ரக்சா பந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
==ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுவதற்கான காரணம்==
 
மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, அவரின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீயசக்திகளிடமிருந்தும், பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்றபோது அவரின் மானத்தைக் கிருஷ்ணர் காப்பாற்றினார். திரௌபதி கிருஷ்ணரின் கையில் புடவையை கிழித்து கட்டிய நிகழ்வே இன்று ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப் படுகிறது.
 
ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுவது தொடர்பான மற்றொரு வரலாற்று சம்பவமும் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள சித்தூர் நாட்டை கர்ணாவதி என்ற ராணி ஆட்சி புரிந்து வந்தார். குஜராத்தை ஆண்ட சுல்தான் பகதூர் ஷா சித்தூர் நாட்டை கைப்பற்ற அந்த நாட்டின் மீது போர் தொடுத்தார். இதை கேள்விப் பட்ட ராணி முகலாய பேரரசர் ஹுமாயுன் அவர்களுக்கு ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறை அனுப்பினார். பாச உணர்ச்சிக் கொண்ட ஹுமாயுன் ராணியையும் அவரது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற முற்பட்டார். ஆனால் அதற்குள் ராணியை வென்று வெற்றிக்கொடி நாட்டினார் பேரரசர் பகதூர் ஷா.
"https://ta.wikipedia.org/wiki/ரக்சா_பந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது