திருமலை நாயக்கர் அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*நீக்கம்*
No edit summary
வரிசை 1:
[[File:Madurai Nayak Palace Collage.jpg|thumb|திருமலை நாயக்கர் அரண்மனை]]
'''திருமலை நாயக்கர் அரண்மனை''' அல்லது '''திருமலை நாயக்கர் மகால்''' என அழைக்கப்படும் [[அரண்மனை]], [[மதுரை]]யை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான [[திருமலை நாயக்கர்|திருமலை நாயக்கரால்]] கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் [[கட்டிடம்]], புகழ் பெற்ற [[மதுரை மீனாட்சியம்மன் கோயில்|மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து]] சுமார் 2 [[கிலோமீட்டர்]] தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக் [[கட்டிடக் கலைஞர்]] ஒருவரால் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது.
 
 
== அமைப்பு ==
இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த [[இந்தோ சரசனிக் பாணி]] என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப் பட்ட இந்த அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரமாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அக்காலத்தில் இந்த அரண்மனை இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது ரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.
 
இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், [[அந்தப்புரம்]], [[பூங்கா]]க்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.
வரிசை 43:
* [http://archive.is/20121205202306/ramvinothbabu.blogspot.com/2011/03/blog-post.html ஸ்ரீவில்லிப்புத்தூரில் திருமலை நாயக்கரின் மகால்]
*[https://www.youtube.com/watch?v=O6j3YvdF2Y0 திருமலை நாயக்கர் அரண்மனை-காணொளிக் காட்சி]
*http://tamil.nativeplanet.com/madurai/attractions/thirumalai-nayakkar-palace/
 
{{மதுரை மாவட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/திருமலை_நாயக்கர்_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது