இடையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
இவர்கள் தம்மைப் பற்றிக் கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள் கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே.யாதவர்கள் வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள். கிருஷ்ண பகவானைப் பல்வேறு பெயர்களால் வழிபடுகின்றனர். அவர்கள் சனிக் கிழமையைப் புனித நாளாகக் கருதுகின்றனர். ‘கோகுலாஷ்டமி’தான் அவர்களுக்கு மிக முக்கியமான திருநாள். அதற்கு மறுநாள் நடக்கும் உறியடி உதசவத்தின்போதுகிருஷ்ணரின் குழந்தைப்பருவ லீலைகளாகிய வெண்ணெய் திருடுதல், வெண்ணெய் மற்றும் தயிர்ப்பானைகளை உடைத்தல் முதலியவற்றில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
 
கிருஷ்ணர்’கிருஷ்ணர் அவர்களுடைய குலத்தில் வளர்ந்தவர் என்பதால், யாதவர்களை மற்ற சமூகத்தார் அன்பு பாராட்டி நடத்துவதாகக் கூறப்படுகிறது.முன்பு, கிருஷ்ண ஜெயந்தியின் போது மஞ்சத் தண்ணீர் ஊற்றுவது இவர்களிடையே பிரசித்தம். முறை மாப்பிள்ளை, மாமன், மச்சான், முறைப்பெண் ஆகியோட் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்கிறார்கள். தென்மாவட்டங்களில் இன்றைக்கும் யாதவர் இனமக்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இரவு நேரங்களில் விளைச்சல் நிலங்களில் ஆடுகளை நிறுத்தி ‘கிடை’ போடும் வழக்கம் சிலரிடம் இன்றைக்கும் உண்டு. இதனால் நிலத்திற்கு மிகப்பெரிய சத்துக்களை வழங்குகிறார்கள்.
 
யாதவர்களில் சிலர் நிலச்சுவான்தார்களாக இருக்கிறார்கள்.ஒரு காலத்தில் எருதுகளை அடக்கி வீரத்தைக் காட்டிய்பின்பே, மணமகன் மணமகளை மணக்க முடியும் என்ற நிலை இருந்தது. இன்று அது வழக்கொழிந்து போய்விட்டது.முன்பு வயதுக்கு வந்த பெண்கள் பல்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சீக்கிரமே திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். இப்போது அந்தக் கட்டுப்பாடு வேகமாக மறைந்து வருகிறது.சிலர் அக்காள் மகளைத் திருமணம் செய்கின்றனர். சில பகுதிகளில் வாழும் யாதவர்கள் அத்தை மகள், மாமன் மகளை மட்டுமே மணக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.மணமக்கள் கலந்து பழகுவதற்காகவும், மணமகளின் வெட்கத்தை மாற்றும் பொருட்டும் திருமணத்தின்போது சில கேலி விளையாட்டுகள் நிகழ்த்தப்படுகின்ரன. தன்ணீர் நிறைந்த பானையில் ஒரு தங்க மோதிரத்தைப் போட்டு, அதை மணமக்களை எடுக்கச் சொல்கிறார்கள். மணமக்கள் வீட்டிற்குள் நுழையும்போது மணமகனின் சகோதரி, அவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘ஆண் குழந்தை வேண்டுமா, பெண்குழந்தை வேண்டுமா’ என்று கேட்கிறாள். அதற்கு பதில் சொன்னபிறகே வழி விடுகிறாள். இது போன்ற பல சடங்கு சம்பிரதாயங்கள் இன்று இவர்களிடையே வழக்கொழிந்து போய்விட்டன.
"https://ta.wikipedia.org/wiki/இடையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது