நீர்மட்டம் (கப்பல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
 
==நோக்கம்==
கப்பல் போதிய அளவு [[எச்சமட்டம்|எச்சமட்டத்தைக்]] (நீர்மட்டத்துக்கும் கப்பலின் முதன்மைத் தளத்துக்கும் இடையிலான தூரம்) கொண்டிருப்பதை உறுதி செய்வதே சுமைக்கோட்டின் நோக்கமாகும். வணிகக் கப்பல்களில் எச்சமட்டம், தொடர்ச்சியான மேல்தளத்திலிருந்து நீர்மட்டத்துக்கான தூரம் ஆகும். இது கப்பலுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சமட்டச் சான்றிதழில் குறிப்பிட்டிருப்பதைக் காட்டிலும் குறைவாக இருக்கக்கூடாது. சில விதிவிலக்கான சூழல்களைத் தவிர<ref>Statutory Instruments 1998 No. 2241 The Merchant Shipping (Load Line) Regulations 1998 Sections 5(1) and 5(3)</ref> எல்லா வணிகக் கப்பல்களிலும் அவற்றின் இரண்டு பக்கங்களிலும் சுமைக்கோட்டுச் சின்னம் வரையப்பட்டிருக்கும். நிறப்பூச்சு அழிந்து போனாலும் தெரியக்கூடியவகையில் இந்தச் சின்னம் நிரந்தரக் குறியாக இருத்தல் வேண்டும். கப்பலில் அளவுக்கு மீறிய சுமை ஏற்றப்பட்டுள்ளதா என எவரும் அறிந்துகொள்வதற்கு சுமைக்கோடு உதவுகிறது. வகைப்பாட்டுச் சங்கம் கப்பலொன்றில் சுமைக்கோட்டுக்கான சரியான இடத்தைக் கணிப்பதுடன் அதை உறுதிப்படுத்துகிறது. இது தொடர்பான சான்றிதழ்களையும் இச்சங்கமே வழங்குகிறது.1870ல் சாமுவேல் பிளிம்சால் என்பார் இக்குறியீட்டு முறையைக் கண்டுபிடித்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நீர்மட்டம்_(கப்பல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது