நீர்மட்டம் (கப்பல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
19ம் நூற்றாண்டின் சுமையேற்றம் தொடர்பான பரிந்துரைகள் 1835ல் பிரித்தானிய மற்றும் வெளிநாட்டுக் கப்பல்களுக்கான லொயிடின் பதிவு நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டது. இப்பரிந்துரைகள் கப்பல் உரிமையாளர்கள், கப்பலோட்டுவோர், உறுதிகொடுப்போர் ஆகியோரின் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து உருவானது. லாயிடின் விதி என அறியப்பட்ட இது 1880 வரை பரவலாகப் புழக்கத்தில் இருந்தது.
 
அளவுமீறிய சுமை ஏற்றப்பட்டதன் காரணமாகப் பல கப்பல்கள் இழக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1860ல் ய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாமுவேல் பிளிம்சால் இந்த விடயத்தில் கவனம் செலுத்தினார். இதன் காரணமாக 1872ல் கடற்பயணத்துக்குதவாத கப்பல்கள் தொடர்பான அரச ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. 1876ல் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய இராச்சிய வணிகக் கப்பல்கள் சட்டம் சுமைக்கோட்டுக் குறியீட்டைக் கட்டாயமாக்கியது. ஆனாலும், இக்குறியின் அமைவிடம் சட்டத்தின் மூலம் 1894 வரை தீர்மானிக்கப்படவில்லை. 1906ல் பிரித்தானியத் துறைமுகங்களுக்கு வரும் வெளிநாட்டுக் கப்பல்களில் சுமைக்கோட்டைக் கட்டாயமாக்கிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1930 சுமைக்கோட்டு ஒப்பந்தப்படி பொதுவான பன்னாட்டு சுமைக் கோட்டு விதிகள் உருவாக்கப்பட்டன.
 
1966ல் 1930ன் விதிகளை மீளாய்வு செய்து சுமைக்கோடு தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தம் இலண்டனில் உருவாக்கப்பட்டது. இது பின்னர் 1971, 1975, 1979, 1983, 1995, 2003 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது எனினும் இவையெதுவும் பயன்பாட்டுக்கு வரவில்லை
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நீர்மட்டம்_(கப்பல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது