரை இங்கிலாந்து நாடாளுமன்றத்திடம் கையளித்தனர். கடத்தியவர்களின் [[அரசியல்சட்ட முடியாட்சி]]க் கோரிக்கைக்கு சார்ல்சு இணங்க மறுத்தார். 1647 நவம்பரில் சிறையில் இருந்து தப்பி வெளியேறினார். ஆனாலும், [[வைட்டுத் தீவு|வைட்டுத் தீவில்]] அவர் மீண்டும் பிடிபட்டார். 1648 இறுதியில் [[ஆலிவர் கிராம்வெல்]]லின் புதிய முன்மாதிரியான இராணுவம் இங்கிலாந்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. சார்ல்சு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு 1649 சனவரியில் பொது மக்கல் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார். இங்கிலாந்தில் முடியாட்சி அகற்றப்பட்டு, [[பொதுநலவாய இங்கிலாந்து]] என்ற புதிய குடியரசு அறிவிக்கப்பட்டது. ஆனாலும், 1660 இல் முடியாட்சி மீண்டும் கொண்டு வரப்பட்டு முதலாம் சார்லசுவின் மகன் இரண்டாம் சார்லசு அரசரானார்.
 
== குறிப்புகள் ==
{{notelist}}
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_முதலாம்_சார்லசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது