சுலூப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

728 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("‘’’சுலூப்’’’ (sloop) என்பது,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
‘’’சுலூப்’’’ (sloop) என்பது, முன் – பின் [[பாயமைப்பு]]டன் கூடிய ஒற்றைப் பாய்மரம் கொண்ட பாய்க்கப்பல். சுலூப்புக்கள் ஒரேயொரு [[தலைப்பாய்|தலைப்பாயை]] மட்டுமே கொண்டிருக்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தலைப்பாய்கள் இருந்தால் அக்கப்பல் “[[கட்டர் (கப்பல்)|கட்டர்]]” என அழைக்கப்படும். இவ்வாறான கப்பல்களில் பாய்மரம் சுலூப்புகளில் இருப்பதிலும் பின்னோக்கித் தள்ளியிருக்கும். முரணாக, ஐக்கிய அமெரிக்காவில், ஒரு சுலூப்புக்கு ஒன்று, இரண்டு அல்லது மூன்று தலைப்பாய்கள் பாய்மரத்துக்கு முன்புறம் இருக்கக்கூடும். அங்கு பாய்க்கப்பல்களுக்கு “கட்டர்” என்னும் பெயர் பொதுவாகப் பயன்படுவதில்லை.
 
நவீன பாய்க்கப்பல்களில் பொதுவாகக் காணப்படுவது [[பெர்முடா பாயமைப்பு]]க் கொண்ட சுலூப் ஆகும். பொதுவாக நவீன சுலூப்களில், பாய்மரத்துக்கு முன்புறம் பொருத்தப்படும் ஒற்றைத் [[தலைப்பாய்|தலைப்பாயுடன்]] முதன்மைப் பாய், பாய்மரத்துக்குப் பின்னால் இருக்கும் வளையில் பொருத்தப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1964385" இருந்து மீள்விக்கப்பட்டது